கட்டணம் உயர்ந்திருப்பதால் சென்னையில் பேருந்துகள் காலியாக செல்கின்றன: விஜயகாந்த்
பேருந்து
கட்டணம் மற்றும் பால் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம்
மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஏழை மற்றும் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக ஏழை குழந்தைகள் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டணம் இருமடங்கு உயர்ந்திருப்பதால் சென்னையில் பேருந்துகள் காலியாக செல்கின்றன என்றார்.
தேமுதிக உண்ணாவிரதம் பொதுமக்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்னு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் உண்ணாவிரதத்திற்கு காவல் துறை ஏற்ற இடத்தை வழங்கவில்லை என்றும் கூவம் அருகே இடத்தை ஒதுக்கியதால் தே.மு.தி.க அலுவலகத்திலேயே உண்ணாவிரதம் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த போலிசாவது லஞ்சம் கொடுக்காமல் வேலையில் சேர்ந்ததாக கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உண்ணாவிரதம் குறித்து மாலை 4 மணிக்கு பேட்டி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையை விட மதுரையில் அதிகமானோர் பங்கேற்பு
பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று (24.11.2011) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
இதேபோல் மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அக்கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். மதுரை சொந்த ஊர் என்பதாலும், ஜெயலலிதாவுக்கு ஒரு மாஸ் காட்ட வேண்டும் என்பதாலும், மதுரையில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என்றும் தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார். அதன்படி இன்று காலை தேமுதிக மாநில பொருளாளர் சுந்தரராஜன் எம்எல்ஏ தலைமையில் தேமுதிகவினர் சுமார் 3 ஆயிரம் பேர் உண்ணாவிரதம் இருந்தனர். தென் மாவட்ட எம்எல்ஏக்கள் உண்ணாவிரத்தில் பங்கேற்றனர். இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்று பேசியவர்கள் பெரும்பாலும் அதிமுகவை விமர்சித்து பேசினார்கள். விஜயகாந்த் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சென்னை கோயம்பேட்டில் ஆயிரத்து ஐநூறு பேரில் இருந்து இரண்டாயிரம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். உண்ணாவிரதத்திற்கு சென்னையை விட மதுரையில் அதிகமான தேமுதிகவினர் குவிந்துள்ளனர்.துள்ளார்.
No comments:
Post a Comment