உச்ச நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமா? என்று கனிமொழி வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் பிரைவேட் நிறுவன இயக்குநர் ஆசிப் பால்வா மற்றும் சஞ்சீவ் அகர்வால் ஆகிய 6 பேரின் ஜாமீன் மனு டிசம்பர் 1-ம் தேதி விசாரிக்கப்படும் என முன்பு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிகள் 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடர்ந்து, தங்கள் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரிக்குமாறு 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
கனிமொழியின் ஜாமீனுக்காக வழக்கறிஞர் அல்தாஃப் அகமது வாதிட்டபோது, "உச்ச நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என முறையிடுகிறீர்களா? உயர் நீதிமன்றம் மற்ற விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாமா?" என்று உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஷாலி கேள்வி எழுப்பினார்.
கனிமொழி உள்பட 6 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், உணவு இடைவேளைக்குப் பிறகும் வாதம் தொடர்கிறது.

No comments:
Post a Comment