Jan 13, 2012

ஜனவரி 15ம் தேதி : கொண்டாடுவோம் பென்னிகுக் பிறந்த நாளை !

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......

கார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..

 பெரியாறு அணை விவகாரத்தில்  மக்கள் நடத்திய போராட்டத்தால் தமிழகம் முழுவதும்  பென்னி குக் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் பொங்கலன்று அவரது 171வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பிறந்த தினத்தை  சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

லண்டனை சேர்ந்த ராணுவ ஜெனரல் ஜான் பென்னிகுக், சாரா தம்பதிகளின் மகன் பென்னிகுக். ஜான் பென்னிகுக் இந்தியாவில் ராணுவ ஜெனரலாக பணியாற்றினார். அப்போது 1841 ஜனவரி 15ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பென்னிகுக் பிறந்தார். இவர் லண்டன் பொறியியல் கல்லூரியில் ராயல் இன்ஜினியரிங் படித்து ராணுவத்தில் பணியாற்றினார். 1858ல் இந்தியாவிற்குவந்து பணி செய்தார். 1874 முதல் முல்லை பெரியாறு அணை சர்வே பணி முழுவதுமாக ஏற்றார்.
தனது மனைவியின் சொத்துக்களை ^42 லட்சத்திற்கு விற்றும், தமிழக விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தும் அணையை கட்டினார். 

திட்டமிட்டப்படி 1895ல் கட்டி முடிக்கப்பட்ட பெரியாறு அணையை அதே ஆண்டு அக்டோபர் 10ம் தேதி சென்னை கவர்னர் லார்டு வென்லாக் திறந்து வைத்தார். 
தண்ணீர் அணை வழியாக செல்வதை கண்டு பென்னிகுக் ஆனந்த கண்ணீர் வடித் தார். இவரின் விடா முயற்சியால் தென்னகத்தில் உள்ள 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 5 மாவட்டத்திற்கு குடி தண்ணீராகவும் பெரியாறு அணை திகழ்கிறது.

அவரது பெயரை தெருவுக்கு, குழந்தைகளுக்கு சூட்டி, பொங்கலன்று அவரது படத்தை வைத்து பொங்கலிட்டு தென் மாவட்ட மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

Jan 9, 2012

இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி

இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி 

                                
              ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

சென்னை புத்தக கண்காட்சி விழாவில் அப்துல்கலாமை கவர்ந்த புத்தகங்கள்

 சென்னை புத்தக கண்காட்சி விழாவில் அப்துல்கலாமை கவர்ந்த புத்தகங்கள் 

 புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தால், கற்பனைத் திறன் அதிகரிக்கும். நல்ல கற்பனைத் திறன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். சமீபத்தில், இரண்டு புத்தகங்கள் படித்தேன். அவை என்னை வெகுவாக கவர்ந்தன. முதல் புத்தகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியர் தொகுத்த, "உழுதவன் கணக்கு' என்ற புத்தகம். இன்றைய விவசாயம் எவ்வாறு வரையறுக்கப்பட வேண்டும்,    
                             முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறுகிறார் எனது பத்தாவது வயதில், 1941 ம் வருடம் என்னுடைய சகோதரர், முஸ்தபாகான் அவருடைய நண்பர், எம்.ஜி.ஆர்.மாணிக்கம் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அவர்கள், இருவரும் கம்யூனிசம் பற்றி அடிக்கடி விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது, கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அங்கு, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கும். அங்கு, தான் என்னுடைய வாசிப்புப் பழக்கம் ஆரம்பமானது. குறிப்பாக, காரல்மார்க்ஸ், சுத்தானந்த பாரதியார் பற்றிய புத்தகங்கள் படித்தேன். அப்போது, ஆரம்பித்த வாசிப்புப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.

Jan 8, 2012

முல்லைப் பெரியாறு பிரச்னை: வைகோ பேட்டி.

முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக துவக்கத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் வைகோ. அவரிடம் ஒரு சூடான பேட்டி.
”1999ல் மாநிலங்களுக்கிடையிலான நதிகளை நாட்டுடமையாக்குவது பற்றிய தனிநபர் மசோதாவை முதலில் நான் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. மு ல்லைப் பெரியாறு அணைப்பிரச்னையை வலியுறுத்தி 2004-ல் ஆயிரம் கி.மீக்கு மேல் நடைபயணம் போனேன். மாநாட்டை நடத்தினோம். தொடர்ந்து ஊர்வலம், உண் ணாவிரதம் என்று பலவிதமான போராட்டங்களை நடத்தினோம்’’ என்று தன்னுடைய பங்கை மென்மையாகச் சொல்லிக்கொண்டு போனவரிடம் கேள்விகளை அடுக்கியதும் படிப்படியாக உஷ்ணமானது உரையாடல்.

எனது இந்தியா (10)-கோட்டையில் விழுந்த குண்டு



எனது இந்தியா!( செண்பகராமன் பிள்ளை ) - எஸ். ராமகிருஷ்ணன்.




இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில் நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன் பிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை, திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான்

எந்த மின் நிலையம் இந்தியாவுக்குத் தேவை?


அண்மையில் தென் கொரியாவின் குவான்​கிஜு நகரில் நடந்தது ஒரு மாபெரும் மாநாடு. உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் அங்கே விவாதித்தது, எதிர்கால உலகத்துக்குத் தேவையான மாற்று (எரி)சக்தி பற்றி. குறிப்பாக, நீர் மற்றும் அனல் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் தட்டுப்பாடு கூடிக்கொண்டே வரும் நிலையில்... சூரிய ஒளி உள்ளிட்ட வேறு என்னென்ன வகைகளில் மின்சாரத்தைப் பெறுவது கட்டுப்படியாகவும் சாத்தியமாகவும் இருக்கும் என்பதே விவாதத்தின் முக்கியப் பொருள்! 

மலேசியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஏ.வி.எம். ஹாஜா, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். 'சூரிய - காற்று - பூமி மறுசுழற்சி சக்திகள்' என்பது இவர் அங்கே சமர்ப்பித்த ஆய்வுரை. கூடங்குளம் உட்பட உலகின் பல பாகங்களிலும் அணு உலைகளுக்கு எதிராகக் கவலைகள் நிலவி வரும் நிலையில், இந்தியாவின் இப்போதைய வளர்ச்சி நிலை, எதிர்காலத் தேவைகள் மற்றும் மின்சார உற்பத்தியில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இந்தக் கட்டுரையில் அவர் விவாதித்து உள்ளார்.