2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சரத்குமார் மற்றும் டெலிகாம் அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
அதன்பிறகு கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை 4-வது முறையாக சி.பி.ஐ. கோர்ட்டு நிராகரித்தது.நேற்று ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதன் முறையாக 5 கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளான யுனிடெக் சஞ்சய்சந்திரா, ஸ்வான் டெலிகாம் வினோத் கோயங்கோ, கவுதம் தோஷி, ரிலையன்ஸ் சுரேந்திர பிபாரா, ஹரிநாயர் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 7 மாதங்களாக திகார் சிறையில் இருந்த 5 அதிகாரிகளும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனால் இந்த வழக்கில் சிறையில் இருக்கும் மற்றவர்களும் விடுதலையாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனிமொழி, சரத்குமார், ஆசிப்பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகிய 5 பேர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை டிசம்பர் 1-ந்தேதி நடைபெறும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார். ஆனால் நேற்று 5 அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதால் தங்களது ஜாமீன்களை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனிமொழி உள்பட 5 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று அவசர மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்காததால் தனக்கும் ஜாமீன் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் உள்ளார் கனிமொழி.
No comments:
Post a Comment