வெளிநாட்டு வேலை: விதிகள் கடுமையாகும்அமைச்சர் வயலார் ரவி
வளைகுடா நாடுகளுக்கு, வீட்டு வேலை செய்யச் செல்லும் பெண்களின் குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர்
வயலார் ரவி, ராஜ்யசபாவில் இது குறித்து கூறியதாவது: வளைகுடா நாடுகளில், வீட்டு வேலை செய்யும் பெண்கள் பாலியல் கொடுமை, சம்பளம் கொடுக்காதது, விடுமுறை கொடுக்காதது, நீண்ட வேலை நேரம் போன்ற துன்பங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, ஐக்கிய அரபு எமிரேடு, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், பக்ரைன், மலேசியா, லிபியா, ஜோர்தான், ஏமன், சூடான், புருனே, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, சிரியா, லெபனான், தாய்லாந்து ஆகிய 17 நாடுகளுக்கு, வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் குடியேற்ற விதிமுறை கடுமையாக்கப்படும்.பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள், இந்திய தூதரகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். அதுமட்டுமல்லாது, வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு, "ப்ரீ பெய்டு' மொபைல்போன் அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, வயலார் ரவி கூறினார்.

No comments:
Post a Comment