Nov 26, 2011

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை

தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கீழ்கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் கீழ்கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழக நிதி அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். கடந்த 2006-ம் ஆண்டு அவர் மீதும், அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ராஜா, அவருடைய மனைவி சசிகலாவதி,மற்றொரு தம்பி பாலமுருகன், அவருடைய மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Nov 25, 2011

அமெரிக்க உளவாளிகள் 12 பேர் ஈரானில் அதிரடி கைது;ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி


ஈரானில் அமெரிக்காவின் உளவாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி தெரிவித்தார். அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை நிறுவும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். ஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி கழகமும் கூறிவருகிறது. ஆனால், ஈரான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து பொருளாதார தடைகளை பல நாடுகள் விதித்துள்ளன.பரபரப்பான சூழ்நிலையில், ஈரான் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை முடிவு செய்யும் கமிட்டி நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. இதில் செல்வாக்கு மிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி பங்கேற்றார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,அமெரிக்காவை சேர்ந்த சிஐஏ உளவாளிகள் ஈரானுக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதுவரை 12 சிஐஏ ஏஜென்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். ஆனால் அவர்கள் எங்கு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது எங்கிருக்கின்றனர் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

அமெரிக்கா செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புகிறது அமெரிக்கா


செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா என்பதை ஆராய்வதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்கா வைக்கிங் திட்டம் மூலம் 2 முறை செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியது. அப்போது செவ்வாயில் பாறை படிமங்கள் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண்டுகளாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய விண்கலத்தை உருவாக்கினர். ரூ.12,500 கோடி செலவில் உருவான ஆளில்லா இந்த விண்கலம் அட்லாஸ்&5 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகிறது. கென்னடி விண்வெளி மையத்தின் கபே கனவெரல் விமானப்படை தளத்தில் இரு ந்து சனியன்று காலை செலுத்துகின்றனர்.

சென்னை: கனமழை பெய்ததால் ஓடுபாதையில் மழைநீர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன


சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கியதால், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலைய பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் ஓடுபாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி விட்டது. 
இதன் காரணமாக, மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், டெல்லியில் இருந்து சென்னை வந்த 2 விமானங்கள், பெங்களூரில்

அஸ்வின் சதம்: இந்தியா 482 ரன்னுக்கு ஆல்அவுட்!

அஸ்வினின் அதிரடி சதத்தின் உறுதுணையுடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இன்னிங்ஸ்சில், இந்தியா 482 ரன்கள் சேர்த்தது.

ஆட்டத்தின் 4-வது நாளான இன்று, மேற்கிந்திய தீவுகளை விட 108 ரன்கள் பின்னடைவு கண்டுள்ளது இந்திய அணி.

ஜாமீன் மனு விசாரணையில்,: கனிமொழி வழக்கறிஞருக்கு நீதிபதி கேள்வி

உச்ச நீதிமன்றம் 5 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமா? என்று கனிமொழி வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி,

ரூ.10 கோடி செலவில் தங்க கிறிஸ்துமஸ் மரத்தை தயாரித்துள்ள ஜப்பானிய நகைக்கடை அதிபர்!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டது. அலங்கார பொருட்கள் மற்றும் குடில்களை அமைப்பதற்கான பொருட்களை இப்போதே மக்கள் வாங்க தொடங்கி விட்டனர்.பல்வேறு நகரங்களில் வண்ணமிகு அழகிய கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தங்க கிறிஸ்துமஸ் மரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆபாசமாகப் பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ் சம்மன்!

2009 ஆம் ஆண்டு திரைப்பட நடிகையொருவர் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டபோது, நாளிதழ் ஒன்று 'தனக்கேயுரிய' வகையில் செய்தி வெளியிட்டிருந்தது. இது மற்ற நடிகர் நடிகைகளை ஆத்திரங் கொள்ளச் செய்தது. அச்செய்தி பற்றி நடிகர்கள் காவல்துறையில் முறையிட்டதால்,

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி: சென்னையில் புது முயற்சி

சுதந்திரமாக உலா வரும் எலி, நாய்களை பிடித்துக் கொடுத்தால், சன்மானமாக பணம் தரப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளோருக்கு எலிப்பிடிக்க பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், தெருநாய்களின் ஆதிக்கம் மட்டுமல்ல, எலி மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை, அதிகமாகவே உள்ளது. தெரு நாய் கடியால் "ரேபிஸ்' நோய் பரவும் என்பதால்,

வெளிநாட்டு வேலை விதிகள் கடுமையாகும் ;அமைச்சர் வயலார் ரவி

வெளிநாட்டு வேலை:  விதிகள்  கடுமையாகும்அமைச்சர் வயலார் ரவி
வளைகுடா நாடுகளுக்கு, வீட்டு வேலை செய்யச் செல்லும் பெண்களின் குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர்

நடிகர் விக்ரம் படம் `கரிகாலன்' கதை சர்ச்சை:போலீஸ் கமிஷனரிடம் புகார்

நடிகர் விக்ரம் நடிக்கும் `கரிகாலன்' படக்கதைக்கு சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ஒருவர், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.அவரது பெயர் ராஜசேகரன் என்ற நாகராஜ் (41) என்பதாகும். இவர், சென்னை போரூரை சேர்ந்தவர். நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அதில் அவர்,  ‘’நான் டி.வி. தொடர் இசையமைப்பாளராக உள்ளேன். நடிகர் விக்ரம் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள `கரிகாலன்' படக்கதை என்னுடைய கதையாகும்

Nov 24, 2011

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் "கோச்சடையான்" அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் கோச்சடையான் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் புதிய படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனக்கு ஜாமீன்:கிடைக்குமா ? கனிமொழி ஏக்கம்

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சரத்குமார் மற்றும் டெலிகாம் அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மத்திய அமைச்சர் சரத்பவார் கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது : டெல்லியில் பரபரப்பு

மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் ஒருவர், கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்.டி,எம்.சி அரங்கில் நடைப்பெற்ற விழாவில் சரத்பவார் கலந்து கொண்டு திரும்புகையில் எதிர்பாராத விதமாக, ஹர்விந்தர் சிங் என்ற அந்த இளைஞர், பவாரின் கன்னத்தில் அறைந்தார்.

கலைப்புலி தாணு தயாரிப்பு இளையதளபதி விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி

இளையதளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இணைகின்றனர் 'துப்பாக்கி'யில்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி' என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தை ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிக்கவிருந்தனர்.

கட்டணம் உயர்ந்திருப்பதால் சென்னையில் பேருந்துகள் காலியாக செல்கின்றன: விஜயகாந்த்


கட்டணம் உயர்ந்திருப்பதால் சென்னையில் பேருந்துகள் காலியாக செல்கின்றன: விஜயகாந்த்
பேருந்து கட்டணம் மற்றும் பால் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Nov 23, 2011

சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்; த்ரிஷா பேட்டி










 சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்; த்ரிஷா பேட்டி

அலை திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார்கள் சிம்புவும் த்ரிஷாவும். ஆந்த படம் வெற்றிபெறாத நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா

ஒலியை காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஏவுகணையை பரிசோதனை செய்து அமெரிக்கா வெற்றிகண்டுள்ளது:

அமெரிக்கா தனது படை பலத்தை பெருக்கும் விதமாக ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்க கூடிய திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணை ஒன்றை சோதனை செய்து பார்த்துள்ளது. ஏ.எச்.டபிள்யூ. என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை ஹவாய் என்னுமிடத்தில் வைத்து ஏவப்பட்டது.
அது பசிபிக் சமுத்திரத்தின் மீது தென்மேற்கு பகுதியை நோக்கி பறந்து சென்று பின் 2500 மைல்கள்

ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவிக்கு இந்தியா சீனா மோதலில் வென்றது இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவிக்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின் நிதிநிலை குறித்த கண்காணிப்பு குழுவிற்கான தலைமைப்பதவி காலியாக இருந்தது.இந்த பதவியை பிடிப்பதற்காக பிற நாடுகள் போட்டியிட்ட போதிலும் இந்தியா சீனா இடையே கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கோபிநாத் என்பவர் கலந்து கொண்டார்.

தினமணியில் நேற்று வெளியான டேம் 999 என்ற படம் குறித்த செய்தி இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியது



தினமணியில் நேற்று வெளியான டேம் 999 என்ற படம் குறித்த செய்தி இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியது
முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும் அதனால் லட்சக்கணக்கான மக்கள் மடிவது போலவும் கணினி வரைகலை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட டேம் 999 என்ற ஆங்கிலப் படம் குறித்து தினமணியில் நேற்று செய்தி வெளியானது. இதை அடுத்து இந்தப் படம், ஒட்டுமொத்த தமிழர்களையும் அச்சப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. அரசியல்

விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோரின் பட்டியல்


விலை உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் டிசம்பர் 1-ம் தேதி நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோரின் பட்டியல்

வடசென்னை- பொதுச்செயலாளர் பேராசிரியர்

இராமநாதபுரம் - பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின்

சேலம் - துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன்

தமிழகம் முழுவதும் குண்டு வைக்க திட்டமிட்ட தீவிரவாதி கைது




தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தீவிரவாதி தவுபீக்,    தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவன்.

 கடந்த 2008-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தான்.

மேலும் இறைவன் ஒருவனே என்ற பெயரில் மறைமுகமாக தீவிரவாத இயக்கம் நடத்தியதோடு,

முல்லைப் பெரியாறுஅணை உடையப் போவதாக மக்களை பயமுறுத்தும் குறும்படத்தை மலையாள சினிமாக்களுடன் இணைத்து திரையிட திட்டம்


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அணை உடையப் போவதாக மக்களை பயமுறுத்தும் ஒரு நிமிட குறும்படத்தை தயாரிக்க பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு திட்டமிட்டுள்ளார். இந்தக் குறும்படம் இனி வெளிவரவுள்ள அனைத்து மலையாள சினிமாக்களுடன் இணைத்து திரையிடப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. புதிய அணையை கட்டியே தீருவோம் என கேரளாவும்,

Nov 22, 2011

புதிய மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம்: ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்?

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின்

கோவணம் அணிந்து 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? இந்து மக்கள் கட்சி கண்டனம்


நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.
ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று குஷ்பு கூறியிருந்தார்.

தமிழக மக்களின் உணர்வோடு விளையாட வரும் ‘வம்பு படம்’!

முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; ஜெயலலிதா இன்று ஆஜராகிறார்


 முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜுனையா முன் இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட அனைவரும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணை முடியும்

பாகிஸ்தானுக்கு மார்ச்சில் வருவேன்:முஷாரப் அறிவிப்பு



 2012 ஆண்டு மார்ச் 23ம் தேதி பாகிஸ்தானுக்கு வந்து விடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்த முன்னாள் தளபதி பர்வேஸ் முஷாரப். 2001ல் இருந்து 2009 வரை பாகிஸ்தான் அதிபராக இருந்த அவர், 2009ல் பதவி விலகியதும் அவர் மீது புதிய அரசு பல வழக்குகளை தொடர்ந்தது.

"டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது


"டேம் 999' ஆங்கிலப் படம்: முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது

நன்றி தினமணி 


புது தில்லி, நவ. 21: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக, கேரளம் மக்களிடம் உணர்வுபூர்வமான பிரச்னையாக மாறிவருகிறது.
 நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிபுணர் குழுக்களை நியமித்தது.
 இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் மையமான காட்சிகளில் காட்டுகிறது "டேம் 999' எனும் ஆங்கிலத் திரைப்படம்.

Nov 21, 2011

நாளைக்குள் மக்கள் நலபணியாளர்களைபணியில் சேர்க்க வேண்டும் :சென்னை உயர்நீதிமன்றம்

மக்கள் நல பணியாளர்களை நாளைக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழியர்களை பணியில் சேர்ந்ததை வரும் புதன் கிழமைக்குள் உறுதி படுத்தி அறிக்கை தரவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி சுகுணா உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு முதண்மை குடும்பநல நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த 2005ஆம் ஆண்டு பிரசாந்த் - கிரகலட்சுமி திருமணம் நடைபெற்றது. கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்ததால் கடந்த 2007ல் பிரசாந்த் பிரிந்தார். கிரகலட்சுமியுடன் நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி பிரசாந்த் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை ஏற்று 2009ல் கிரகலட்சுமி - பிரசாந்த் திருமணம் செல்லாது என கோர்ட் அறிவித்தது. மேலும், பிரசாந்த்துடன் சேர்த்து வைக்க கோரி கிரகலட்சமி செய்த மேல் முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்



நடிகர் சிவகுமார் சில ஆண்டுகளாக இலக்கிய சொற்பொழிவு ஆற்றிவருகிறார்.  இவரி பல சொற்பொழிவுகள் பல சர்ச்சைகளை ஏற்படுதியிருக்கிறது என்கிறது ஒரு இணையதளம். அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.

திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.