Nov 22, 2011

பாகிஸ்தானுக்கு மார்ச்சில் வருவேன்:முஷாரப் அறிவிப்பு



 2012 ஆண்டு மார்ச் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு வந்து விடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்த முன்னாள் தளபதி பர்வேஸ் முஷாரப். 2001ல் இருந்து 2009 வரை பாகிஸ்தான் அதிபராக இருந்த அவர், 2009ல் பதவி விலகியதும் அவர் மீது புதிய அரசு பல வழக்குகளை தொடர்ந்தது.


அவற்றில் சிக்காமல் தவிர்க்க லண்டனுக்கு தப்பி சென்றார் முஷாரப். அங்கு தங்கியிருந்தபடி பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கினார். விரைவில் தாயகம் திரும்பி மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதாக முஷாரப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில், சிந்து மாநிலத்தின் ஐதராபாத் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் முஷாரப் நேற்று போனில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘பாகிஸ்தானில் தீவிரவாதம், வறுமை, பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மோசமான காலகட்டத்தை பாகிஸ்தான் கடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் சரி செய்தாக வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி பாகிஸ்தான் திரும்ப உறுதியாக உள்ளேன்’ என்றார்.

No comments: