Nov 25, 2011

அமெரிக்கா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறது அமெரிக்கா


செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை ஆராய்வதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா வைக்கிங் திட்டம் மூலம் 2 முறை செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியது. அப்போது செவ்வாயில் பாறை படிமங்கள் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண்டுகளாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய விண்கலத்தை உருவாக்கினர். ரூ.12,500 கோடி செலவில் உருவான ஆளில்லா இந்த விண்கலம் அட்லாஸ்&5 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது. கென்னடி விண்வெளி மையத்தின் கபே கனவெரல் விமானப்படை தளத்தில் இரு ந்து சனியன்று காலை செலுத்துகின்றனர்.

No comments: