Dec 2, 2011

"நேட்டோ மீண்டும் தாக்கினால் பதிலடி கொடுங்கள்': பாக்., ராணுவத்துக்கு கயானி உத்தரவு


கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., ஆப்கன் எல்லையில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சலாலா எல்லைப் பகுதியில் இருந்து முதன் முதலில் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முன்பாக, அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அடங்கிய எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை நேட்டோ தொடர்பு கொண்டது. சம்பந்தப்பட்ட இடத்தில், பாக்., ராணுவ வீரர்கள் உள்ளனரா என நேட்டோ அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாக்., அதிகாரிகள்,"சலாலா எல்லைப் பகுதியில் பாக்., வீரர்கள் யாரும் இல்லை; தாக்குதல் நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், எல்லைச் சாவடியில் பாக்., வீரர்கள் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை

புதிய அடையாள குறியுடன் ரூ.10, ரூ.1000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்புஉலகின் முன்னணி நாடுகளில் இருந்து வெளியாகும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறிகள் இடம் பெற்று இருப்பதை காணலாம். ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் வெளியிடப்படும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறி கிடையாது.


ரூபாய் என்பதை குறிக்கும் வகையில் ஆர்.எஸ்.என்று பண மதிப்புக்கு முன்னாடி போடப்படுகின்றன. அந்த குறையை போக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கிய பிரத்யேக அடையாள குறியை ரிசர்வ் வங்கி எற்றுக் கொண்டது.  

அந்த புதிய அடையாள குறி, நாணயங்களில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கரன்சிகளில் இதுவரை பயன்படுத்தவில்லை. விரைவில் புதிய அடையாள குறியை தாங்கி ரூபாய் நோட்டுகள் வெளிவர உள்ளன. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.  

இதுபற்றி, ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய அடையாள குறியுடன் முதல் முதலில் ரூ.10, ரூ.1000 நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விழாக்கால சீஷனில் இந்த வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. பழைய நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும். அடுத்த கட்டமாக அனைத்து மதிப்பிலான ரூபாய் நோட்டுகளிலும், புதிய அடையாள குறி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல் துணிவோடு சட்டப்படி சந்திப்பேன்: மு.க.ஸ்டாலின்திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க,ஸ்டாலின் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் மு.க.ஸ்டாலின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை, ஆழ்வார்ப்பேட்டையைசேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவரின் கொடுத்த புகார் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உட்பட மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது டிஜிபி-யிடம் நேரில் விளக்கம் அளித்துள்ளார். டிஜிபி அலுவலகத்திற்கு ஸ்டாலின் வருகிறார் எனத் தெரிந்த திமுக தொண்டர்கள் டிஜிபி அலுவலகத்திற்கு முன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Dec 1, 2011

அமெரிக்க கிரீன் கார்டு இந்தியர்கள் சுலபமாக பெற வருகிறது புதிய சட்டம்!


இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கிரீன்-கார்டு பெற்று செல்ல விரும்பும் ஆட்களுக்கு, கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது அமெரிக்க காங்கிரஸ்! 389 பேர் ஆதரவாக (வெறும் 15 பேர் எதிராக) வாக்களித்துள்ள குடிவரவு மசோதா ஒன்று, அதிகளவில் ஸ்கில்ட் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இந்தியா மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான ஆட்களுக்கு அமெரிக்கக் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்கும் முறையில் பெரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுவருகின்றது இந்த மசோதா. High-Skilled Immigration Act (H.R. 3012) என்ற பெயரில் நடைமுறையில் உள்ள இந்த இமிகிரேஷன் முறை இதுவரை இந்தியர்களுக்கு பாதகமாகவே இருந்து வந்தது.

கச்சத்தீவு இந்திய மீனவர்களுக்கு சொந்தமானதல்ல : இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்


கச்சத்தீவு இந்திய மீனவர்களுக்கு சொந்தமானதல்ல என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கச்சதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா இந்திய நாடாளுமன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

புனித அந்தோனியார் தேவாலய திருவிழா மற்றும் மீன்பிடி வலைகளை காய வைத்துக் கொள்தற்காக மட்டுமே கச்சதீவை இந்திய மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கச்சத்தீவை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவில்லை.

1974ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சத்தீவு தொடர்பான உத்தியோகபூர்வ உரிமையை இலங்கை உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு இலங்கைக் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளதாக அமைச்சர் கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளமையை ஜீ.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜி எல் பீரிஸ் இந்த பதில்களை வழங்கினார்

அக்னி ஏவுகணை அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் சோதனை வெற்றி

அணுகுண்டுகளை தாங்கி சென்று எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்கரையில் மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்டு தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி வரிசை ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி சோதனை செய்து வருகிறது. அக்னிகள் ஏவுகணை பல முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதன் தயார் நிலை குறித்து அவ்வப்போது ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் டிஆர்டிஒ விஞ்ஞானிகள் முன்னிலையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அணுகுண்டுகளை தாங்கி செல்லும் சக்தி படைத்த அக்னி 1 ஏவுகணை இன்று ஒடிஷா கடற்பகுதியில் உள்ள வீலர் தீவில் உள்ள ஏவுகணை பரிசோதனை மையத்தில் மீண்டும் சோதித்து  பார்க்கப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு


சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் ராஜாசங்கர், வேணுகோபால் ரெட்டி, சுப்பாரெட்டி உள்ளிட்டோர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி என்பவர் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், “ சென்னை சித்தரஞ்சன் சாலையில், எனது வீட்டிற்கு அருகிலுள்ள இடத்தை வாங்கிய முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எனது வீட்டையும் வாங்குவதற்கு முயற்சி செய்து, அதற்காக சீப்ராஸ் மற்றும் ரெயின்ட்ரீ ஓட்டல்கள் அதிபர் சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் (ஸ்டாலின் நண்பர்), ஸ்ரீனிவாசன் ஆகியோர், என் வீட்டிற்கு வந்து, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டை, ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இல்லையென்றால், எனக்கு பல பிரச்சனைகள் வரும் என்று மிரட்டினர், அவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், கடந்தாண்டு ஜூலை 16ம் தேதி புகார் செய்ய சென்றேன்.

நடிகை புவனேசுவரிக்கு சம்மன்; கார் மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு


சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை புவனேஸ்வரி மீது மோசடி புகார் மனு கொடுத்து இருந்தார்.   ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தனது சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்து புவனேஸ்வரி பயன்படுத்தி வந்ததாகவும், முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக அதில் கூறியிருந்தார்.

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.   இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நடிகை புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் நேரில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  

நடிகை புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம், வடபழனி, கே.கே.நகர் ஆகிய போலீஸ் நிலையங்களிலும் மோசடி புகார்கள் உள்ளன. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.20 லட்சம் கடனுக்கு ரூ.1 1/2 கோடி சொத்து அபகரிப்பு:மதுரை சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன் உள்பட 3 பேர் கைது:


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், படதயாரிப்பாளர். இவர் “சுந்தரா டிராவல்ஸ்”, “மீசை மாதவன்” உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் கடந்த 10 வருடங்களாக படதயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். கடந்த 2004-ல் பட தயாரிப்புக்காக மதுரை தெற்குமாசிவீதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன். அப்போது அவர் ரூ.3 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.17 லட்சம் என்னிடம் கொடுத்தார்.

திருச்செந்தூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.1 கோடியை தாண்டியது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதம் இரண்டு முறை உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நவம்பர் மாதம் உண்டியல் எண்ணிக்கை கடந்த 8-ந் தேதியும், 29-ந்தேதியும் நடைபெற்றது. கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உதவி ஆணையர்கள் செல்லத்துரை, வீரராஜன், அலுவலக கண்காணிப்பாளர் செல்வகுமாரி, முதுநிலை கணக்கு அலுவலர் வெங்கடாசலம், கண்காணிப்பாளர்கள் ராமசாமி, வெங்கடேஷ், கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

8-ந்தேதி திறக்கப்பட்ட உண்டியலில் 53 லட்சத்து 16 ஆயிரத்து 775 ரூபாயும், 29-ந்தேதி எண்ணப்பட்ட உண்டியலில் 44 லட்சத்து 15 ஆயிரத்து 127 ரூபாயும், மாதம் ஒருமுறை எண்ணப்படும் அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 926 ரூபாயும், கோசாலை உண்டியலில் 29 ஆயிரத்து 844 ரூபாயும் என மொத்தம் ஒரு கோடியே 3 லட்சத்து 45 ஆயிரத்து 672 ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்து உள்ளது.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, இந்தியா மீண்டும் அடிமைநாடாக மாறும் :அன்னா ஹசாரே


  மகாராஷ்டிரா மாநிலம் ரா‌லேகான் சித்தியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, இந்த முறையின் மூலம், நாடு மீண்டும் அந்நிய சக்திகளிடம் அ‌டிமையாகும் நிலை வருமே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் இம்முறை வழிவகுக்காது. விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாக இந்த திட்டம் அமையும் என்று மத்திய அரசு கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

                                    இம்முறையை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், 150 ஆண்டுகளாக அடிமையில் திளைத்த இந்திய நாடு, மீண்டும் அடிமைநாடாக மாற விரும்புகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கவுள்ள படம் ‘வடசென்னை’ சிம்புவுக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா


ஆடுகளம் படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘வடசென்னை’ என்ற படத்தை இயக்கவுள்ளார் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன். 

‘ஆடுகளம்’ படத்திற்கு பிறகு இயக்கவுள்ள படம் ‘வடசென்னை’ என்பதனால் எதிர்பார்ப்பு அதிமாகவே உள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கவுள்ளார். 

மேலும், தற்போது இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாயகனுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அ‌ண்ட்‌ரியாவை வடசென்னை படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள். _

இணையதளப் பத்திரிக்கை ஆரம்பிக்கிறார் கமல்


உலக நாயகன் நடிகர் கமல் தலைமையில்பிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பது குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி, நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.

அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார். அதற்கு கமல் அளித்த பதில் ஏன்.. நீங்கள் எதற்காக வருகிறீர்கள் வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்.

முல்லைபெரியறு பற்றி இயக்குனர் சேரன் கேரளத்தில் பேசியது (காணொளி )

யோகா கலை என்பது சாத்தானின் வேலை என்று வாடிகனின் தலைமை போதகர் ஒருவர் பேசியுள்ளார்.


பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகா கலை என்பது சாத்தானின் வேலை என்று வாடிகனின் தலைமை போதகர் ஒருவர் பேசியுள்ளார்.
உடல், உள்ளத்தை கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகா கலை இந்தியாவில் பண்டைய காலத்தில் தோன்றியது. இக்கலை தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இத்தாலியின் டெர்னி நகரில் சமீபத்தில் ஒரு மாநாடு நடத்தது. அதில் வாடிகனை சேர்ந்த தலைமை போதகரான கேபிரியல் அமோர்த் (85) என்பவர் பேசியதாவது:

ஹாரிபாட்டரில் வரும் சாத்தானின் வேலை போன்றது யோகா கலை. அது உடல் மற்றும் மூளையை கட்டுக்குள் கொண்டு வரும் சாத்தானின் மாய தந்திர வேலை. மேலும் அது மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட சமயம் சார்ந்தது என்று அவர் தெரிவித்தார். ‘யோகா கலை என்பது மதம் சம்பந்தமானது இல்லை. ஆனால், உடல், உள்ளத்தை சீராக்கும் அசாதாரண கலை. கேபிரியலின் கருத்து மிகவும் மோசமானது’ என்று இத்தாலியன் யோகா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Nov 30, 2011

ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோல் கிடையாது?தனுஷ் நடிக்கும் படம் '3'.?

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் '3'. '3' படத்தின் 'why this kolaveri di' என்ற பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை பட்டையை கிளிப்பிக் கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வருவதா, படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சியில் உள்ளது. எல்லா தகவலை விட தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல் தான் ரொம் எத்£பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில்  தனது அப்பாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயிற்சி எடுத்து வருகிறார் என செய்திகள் வெளியாகின. சமீபத்தில் இந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ரா 1' படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் தன் மகள் கேட்டுக்கொண்டால் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் '3' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கமாட்டார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. இதனால் '3' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கெஸ்ட் ரோலில் நடிப்பது வதந்தி என தெரியவந்துள்ளது.

மதுரை மாநகராட்சி அதிரடி; மு.க.அழகிரி எம்பி அலுவலகம் பறிப்பு:


மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, மதுரை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய எம்பி அலுவலகம் கட்டி ஒதுக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்தால் இன்று மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அந்த இடத்தை பறித்து மீண்டும் மேற்கு மண்டல அலுவலகத்திற்காக ஒப்படைக்க மாநகராட்சி கமிஷனர் நடராஜன், மேயர் ராஜன் செல்லப்பாவிடம் ஒப்படைத்தார். இதை இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் கடைசி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேநேரம், எம்பி அலுவலகத்துக்கான ஒப்படைத்த இடத்தை ரத்து செய்த தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் கொண்டுவருவதை அறிந்த திமுகவினர் முன்கூட்டியே ஒட்டுமொத்தமாக மாநகராட்சி கூட்டத்தைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் உள்ளார். இந்த நேரத்தில் மதுரை உள்ள எம்பி அலுவலக இடம் பறிக்கப்பட்டச் செய்தி, மு.க.அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
        இந்த செய்தி டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கவனத்துக்கு சென்றது. அவர் தற்போது பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதால், மதுரை திரும்பிய பின்பு, தன் அலுவலகத்தை கைப்பற்ற நீதிமன்றம் செல்லப்போவதாக திமுக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான மேற்கு மண்டலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிய கட்டிடத்தை கட்டி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அலுவலத்துக்கு பயன்படுத்துமாறு அன்றைய திமுக மேயர் தேன்மொழி ஒப்படைத்தார்.
                            மதுரையில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் அலுவலகத்தை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் பறித்துக்கொண்ட விவகாரம், அவரை எட்டியதும், அவசரம் அவசரமாக மதுரைக்கு இன்று மாலை திரும்புகிறார். மதுரை திரும்பியதும், தனது இல்லத்தில் வழக்கறிஞர்களோடு சட்ட ஆலோசனை நடத்திவிட்டு, வழக்கு தொடுப்பாரா அல்லது அறிக்கை மட்டும் கொடுப்பாரா என்பது அவர் வந்த பிறகுதான் தெரிய வரும். மத்திய அமைச்சரை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.


மதுரை பயங்கரம்; கொலை நகராமாகும் கோவில் மாநகரம்


அதிரடிக்கு பெயர்போன மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனும், மாவட்ட எஸ்பி அஸ்ராகார்க்கும், மாவட்ட கலெக்டர் சகாயம் ஆகியோரின் பார்வை அரசியல்வாதிகள் பக்கம் மட்டுமே திரும்பியுள்ளதால், கூலிப்படைகளின் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டே போகிறது.ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மதுரையில் கடந்த 3 மாதங்களில் பட்டப்பகலில் 9 படுகொலைகள் நடந்திருக்கின்றன. இன்று திருமங்கலம் இந்திரா நகரில் பட்டப்பகலில் பாண்டியம்மாள் மற்றும் அவரது மகள் தேவி கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.கடந்த 3 மாதங்களில் இதுபோன்ற பட்டப்பகல் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் படுகொலையாக பாமக முன்னாள் மாநில துணைச்செயலாளர் இளஞ்செழியன், அவரது வீட்டுக்கு முன்பு அதிகாலையில் கொல்லப்பட்டார். அதற்கு பழிக்குப் பழியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரை வில்லாபுரம் பகுதியில் அம்பேத்கார், மகாகனி உள்பட இருவர் கொல்லப்பட்டனர்.  கடந்த வாரம் தபால் தந்தி நகரில் தனியாôக இருந்த சாந்தி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் ஏலக்காய் வியாபாரி முருகேசன், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த 25 லட்சம் ரூபாயையும் பறித்துச் சென்றது. இதுவரை இந்த கொலைகள் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆங்காங்கே ஆஜராகின்றனர்.இதற்கிடையே பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரைக்கு யாத்திரை வந்திருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது, சதியும் முறியடிக்கப்பட்டது. இதிலும் முக்கிய குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை 9 படுகொலைகள் பட்டப்பகலில் நடந்திருப்பது மதுரை மாநகரில் பொதுமக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதற்கிடையே பல்வேறு வெளிநாட்டினர் வந்து செல்லும், கோவில் மாநகரில் பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சுற்றுலாப்பயணிகளையும் அச்சப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அழகிரி வீட்டில் கனிமொழி

கனிமொழி சென்னைக்கு வருவதையொட்டி அவரை வரவேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவினர் திரள்கிறார்கள்.  

மதுரையில் இருந்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்

திகார் சிறையில் இருந்த கனிமொழி எம்.பி.க்கு நேற்று டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


 இரவு 7.30 அளவில் கனிமொழி திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

இன்னும் 3 நாட்கள் சிபிஐ தரப்பு நடைமுறைகளை முடிக்க வேண்டியிருப்பதால்,   கனிமொழி டெல்லியிலேயே தங்க வேண்டிய சூந்நிலை உள்ளது.   இதனால் அவர் டெல்லியில் உள்ள அழகிரி வீட்டில் தங்கியுள்ளார்.


கனிமொழி,  டிசம்பர் 3ம் தேதி சென்னை வருகிறார்.  டிசம்பர் 6ம் தேதி வரை சென்னையில் இருக்கும் கனிமொழி, பின்னர் மீண்டும் டெல்லிக்குச் செல்கிறார்.   டெல்லியில் அழகிரி வீட்டில் இருந்தபடியே வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகவிருப்பதாக தெரிகிறது.

இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. பொறுப்புடன் விளையாடிய ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்தில் நேற்று பகல்/இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது.சிம்மன்ஸ் 19, பரத் 17, சாமுவேல்ஸ் 10 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பிராவோ & ஹயாத் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. ஹயாத் 31 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். பொறுப்புடன் விளையாடிய பிராவோ அரைசதம் அடித்தார். பிராவோ 60 ரன் எடுத்து (74 பந்து, 6 பவுண்டரி) ரெய்னா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் போலார்டு 13, கேப்டன் சம்மி டக் அவுட், ராம்டின் 14 ரன் எடுத்து வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரஸ்ஸல் 22 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்தது. ரோச் 12, மார்ட்டின் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

Nov 29, 2011

திஹாரில் இருந்து வெளிவந்தார் கனிமொழி

தில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று திஹார் சிறையில் இருந்து வெளியேறினார் கனிமொழி. சுமார் 6 மாதங்கள் அவர் திஹார் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்றம் மற்றும் சிறை நடைமுறைகளை முடித்துவிட்டு, இன்று மாலை அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறினார். அவரை வரவேற்க திமுகவினர் காத்திருந்தனர். கனிமொழியின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். கனிமொழி வரும் டிசம்பர் 3ம் தேதி சென்னைக்கு வருவார் என்று திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

மாவட்ட எஸ்பி எச்சரிக்கையையும் மீறி ஜெயலலிதா உருவபொம்மை எரிப்பு

ஜெயலலிதா உருவபொம்மையை எரித்தால் கைது செய்வோம் என்று இடுக்கி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்த எச்சரிக்கையையும் மீறி சில இடங்களில் ஜெயலலிதா உருவபொம்மை எரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் பந்த் நடைபெற்று வருகிறது.இந்த பந்த்தில் நேற்று கலந்துகொண்டவர்களுடன் இன்று பாஜக, நாயர் சமுதாய பேரவை உள்ளிட்ட சில அமைப்பினர் கூடுதலாக கலந்துகொண்டுள்ளனர்.
பந்த்தின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் உருவபொம்மையை சில இடங்களில் போராட்டக்காரர்கள் எரித்தனர்.

என் வாழ்க்கையிலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு சில ரகசியங்கள் உள்ளன. சோனியா அகர்வால்

சோனியா அகர்வால் பேசும்போது, ’’நான் மூன்று வருடங்களாக நடிக்கவில்லை. மறுபடியும் நடிக்க வந்தபோது, ஒரு புதுமுகம் போல் உணர்ந்தேன்’’ என்றார்.
ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கருவாக வைத்து, `ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில், நடிகையாக சோனியா அகர்வால் நடித்து இருக்கிறார். ராஜ்கிருஷ்ணா டைரக்டு செய்துள்ளார். புன்னகைப்பூ கீதா தயாரித்து இருக்கிறார்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது,

Nov 28, 2011

அது போன மாசம் இது இந்த மாசம்: சீமான் - அன்றும் இன்றும்

நன்றி  நக்கீரன்கனிமொழிக்கு வரவேற்பு வழங்கப்படும் புதிய பதவி வழங்கப்படுமா? கலைஞர் பதில்


2ஜி வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர், கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


மேலும் அவர், சென்னை வரும்போது அவருக்கு வரவேற்பு வழங்கப்படும், அது பலமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை என்றார். கனிமொழிக்கு புதிய பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது கட்சிதான் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

கனிமொழிக்கு ஜாமீன் நாளை காலை விடுதலை ஆகிறார் கருணாநிதி மகிழ்ச்சி

கனிமொழிக்கு ஜாமீன்: இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆகிறார்   கருணாநிதி மகிழ்ச்சி  அளிக்கிறது

கனிமொழிக்கு ஜாமீன்: இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆகிறார்

கனிமொழிக்கு ஜாமீன்: இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆகிறார்

2ஜி வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கனிமொழி உள்ளிட்ட 5 பேரும் இன்று இரவு அல்லது நாளை காலை விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: டி.ஆர்.பாலு

2ஜி வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

 

கனிமொழிக்கு ஜாமீன்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு


2ஜி வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஸ்போர்ட் 30 நாட்களுக்குள் பெற வேண்டுமா? புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா


அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே! 

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம். 

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.  

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும்  www.passportindia.gov.in  என்ற இணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் செக்ஸ் படங்கள் , வீடியோ, இணையதளத்தில் வெளியிட்டால் 5 ஆண்டு சிறை!


இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய காலம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது.  பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார்.

கேரளாவில் முழுஅடைப்பு, ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது


கேரளாவில் இன்று கடையடைப்பு நடப்பதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ரூ.3 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் மிகவும் பிரபலமானதாகும். இங்கு ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதில் 80 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதிப்பதை கண்டித்து கேரளாவில் விவசாயிகள், வர்த்தகர்கள் இன்று முழு கடையடைப்பு நடத்துகின்றனர். இதனால் கேரள மாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வராததால் ரூ.3 கோடி வரை  காய்கறி வியாபாரம் பாதித்துள்ளது. இடுக்கியில் பந்த் முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு இன்று பந்த் நடந்து வருகிறது. இதனால் பஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்கவில்லை.

Nov 27, 2011

செவ்வாய் கிரகத்துக்கு புறப்பட்டது நாசா ராக்கெட்; 55 கோடி கி.மீ. தூரம்.. 8 மாத பயணம்நாசா,  -

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான, வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நேற்று ராக்கெட் அனுப்பியது.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு நெருக்கமாக இருக்கும் கோள் புதன். இதற்கு அடுத்து சுக்கிரன். 3-வதாக நாம் (பூமி). நமக்கு அடுத்து இருப்பது செவ்வாய். எல்லாம் தனித்தனியே தங்கள் ரூட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் என்பதால், எப்போதும் ஒரே இடைவெளி இருக்காது. மிக நெருக்கத்தில் வரும்போது பூமி - செவ்வாய் இடையே 5.6 கோடி கி.மீ. தூரம் இடைவெளி இருக்கும். அதிகபட்ச இடைவெளி 40 கோடி கி.மீ. வரை போகும்.

துயரங்கள் இலவசம்?! ஆனந்த விகடன் தலையங்கம்


'நஷ்டத்தில் மூழ்கிவரும் பொதுத் துறை நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம்... கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேற்றப்பட்ட தவறுகளின் பின்விளைவு... கைகொடுக்காத மத்திய அரசு...' என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, பேருந்துக் கட்டணம், பால் விலை இரண்டையும் ஒரே மூச்சில் ஏற்றிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. மின் கட்டண உயர்வும் தவிர்க்க இயலாதது என்று திகில் முன்னோட்டம் தந்துள்ளார்.
 சபிக்கப்பட்ட நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு விழுந்திருக்கும் மற்றொரு மாபெரும் அடி இது. அதிலும், சுதாரிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் உடனடியாக அமலாக்கப்பட்ட கட்டண உயர்வால், கையில் போதிய பணம் இல்லாமல் பாதி பயணத்தில் இறங்கிச் சென்ற அப்பாவிகள் பட்ட அவமானம் அளவிட முடியாதது.
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு, தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளும் மாறி மாறி இலவச அறிவிப்பு நடத்தியபோது, அவர்களை வள்ளல்களாகவும், வானில் இருந்து இறங்கிவந்த தெய்வங்களாகவும் வாழ்த்தி வரவேற்றதன் விளைவுதானே இந்த விலையேற்றச் சுமை!

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.


தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தொடர் மழை காரணமாக பல கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளை அரசு மேற்கொள்ளாததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதற்கிடையே, கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, புயல் சின்னமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.