அமெரிக்கா தனது படை பலத்தை பெருக்கும் விதமாக ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்க கூடிய திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணை ஒன்றை சோதனை செய்து பார்த்துள்ளது. ஏ.எச்.டபிள்யூ. என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை ஹவாய் என்னுமிடத்தில் வைத்து ஏவப்பட்டது.
அது பசிபிக் சமுத்திரத்தின் மீது தென்மேற்கு பகுதியை நோக்கி பறந்து சென்று பின் 2500 மைல்கள்
தொலைவிலுள்ள மார்ஷல் தீவில் தனது இலக்கான க்வாஜலின் என்னுமிடத்தை அடைந்தது. 12 அடி நீளமும் 900 கி.கிராம் எடையும் கொண்டதுடன் 3500 பாரன்ஹீட் வெப்பத்தை தாங்க கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஏவுகணை 15 தொன் எடை கொண்ட எட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்று தாக்க வேண்டிய தளத்திலிருந்து 200 அடி உயரத்தில் இருந்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும். உலகின் எந்த இலக்கையும் புறப்பட்ட 60 நிமிடங்களில் தாக்கும் வலிமை பெற்றுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் தனது ஏவுகணைகள் மற்றும் படைகளை அமெரிக்கா வெளிநாடுகளில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தனது ராணுவத்தில் இதனை சேர்க்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment