ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவிக்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி
பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின்
நிதிநிலை குறித்த கண்காணிப்பு குழுவிற்கான தலைமைப்பதவி காலியாக
இருந்தது.இந்த பதவியை பிடிப்பதற்காக பிற நாடுகள் போட்டியிட்ட போதிலும்
இந்தியா சீனா இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் இந்தியாவின்
சார்பில் கோபிநாத் என்பவர் கலந்து கொண்டார்.
சீனாவின் சார்பில் இந்தியாவுக்கான சீன தூதர் ஷாங் இஸ்கான் போட்டியிட்டார். இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஆதரவாக 160 வாக்குகளும், சீனாவிற்கு 77 வாக்குகளும் கிடைத்தன.எதிர்வருகிற 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள கோபிநாத் அடுத்து வரும் ஐந்தாண்டுகள் வரை நிதிநிலை குறித்த கண்காணிப்பு குழுவிற்கான தலைமைப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment