Feb 2, 2013

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை குறிப்புகள்-டாக்டர் அண்ணா பரிமளம்



15-09-1909-ல் பிறப்பு காஞ்சிபுரம், தந்தை: நடராசன், தாய்: பங்காரு அம்மாள்.
வளர்ப்பு: இராசாமணி அம்மையார் (சிற்றன்னை) - தொத்தா
1914: பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் கல்வி.
1927: காஞ்சி நகராட்சியில் எழுத்தர் பணி.
1928: சென்னை பச்சையப்பன் கல்லூரிக் கல்வி
1930: இராணி அம்மையாரை மணந்துகொள்தல்
1931: மாணவர் செயலராதல், போட்டிகளில் பரிசு பெறல்.
19.03.1931: பெண்கள் சமத்துவம் எனும் முதல் கட்டுரை. தமிழரசு இதழில்
1932: முதல் ஆங்கிலக் கட்டுரை 1933: காங்கேயம் - செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல் பொழிவு
11.02.1934: முதல் சிறுகதை `கொக்கரக்கோ` ஆனந்த விகடனில் வெளியாதல்
1934: முதுகலைப்ப பட்டப் படிப்பில் தேர்ச்சி
1936: `பாலபாரதி` ஆசிரியர் பொறுப்பு
1934: திருப்பூர் - செங்குந்தர் இளைஞர் மாநாடு பொழிவு. பெரியாருடன் முதல் சந்திப்பு
1935: கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியர் பணி.
1936: சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடல். (பெத்துநாயக்கன் பேட்டையில்)
1936: பெரியாருடன் வடாற்காடு மாவட்டச் சுற்றுப்பயணம்
04.04.1937: `நீதிக்கட்சி` செயற்குழு உறுப்பினராதல்
1937: செட்டிநாட்டு அரசர், தம் தனிச் செயலாளராகப் பணியாற்ற வேண்டல்.
09.12.37: முதற்கவிதை `காங்கிரசு ஊழல்` விடுதலையில் வெளிவரல்
1937: `நவயுகம்`, `விடுதலை`, `குடியரசு` இதழ்களின் துணை ஆசிரியர் பொறுப்பு
02.09.38: முதல் மடல் பரதன் பகிரங்கக் கடிதம் விடுதலையில் வெளிவரல்
26.09.38: இந்தியை எதிர்க்க மக்களைத் தூண்டியதாக நான்கு மாத வெறும் காவல் தண்டணை: ராணியம்மை வாழ்த்துச் செய்தி (குடியரசு, விடுதலை)
13.01.39: இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தாளமுத்து நடராசன் இரங்கல் கூட்டத்தில் உரை
18.01.39: தமிழர் திருநாள் விழாவில் டாக்டர் சி.நடேசனார் படத் திறப்பு (சென்னை)
10.02.39: சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்பு உரை
07.1939: முதல் குறும் புதினம் `கோமளத்தின் கோபம்` (குடி அரசு)
12.11.39: `கபோதிபுரக் காதல்` தொடக்கம்
10.12.39: நீதிக்கட்சியின் செயலாளர் ஆதல்
06.01.40: பம்பாயில் பெரியார்-அம்பேத்கர் உரையாடல் மொழி பெயர்த்தமை
23.03.40: முதல் புதினம் `வீங்கிய உதடு` தொடக்கம் (குடி அரசு)
02.06.40: காஞ்சியில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானத்தைக் கொனரல்
08.11.40: தி.க.சண்முகம் நடித்த `குமஸ்தாவின் பெண்` நாடகத் திறனாய்வு (குடியரசு)
08.03.42: திராவிடநாடு மதழ் தொடக்கம் தலையங்கம் கொந்தளிப்பில் கவிஞர் பாரதிதாசனின் `தமிழுக்கு அமுதென்று பேர்` எனும் பாடல் முகப்பில்.
1942: சென்னையில் அண்ணா தலைமையில் நீதிக்கட்சி மாநாடு
07.02.43: சென்னைச் சட்டக் கல்லூயில் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்
05.06.43: திருவத்திபுரம் லட்சுமி விலாஸ் அரங்கில் `சந்திரோதயம்` எனும் தம் முதல் நாடகத்தில் துரைராஜாவாக நடித்தல்
1944: சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானத்தை முன்மொழிதல்
05.12.45: சென்னையில் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் காகபட்டராக நடித்தல்
13.01.46: `பணத்தோட்டம்` கட்டுரை வெளிவரல்
மே 46: இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாவின் தலைமையில் பலர் சிறை ஏகல்
மே 46: மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் உரை 11.10.46: ஓர் இரவு பற்றி பெர்னாட்சா என்று கல்கி பாராட்டு
29.07.46: நாவலர் பாரதியார் தலைமையில் கவிஞர் பாரதிதாசனுக்கு ரூ.25000 பணமுடிப்பு வழங்கல்
25.04.47: அண்ணாவின் `வேலைக்காரி` படம் திரையிடல்
01.06.47: `நீதி தேவன் மயக்கம்` நாடகம் அரங்கேறல்
10.08.47: ஆகஸ்டு 15 துக்க நாள் என்ற பெரியாரை மறுத்து அது திருநாளே எனத் திராவிட நாடு ஏட்டில் வெளியிடல்
17.08.47: தஞ்சையில் நடைபெற்ற வேலைக்காரி நாடகத்திற்கு தலைமையேற்ற திரு.வ.ரா.வையும், என்.எஸ்.கே. வையும் பாராட்டல்
23.09.47: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நிலையும் நினைப்பும் என்ற தலைப்பில் உரை
14.12.47: திராவிட நாடு அலுவலகம் காஞ்சியில் 95, திருக்கச்சி நம்பித் தெருவில் அமைத்தல்.
14.01.48: அண்ணாவின் `நல்லதம்பி` படம் திரையிடல்
17.07.48: இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரை
02.08.48: இந்தி எதிர்ப்பு மறியலுக்கு தலைமையேற்றல் பின் சிறையேகல்
23,24,10.48: ஈரோடு திராவிடர் கழகத் தனி மாநாடு தலைமையேற்று நடத்தல். காலை ஊர்வரத்தில் அண்ணாவை அமர வைத்து ஊர்வரத்தின் முன் பெரியார் நடந்து வந்தமை, `பெட்டிச் சாவியைத்தருகிறேன்` என்று பெரியார் மொழிந்தமை.
1948 அரசு அறிவித்த கருஞ்சட்டை எதிர்ப்புக்கு எதிராகக் கூட்டப் பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளல்.
25.06.48: திராவிட நாடு ஏட்டில் 04.04.48, 18.04.48 ஆகிய நாட்களில் எழுதிய கட்டுரைகள் வகுப்புக் கலவரத்தைத் துண்டுகின்றன எனக் குற்றம் சாட்டி ரூ.3000 பொறுப்புத் தொகை கட்ட அரசு ஆணை பிறப்பித்தது.
18.03.49: அழகிரி மரணத்தால் தவித்த குடும்பத்திற்கு நாடகம் நடத்தி ரூ.5000 வழங்கல்
18.06.49: பெரியார் - மணியம்மை திருமண அறிவிப்பு
03.07.49: பெரியாரின் திருமணத்தைக் கண்டித்தல் கண்டன அறிவிப்புக்கு வேண்டுகோள் விடுத்தல்
17.07.49: `கண்ணீர்த்துளிகள்` தலைப்பில் எதிர்ப்பாளர் பட்டியல் வெளியிடல்
10.08.49: `மாலை மணி` நாளிதழ் ஆசிரியராதல்
21.08.49: `மாஜிகடவுள்` கட்டுரைத்தொடர் தொடக்கம்
17.09.49: சென்னைப் பவளக்காரத் தெரு 7 ஆம் எண் இல்லத்தில் (காலை 7 மணிக்கு) குடந்தை கே.கே.நீலமேகம் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களின் எதிர் காலப்பணி குறித்து உரையாற்றல்
17.09.49: மாலை இராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தொடக்க விழா உரை
18.09.49: கழகப் பொதுச் செயலாளரானார்
18.09.49: திராவிட நாடு ஏட்டில் எழுதிய கட்டுரைகளுக்காக (04,18.04.48) நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்புக்கண்டு பத்தாம் நாள் விடுதலை செய்யப்படல்
25.09.49: `வெள்ளி முளைத்தது` தி.மு.க.தொடக்கம் குறித்த தலையங்கம்.
04.11.49: வழக்கு விசாரணையில் ஈட்டுத் தொகை கட்ட பணிக்கப்பட்ட அரசு ஆணையைநீதிமன்றம் தள்ளுபடி செய்தல்.
13.11.49: ஈட்டுத் தொகைக்கு கழக ஆதரவாளர் அனுப்பிய நன்கொடைகளைத் திருப்புதல்
12.01.50: எங்கும் பொங்கல் விழா எடுக்க அறிக்கை விடல்
12.01.50: திருச்சி சிறையில் இலட்சிய வரலாறு எழுதுதல்
06.08.50: சமநீதி பார்ப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்த அரசின் முடிவுக்கு அறிக்கை
18.09.50: ஆரியமாயை நூல் எழுதியமைக்காக ரூ700 தண்டமும் கட்டத் தவறினால் ஆறு திங்கள் சிறை வாழும் என அறிவிக்கப் பெற்றமை.
24.10.50: அமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு
1950 இந்தி நல்லெண்ணக்குழுவுடன் சந்திப்பு
20.01.51: திருச்சி உழவர் கிராம ஒன்றிய மாநாட்டில் உரை
01.03.51: ஆரிய மாயை நூலை எங்கும் தடையை மீறிப் பலர் படித்தல்
01.03.51: தடை மீறி ஆரியமாயை 159 இடங்களில் படிக்கப்படல்
15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தியமை 15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தி ரூ.21000 வழங்கியமை
06.04.51: இராசேந்திர பிரசாத்துக்குக் கறுப்புக் கொடி
29.04.51: சிதம்பரம் திலையரங்கில் சந்திரமோகன் நாடகம் நடத்தியமை
13.08.51: சர் தியாராயர் கல்லூரி உதவி நிதிக்காகத் தம் குழுவினருடன் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடத்தியமை
02.11.51: அறிவகம், கட்டிடத் திறப்பில் தலைமையேற்றல்
14.12.51: சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு. அண்ணா மாநாட்டு தலைமையேற்றல்
12.03.52: வடநாட்டு ஆளுநர் நியமனக் கண்டனக் கூட்டத்தில் ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்று கோரியமை.
06.04.52: கழக இளைஞர் மஜீத் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரல்
01.08.52: இந்தி எதிர்ப்பு அறப்போர்
28.08.52: ராயல்சீமா பஞ்சநிலைக்கு அண்ணா நன்கொடை அனுப்பியமை
1953: கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க திருச்சியில் துணி விற்றல்.
25.04.53: திருச்சி மாநாட்டில் காதல் ஜோதி அரங்கேற்றல்
28.04.53: புயல் நிவாரண நிதியாக ரூ 27000 வழங்கல்.
06.06.53: கழக இளைஞர் குடும்பத்துக்கு நிலம் அளித்தல்
15.06.53: நம்நாடு ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு
08.07.53: குலக்கல்வி கண்டன ஊர்வலத்தில் (காஞ்சிபுரம்) தலைமை
13.07.53: குலக்கல்வி, ரயில் நிறுத்தல், கல்லக்குடி இம் மூன்றையும் உள்ளடக்கிய மும்முனைப் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதாதல். மூன்று மாதம் சிறை செல்லல்.
01.09.53: மும்முனைப் போராட்டத்திற்கு ரூ.5000 அபராதத் தொகை (அண்ணா மற்றும் சிலருக்கு) எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதி மன்றம் கலையும் வரை காப்பு.
03.05.54: மொழிவழி மாநிலம் அமைய ஆணையிடம் அறிக்கை அளித்தல்
14.01.55: அண்ணாவின் சொர்க்கவாசல் திரையிடப்படல்
20.03.55: ஐந்தாண்டுத் திட்டம் கண்டன நாள் என அறிவித்தல்.
31.05.55: திருச்சி, இராமநாதபுரம் பகுதில் புயலால் பாதிக்கப் பெற்றவருக்கு நிதி வழங்கியமை
20.02.56: தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடனும், செங்கோட்டை வட்டததின் ஒரு பகுதியைக் கேரளத்துடனும் இணைக்க வேண்த் தெரிவிக்கப்பட்ட கண்டனக் கூட்டததில் பொது வேலை நிறுத்தம் பற்றி விளக்கல்.
17,18,19. 05: 1956: திருச்சி இரண்டாவது மாறில மாநாடு.
20.05.56: தேர்தலில் போட்டியிட முடிவு, அண்ணாவின் கருத்துரைமூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு விருது
11.03.57: தேர்தல் முடிவு அறிவிப்பு, அண்ணா வெற்றி பெறல்
09.06.57: ஆங்கில வார இதழ் தொடங்கல் ழடீஆநு டுஹசூனு 07.07.57: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அண்ணா உரையாற்றல்
03.01.58: நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு. தடையை மீறிப பேசச்செல்லுகையில் கைது செய்யப்படல்.
02.03.58: தி.மு.க. மாநிலக் கட்சியாகவும், உதயசூரியன் அதன் சின்னமாகவும் இந்திய அரசு ஏற்றல்
22.06.58: இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடல்.
06.11.58: பூதவராயன் பேட்டையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட கழகத் தொண்டர் ஆறுமுகம் என்பவர் குடும்பத்துக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கல்
24.04.59: சென்னை மாநகராட்சிப் பொறுப்பைத் தி.மு.க. ஏற்றல்
20,21.06.59: திருச்சி மாவட்ட தி.மு.க 3வது மாநில மாநாட்டில் உரை
15.05.60: சந்திரமோகன் நாடகம் வழி திரு.பி.பாலசுப்பிரமணியன் நிதிக்கு ரூ.10000 வழங்கல்
01.08.60: சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை ஏற்றல்
25.09.60: சென்னையில் கூடிய பொதுக் குழுவில் அண்ணா பொதுச் செயலாளா ஆதல்.
1960: திராவிட நாடு விடுதலை வார விழாப் பளியில் மாண்ட திரு. கணேசனின் (திருப்பூர்) மனைவியிடம் ரூ.5000 மதிப்புள்ள வீட்டை வழங்கல்.
1962: சம்பத் விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்
26.02.62: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுறல்
26.02.62: சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்
04.03.62: செயின்ட்மேரி மண்டபத்தில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற 48 எம.எல்.ஏ. 8 எம்.பி. களுக்குப் பாராட்டு
20.04.62: டில்லி மாநிலங்களவை உறுப்பினராதல்
01.05.62: டில்லி மாநிலங்களவைறில் முதல் சொற்பொழிவு
10.06.62: நெசவாளர் மீது விதித்த வரிக்கொடுமைக் கண்டன ஊர்வலம் நடத்தியமை. அண்ணா கைதாதல்.
19.07.62: வேலூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த மறியலில் கைதாதல்.
02.08.62: அண்ணா தம்மீது தொடரப்பட்ட வழக்கில் தாமே வாதாடல்
03.08.62: விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.
02.12.62: சென்னையில் போர் நிதி திரட்டல்.
09.12.62: இந்திய-சீனப்போர் பற்றிய வானொலி உரை
1962: ழடிஅந சுரடந இதழ் தொடக்கம் 07.01.63: சீனர்களின் ஆதிக்கசெறி குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கில்ப் பேருரை
25.01.63: மாநிலங்கள் அவையில் பிரிவினைத் தடை மசோதா மீது உரை
01.09.63: மகன்கள் பரிமளம், இளங்கோவன் திருமணம்
03.11.63: கட்டாய இந்தியை எதிர்த்ததால் அமைந்த கரையில் கைதாதல்
17.11.63: கட்டாய இந்தி 17 வது மொழிப் பிரிவு சட்டம் எரித்ததல் அன்றே கைதாகி, ஆறு மாதம் சிறைத் தண்டனை ஏற்றல்.
02.12.63: இந்தியைப் புகுத்தும் சட்டப் பிரிவை எரித்தல்
10.12.63: ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெறல்
08.01.65: குடியரசு நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கூறல்.
17.01.65: இந்தி எதிப்ப்பு மாநாடு
26.01.65: துக்க நாளாகக் கொண்டாடியமைக்காக கைது.
29.01.65: விடுதலை ஆதல்
09.02.65: இந்தி எதிர்ப்பில் மாணவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கூறல்.
09.02.65: சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் சென்று திரும்பிய அண்ணாவிற்கு வரவேற்பு
26.01.66: இந்தித் திணிப்பிற்காகக் குடியரசு நாளைத் துக்க நாள் எனல். அதனால் கைது ஆதல்.
31.12.66, 01.01.67: சென்னை மாவட்ட மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தல்
27.02.67: பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறல்
06.03.67: தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்யியருடன் 138 பேர் அமர்ந்திட, அண்ணா தமிழக முதல்வர் பொறுப்பேற்றல். அன்றே அரசு ஊழியரிடையே உரையாற்றல்
09.03.67: சென்னை மாநகராட்சி வரவேற்பில் உரை
14.03.67: முதலமைச்சராக வானொலியில் உரை
15.03.67: சட்ட மன்ற வளாகத்தில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றல்.
16,03.67: இந்தி எதிர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல்.
11.04.67: தலைமை அமைச்சர் இந்திராவை சந்தித்தல்
14.04.67: சென்னை அரசு தமிழ்நாடு அரசு எனப் பெயரிடப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு தலைமைச் செயலகம் என மாற்றிப் செயர்ப் பலகை அமைத்தல்,
22.04.67: சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படல்
26.04.67: மேலவை உறுப்பினராகப் பதவியேற்றல்
09.05.67: அண்ணாவின் அரசால் ஆகாஷ்வாணி வானொலி என வழங்கப்படல்
15.05.67: ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கல்.
17.06.67: புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து, பேருந்துகள் அரசுடைமை ஆதல், ஏழைகளுக்கு இலவசக் கல்வி, கலப்புமணப் பரிசு, குடிசைவாசிகளுக்குத் தீப்பிடிக்காத வீடு, காவிரித் திட்டம். 08.07.67: ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்க செலவிட முடிவு.
23.10.67: சீரணியின் நோக்கத்தைப் புலப்படுத்தல்.
1967: அண்ணாமலைப் பேருரை
02.01.68: தமிழ் அறிஞர்களுக்குச் சிலை எடுத்தல்
04.01.68: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு செயற்குழுத் தலைமை
10.01.68: இரண்டாவது இலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் நிற்றல்
23.01.68: இருமொழித் திட்டம் கொணரல்
15.04.68: உலகப் பயணம் மேற்கொள்ளல், யேல் பல்கலைக் கழக அழைப்பு
22.04.68: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரை, சப்பெலோஷிப் எனும் சிறப்பு விருதினைப் பெறல்
12.05.68: அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளைக் கண்டு திரும்பல்.
21.08.68: பள்ளிகளில் என்.சி.சி.அணியில் இந்தி ஆணைச் சொற்கள் நீக்கல்.
08.09.68: அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெறுமை பெறல்.
09.10.68: புற்று நோயால் பாதிக்கப் பெற்று அமெரிக்கா செல்லல்.
06.11.68: அமெரிக்க மெமோரியல் மருத்துவமனையில் டாக்டர் மில்லரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தமிழகம் திரும்பல்.
01.12.68: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தமைக்கு விழா கொண்டாடல்
14.01.69: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு.
02.02.69: இரவு 12.22 மணிக்கு உடல் இயக்கம் நின்றது.
03.02.69: தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்
04.02.69: முற்பகல் 11.40-க்கு முப்படையினர் மரியாதையுடன் அண்ணாவின் உடல் புதைக்கப்பட்டது,
03.02.70: அண்ணா அஞ்சல்தலை - மைய அரசு வெளியிடல். 


புலித்தடம் தேடி...! பாகம் 11,12


புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன் -பாகம் 11

வந்தடைந்தோம், ஈழத்துக்காக உயிர் கொடுத்த​வர்களைப் புதைத்த மண்ணுக்கு!  மாவீரர்கள் புதைக்கப்பட்ட அந்த இடங்களில் இன்று எருக்கஞ் செடிகள் புதராக முளைத்திருந்தன.

நிராதரவாய் இருக்கும் அந்த மண்ணைப் பார்க்கும்போதே யாரையும் சோகம் அப்பிக்கொள்ளும். 'நடுகல்� என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடு​வதன் நீட்சிதான் 'மாவீரர் துயிலும் இல்லங்கள்�.
புலிகளின் முதல் மாவீரன் சங்கர்.

அவரின் மூச்சு அகன்றது நவம்பர் 27, 1982. நேரம் மாலை 6.05. அவர் சாவதற்கு முன் உச்ச​ரித்தது.. 'தம்பி... தம்பி� என்பதுதான். அந்த நாளைப் பற்றி பிரபாகரன் குறிப்பிடும்போது 'இறுதி வரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி மறப்பேன்? அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை.

மூன்று நேரமும் உணவு அருந்துவது இல்லை� எனக் குறிப்பிட்டார். அதன் அடையாளமாக 1989-ம் ஆண்டில் இருந்து நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் தினம் என்று அறி வித்தார் பிரபாகரன். அன்றைய தினம் மாலை 6.05-க்குக் கோயில்கள் எங்கும் மணிகள் ஒலிக்கும். பிரபாகரன் மாவீரர் தின உரையை வழங்குவார்.

தளபதிகள் முதல் சாதாரணப் போராளிகள் வரை எத்தனையோ பேர் இந்த மண்ணுக்காக இறந்துள்ளனர். இதில் அனைவருமே முக் கியமானவர்கள்தான். இவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைவருக்குமான தினமாக இது அமையும்� என்றார்.

அத்தகைய மாவீரர் கல்லறைகள் உள்ள இடம், ஈழத் தமிழ் மக்கள் எப்போதும் வணங்கும் கோயிலாக இருந்தது. இன்று, அவை முழுமையாகச் சிதைக்கப்​பட்டுவிட்டன. எங்களுக்காக உயிர ஈகம் செஞ்சவர்​களுக்குக்​கூட மரியாத செலுத்த முடியாத நிலைமையில​தான் இந்த மண்ணுல வாழறம். சிங்கள ராணுவம் தமிழ்ப் பகுதிகளை ஒவ்வொரு முறை கைப்பற்றும்போதும் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்.

புலிகளால் மீட்டு மீண்டும் சீரமைக்கப்படும். இப்போது மொத்த​மாக அழிக்கப்பட்டு விட்டது� என்று சொன்னார் நண்பர். அவர் குறிப்பிடுவதுபோல், ராணுவத்தின் கணக்குப்படி அத்தனை துயிலும் இல்லங்களும் இப்போது அழிக்கப்பட்டு விட்டன.

கிளிநொச்சியில் கனகபுரம், விசுவமடு, முழங்​காடு, யாழ்ப்பாணத்தில் சாட்டி தீவகம், கோப்பாய், எல்லங்குளம், உடுத்துறை, கொடிகாமம், முல்லைத்தீவில் முள்ளியவளை, அலம்பில், ஆலங்​குளம், வன்னிவளாங்குளம், ஜீவன்முகாம், டடிமுகாம், வவுனியாவில் ஈச்சங்குளம், மன்னாரில் பண்டிவிரிச்சான் திருகோணமலையில் ஆழங்குளம், தியாகவனம், பெரியகுளம், உப்பாறு, மட்டக்களப்பில் தாவை, தாண்டியடி, கல்லடி, மாவடி, அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு என அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களின் சுவடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.

அனைத்து துயிலும் இல்லங்களின் நிலங்களும் இப் போது ராணுவச் சொத்து. பல பகுதிகளில் தங்கள் படைப் பிரிவுகளுக்கான நிரந்தரக் கட்டடத்தை இந்த நிலங்களில்தான் கட்டி இருக்கிறது ராணுவம். புலிகள் புதைக்கப்பட்ட இடத்தில் ராணுவம் நிலை நிலைநாட்டப்பட்டு விட்டது என்பதே உலகத்துக்குச் சொல்லும் செய்தி.

கனகபுரம் துயிலும் இல்லத்தின் எல்லைகளில் உடைந்த நடுகற்களும், இடித்து நொறுக்கப்பட்ட கற்களின் எச்சங்களும் ஆங்காங்கே கிடந்தன. அதை வேதனையோடு பார்த்தபடியே கிளம்பினேன். இந்த இடங்களைச் சுற்றி ராணுவக் கண்காணிப்பு உள்ளது.

உட்புறச் சாலையில் இருந்து 'ஏ-9� நெடுஞ்சாலையை அடைந்தேன். ராணுவத்தின் உட்புற முகாம்களை சாதாரணமாக அந்த வீதியில் காண முடிந்தது. விளையாட்டுக் கூடத்தின் கட்டுமான வேலையும் நடந்துகொண்டு இருந்தது. அங்கு ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி உடைந்து கிடந்தது.

இந்தத் தொட்டிக்கு உள்ளும் பிரபாகரன் வாழ்ந்தார் என்று ஒரு கதை சொல்கிறது ராணுவம்� என்று நண்பர் கூறினார். ராணுவம் எறிகனையில் தாக்கி அழித்த அந்தத் தண்ணீர் தொட்டியையும் வெற்றிச் சின்னமாகவே வைத்துள்ளது. போர் வடுக்களின் அடையாளங்கள்தான், சிங்கள தேசத்தின் வெற்றிச் சின்னங்கள்.

அவர்களின் இந்தச் செயல்கள் வரலாற்றை அழித்தல் என்பதாக நீள்கிறது. என் உடனிருந்த நண்பர், புத்தகப் பிரியர். போரின்போது அவரும் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு நகர்ந்தவர். அவரிடம் பொக்கிஷங்களாய் இருந்த 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் போரில் இழந்தவர். அவர் எனக்கு ஒரு சம்பவத்தை நினை வூட்டினார்.

முள்ளிவாய்க்காலின் இக்கட்டுக்​குள் சிக்கவைக்க ராணுவம் நகர்த்திக்கொண்டே வந்தபோது, வீடு வீடாய்ப் புகுந்த ராணுவத்தினர் புத்தகங்களை வெளியில் வீசி எரித்தனர். படங்களை எல்லாம் கொளுத்தினர். கிடைத்தவற்றை எல்லாம் சூறையாடினர்'' என்றார். அவர் சொன்னதைக் கேட் டபடியே கந்தசாமி கோயிலை நெருங்கி​னேன்.

தமிழ் மக்கள் தங்கள் குறையை மனதிலே வைத்துப் புலம்பும் இடமாக இருப்பவை இந்தக் கோயில் கள்தான். 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல� அந்தக் கோயில்களையும் விடவில்லை இலங்கை ராணுவம். இதுகுறித்து, கடந்த மார்ச் 2012-ல் 'இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்� என்ற இணையதளம் 'சால்ட் ஆன் ஓல்ட் வவுண்ட்ஸ் (Salt on Old wounds) என்ற தலைப்பில் வடகிழக்கு மற்றும் மலையகங்களில் திட்ட​மிட்ட சிங்களமயமாக்கல்� என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, தமிழர் பகுதிகளில் இருந்த 367 கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. உயர் பாதுகாப்பு வளையங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகார்கள் கட்டப்பட்டுள்ளன. புத்த விகார்கள் அதிகரித்து இருப்பதற்கான ஆதாரங்கள் ஏ- 9 சாலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் 208 கோயில்கள், திருகோண​மலையில் 17 கோயில்கள், மட்டக்களப்பில் 61 கோயில்​கள், அம்பாறையில் 11 கோயில்கள், கிளி நொச்சியில் 46 கோயில்கள், முல்லைத்தீவில் 6 கோயில்​கள், மன்னாரில் 6 கோயில்கள், வவுனியாவில் 12 கோயில்கள் என மொத்தம் 367 கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

மலையகப் பகுதி ரத்னபுராவில் சிவனொளி பாதமலை (அடம்ஸ் பீக்) என்ற தமிழர்களின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. 1900-ம் ஆண்டு முதல் இது இந்துக்களின் புனித ஸ்தலம். ஆனால், 1970 முதல் இந்தப் பகுதி சிங்கள தரப்புக்கு முக்கியமானதாக ஆக்கப்பட்டது.

இப்போது, அதன் பெயர் ஸ்ரீபாட. இப்போது இதை அரசாங்கம் புத்தர்களின் புனித ஸ்தலமாக அறிவித்து விட்டது. மலையின் அதிகார மேற்பார்வைகளையும் இப் போது புத்த பிக்குகளே கவனிக்கின்றனர்� என்ற தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது இன்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்.

சமீபத்தில், இந்த மலைக்கு நாமல் ராஜபக்ஷே புனித ரத யாத்திரை சென்றதை சிங்கள அரசுசார் பத்திரிகைகள் புகழ்ந்தன. ராஜபக்ஷேவோ தமிழர் பகுதிகளில் இருந்த கோயில்களை இடித்துவிட்டு, திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க வருகிறார், புத்த கயாவுக்குப் பாவம் கழுவ வருகிறார்.

மக்களை போர் சிதைத்து விட்டது, நான் பார்த்தவரை இந்தத் தலைமுறை நிச்சயம் மீள முடியாத நிலைமையில் உள்ளது'' என, வீட்டுக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன். 'இதோடு சாதியும் இங்கு தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது� என்ற வேதனைச் செய்தியைச் சொன்னார் அவர்.

புலிகள் காலத்தில் சாதியப் பாகுபாடுகள் பெரும்பாலும் இல்லை. ஒரு ஆள் இயக்கத்தில் சேருகிறார் என்றால், அவர் பெயர் முதலில் மாற் றப்படும். அது எந்த சாதி, எந்த மதத்தையும் குறிக்காது. அப்படியான பிரபாகரன் தன் மகனுக்கு சார்லஸ் ஆன்டனி என்று பெயர் சூட்டினார்.

அது, 1983-ல் வீரச் சாவடைந்த போராளி சார்லஸ் ஆன்டனி நினைவாக வைத்தது. ஆனால், அதை வைத்து உங்கள் நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம், புலிகளை கிறிஸ்தவ ஆதரவு இயக்கம் என்று வகுத்துக் கொண்டது. அதையே இன்று ராஜபக்ஷேவும் பயன்படுத்திக் கொள்கிறார்.

2009-க்குப் பிறகு, சாதிய ரீதியான கட்டமைப்புகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கி உள்ளன. அதைக் கட்டுப்படுத்த சாதிக்கு எதிரான அமைப்போ, ஆட்களோ இங்கு இல்லை� என்று வேதனைப்பட்டார்.

கிளிநொச்சியை விட்டு வவுனியா ஊடாக மன்னார் நோக்கிக் கிளம்பினேன். ஆங்கிலேயர் காலத்தில் மலையகத்துக்கு சென்றால், 'உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்� என்று ஏமாற்றப்பட்டு இழுத்து வரப்பட்ட தமிழகத் தமிழர்கள், இந்த வழியேதான் ஏக்கங்களை சுமந்தபடியே தோட்டத் தொழிலுக்காக கங்காணிகளின் பின்னால் நடந்து சென்றனர்.

ஊடறுத்துப் பாயும்...

ஜூனியர் விகடன்



புலித்தடம் தேடி...! மகா. தமிழ் பிரபாகரன் தபாகம் 12

சிங்கள ஆண் தமிழ் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத் தமிழ் சமூகத்தின் அடையாளங்களையும் அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை பயணத்தில் அறிய முடிந்தது.
கிழக்கு திமோர் பழங்குடிகளை அழிக்க நினைத்த இந்தோனேசிய இராணுவம், கருத்தடை ஊசிகளை திருமணம் ஆகாத பழங்குடி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் போட்டது. அந்த வகையான சிந்தனைதான் இதுவும்.

'தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தில் சேர்ப்பதும், இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு வழிகளின் மூலமாக இதனை நிகழ்த்திக் காட்ட நினைக்கிறார்கள்’ என்று பத்திரிகையாள நண்பர் ஒருவர் கூறினார். இதை இன நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் நடத்துகிறது இராணுவம்.

தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தின் இச்சைக்கு இரையாக்கி, அதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்யும் ஏற்பாடு. அதுவும், முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை இதனிலும் மோசம். அவர்கள் எங்கு சென்றாலும் இராணுவம் தொடர்கிறது. அவர்களது வீட்டுக்கு இரவில் செல்கிறது. 'காதலி'க்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்! இதற்கு சிங்கள அரசின் அறிவிப்பே ஆதாரமாக உள்ளது.

'தமிழ்ப் பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்’ என்கிறது அரசாங்கத்தின் அறிவிப்பு. அதாவது 30 ஆயிரம் ரூபா சம்பளம் உள்ள இராணுவ ஆள், தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்தால் 60 ஆயிரம் ரூபா கிடைக்கும். இந்த சம்பள உயர்வு 'இனக்கலப்பின் விதைக்காக’! போர்க் காலத்தில் இராணுவத்தில் போர் நிதி என்று வழங்கப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டு விட்டதால், இப்படியாவது சம்பள உயர்வை பெறலாம் என இராணுவ இளைஞர்கள், தமிழ்ப் பெண்களுக்கு அலை​கின்றனர்.

மன்னாரில் உள்ள ஆயர் ஜோசப்பைச் சந்திக்க நண்பரோடு கிளம்பினேன். இடையில் ஒரு மூத்த தமிழ் தொல்பொருள் ஆய்வாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இன்றைய நிலையில் தமிழர் பகுதிகளில் நிகழ்ந்துவரும் தொல்பொருள் ரீதியான சிங்கள ஆக்கிரமிப்புகள் பற்றிக் கூறினார்.

'என்னைப்பற்றி தெரிந்துகொண்டு வாரத்துக்கு ஒருமுறையேனும் என்ட வீட்டுக்கு அரசு தொல்பொருள் பணியாளர்கள் வந்து போகினம். நான் அவர்களிடம் கதைப்பதை இயன்ற வரை எப்படியோ தவிர்த்து விடறன். மீறி அப்படி நான் அவர்களிடம் கதைக்கும்போது, தெரியாமல் எனக்குத் தெரிந்த பழைமையான தமிழ் வரலாற்று இடத்தை உளறிட்டா, அதை எப்படியோ தேடிப்பிடித்து அங்கே புத்த சிலையை புதச்சிடுவாங்கள். மூணு மாசமோ ஆறு மாசமோ கழிச்சு அந்த இடத்தத் தோண்டி புத்த சிலைய எடுத்து, தொல்பொருள் துறைக்கு சொந்தமான காணினு அறிவிச்சிருவாங்க’ என்றார் வேதனை பொங்க.

அவரிடம் இருந்து விடைபெற்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பைச் சந்தித்தேன். அவரிடம் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு பற்றி பேசியபோது,

''மிஷனரிக்குச் சொந்தமான காணியைக்கூட கைப்பற்றி விட்டனர். குறிப்​பிட்ட இடத்தைக் குறிவைத்து விட்டால், அதற்கான கைமாற்றுப் பத்திரத்தையும் தயார் செய்து கொண்டு வந்தே இராணுவத்தினர் காணியைக் கேட்கின்றனர். காணியைக் கொடுப்​பதா, இல்லையா என்பதை அதற்கு உரியவன்தானே முடிவு எடுக்கணும்? இராணுவம் யாரு முடிவு எடுக்க?'' என்றார் கோபக்கனல் வீச.

காணாமல் போனோர், புகலிடம் கோரியவர்​கள் பற்றி இவர் வெளியிட்ட கருத்துகளுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையும் நடத்தி உள்ளது. அரசு தரவுகள்படி 2008-09 ஆண்டு​களில் 1,46,679 பேர் காணாமல் போய் உள்ளனர். அதைக் கண்டுபிடித்துத் தருவதற்கான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

அடுத்து, மன்னாரில் உள்ள இலங்கை - ஜப்பான் நட்புறவு பாலத்தை நோக்கிச் சென்​றோம். மன்னாரின் நிலப்பரப்பையும் தீவுப்பகுதியையும் இணைக்கும் பாலம் அது. 'போர் வெற்றியின் பிரதிபலனாய் இந்தப் பாலத்துக்கு ஜப்பான் உதவி செய்து இருந்தாலும், இந்தப் பாலம் நாட்டுக்கு தேவையான ஒன்றுதான்’ என்றார் நண்பர்.

தண்ணீருக்கு மேலே இரு வழிப் பாதையாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த நட்புறவு பாலச் செலவுக்கு ஜப்பானும் இலங்கையும் ஒதுக்கிய தொகை 1836 மில்லியன் யென் (ஜப்பான்), 640 மில்லியன் ரூபாய் (இலங்கை) ஆகும்.

அந்தப் பாலத்தின் கீழே உள்ள மணல் திட்டை அடைந்தோம். மன்னாரில் பொருளா​தார வளர்ச்சி கடலை நம்பி மட்டுமல்ல... விவசாயத்தை நம்பியும் உள்ளது. கடல் தொழி​லுக்கு இணையான விவசாய வளங்களும் மன்னார் நிலப்பரப்பில் உள்ளது.

மன்னார் கடல் எண்ணெய் வளம் மிக்கது என அறியப்​பட்டதும்... சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, மலேசியா என பல நாடுகள் தங்கள் நாட்​டுக்கு எழுதிக் கொடுக்கும்படி முட்டி மோதின. எந்தளவு எண்ணெய் வளம் இருக்கும் என்று ஆதாரபூர்வமாக இலங்கை அரசு அறிவிப்​பதற்கு முன்னரே, இந்த முட்டல் மோதல் நடந்தது.

இறுதியில் வாய்ப்பு கிட்டியது இந்தியாவுக்கும் சீனாவுக்கும்தான். அமெரிக்கா இலங்கையை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு இருக்கும் செயல்களுக்குப் பின்னால் எண்ணெய் அரசியலும் இருக்கிறது.

பெற்றோலிய வள முன்னேற்ற செயலகத்தின் இயக்குநர் சலிய விக்கிரமசூரியாவின் கூற்றுப்படி - எண்ணெய் வளம் மன்னார் படுகையில் ஐந்து தொகுதிகளும், காவிரி படுகையில் ஐந்து தொகுதி​களும் உள்ளது. (இலங்கையில் காவிரி படுகையா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் ஈழத்தில் உள்ளது போலவே, யாழ் குடா பகுதியில் காவிரி படுகையும் இருக்கிறது.)

அதன்படி, 2008-ம் ஆண்டு ஏல அடிப்படையில் கெய்ன் லங்காவுக்கு மன்னார் தேக்கத்தில் எண்ணெய் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளித்தது இலங்கை அரசு. இது, இந்திய தனியார் நிறுவனம். இதுவரை அந்த நிறுவனம் மூன்று எண்ணெய் கிணறுகளைத் தோண்டி உள்ளது. அதில் இரண்டில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது நான்காவது எண்ணெய் கிணறு அகழ்வுக்கும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்காக 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்​பட்டுள்ளது. இத்தகைய இயற்கை வளங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கைப்பற்றத்தான் பல நாடுகளும் இலங்கையின் அட்டூழியங்களுக்கு துணை நிற்பதை உணர முடிந்தது.

அடுத்து, பூநகரி வழியாக யாழ்ப்பாணம் செல்வதாகத் திட்டம். அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்துக்குக் கிளம்பினேன். இரவு கலந்துரையாடலின்போது, மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு காடுகளில் வசிக்கும் நிலைமையைப் பற்றிச் சொன்னார் நண்பர். '2007 யுத்தக் காலத்துல முள்ளிக்குளம் சனம் இடம்பெயர்ந்து சென்றது.

2010 மீள்குடியேற்ற வேலைகள் நடந்துச்சி. ஆனா, இப்ப சனத்தோட வீட்டில கடற்படையைச் சேர்ந்த குடும்பங்கள் வசிக்குது. அவங்களுக்கு மக்கள் நெருங்காத அளவுக்கு பாதுகாப்பும் கொடுக்குது இராணுவம். மீள் குடியேற்றம்னு பேருல தமிழ் சனத்த காட்டுக்குள்ள குடியமர்த்தி இருக்குது அரசு. சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடியில் முன்னுரிமை கொடுத்து மீன் பிடிக்கச் செய்கிறது இராணுவம்’ என்றார்.

இவர் சொல்வதுபோல் சிங்களக் குடியேற்றம் என்பது வெறும் வாழ்வாதார பிரச்சினை மட்டும் அல்ல. இது எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைக்கு மொத்தமாக முட்டுக்கட்டை போடும் வேலை. இலங்கை அரசின் மனநிலைப்படி, 'சிங்கள குடியேற்றம் என்பது சிங்களவர்களை இலங்கையின் நிலப்பரப்பு எங்கும் பரவச் செய்வதாகும்.

வெளிநாடுகளிலும் ஐ.நா-விலும் தமிழர்களுக்கு உரிமைக் கொடுப்பதற்கான தனி வாக்கெடுப்பு பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டே இருக்கும். வாக்கெடுப்புக்கான நாளை நாம் நெருங்குவதற்கு முன், சிங்களக் குடியேற்றங்கள் முடிந்திருக்கும். சிங்களக் குடியும் தமிழ்க் குடியும் ஒன்றோடு ஒன்று கலந்து, தமிழர்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லாதபடிக்கு அவர்களின் உரிமைத் தேவைகள் நசுக்கப்பட்டிருக்கும்.

எப்படியோ, ஐ.நா-வின் மனசாட்சியை உலுக்க சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடக்​கிறது என்றே வைத்துக் கொள்வோம். முன்பு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வடகிழக்​கிலும் வாக்கெடுப்பு நடக்கும். சிங்கள இனம் சமநிலைமைப் படுத்தப்பட்ட இடத்தில் 'தனி நாடு’ கோரிக்கைக்கு எதிராகவே அதிக வாக்குகள் விழும்.

அப்போது, சிங்கள அரசியல் இனம், 'தமிழர்களே தனி நாட்டுக்கு எதிராக இருக்​கிறார்கள். அதற்கு சான்று வடகிழக்கில் இந்த கோரிக்கைக்கு எதிராக வாக்குகள் பெரும் சதவிகிதம் விழுந்ததுள்ளது’ என பிரசாரம் நடத்தும். அதை ஐ.நா-வும், உலக நாடுகளும் தெரிந்தே தெரியாததுபோல ஏற்கக் கூடும். அப்போது தமிழர்களுக்கான உரிமை மொத்தமாக பாழ்படும்.

தமிழர்கள் வாழ்ந்த, நடைப் பிணங்களாக வாழ்ந்து​கொண்டு இருக்கிற வடகிழக்கில், சிங்கள அரசு உச்ச நிலையான ஆக்கிரமிப்புகளை செய்துகொண்டு இருக்​கிறது. அந்த வழிநிலையின் செயலாக இப்போது தமிழ் ஊர் பெயர்களை அதிகாரபூர்வமாக அரசு சட்ட ஆவணங்களில் சிங்களத்துக்கு மாற்றி இருக்​கிறது.

’பொத்துவில் - பொத்துவிலா, வாகரை - வாகரா, ஆனையிறவு - அலிமன்கடுவா, பரந்தன் - பரந்தேனா, இரணைமடு - ரணமடுவா, மணலாறு - வெலிஓயா, வவுனியா - வன்னிமவா, புளியங்குளம் - கொட்டி​யாவேவா, மாங்குளம் - மா யூ ரவேவா’ இப்படி 89 தமிழ் ஊர்ப் பெயர்கள் முதன்மையாக மாற்றப்பட இருக்கிறது.

தூக்கம் ஒரு தெளிவைத் தரும்’ என்பது ஆரோக்கியத்தின் கூற்று. ஆனால், துக்கம் கொண்ட உள்ளத்துக்கு தூக்கம் ஏது?

இருள் விடிவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டேன். லட்சம் லட்சமாக மக்களை 50 ஆண்டு காலம் தொடர்ச்சியாகக் கொன்றுவிட்டு... இன்று சமாதானம் என்ற பெயரிலும் தந்திரமாகச் சித்திரவதை செய்யும் சிங்களவர்கள் - 'ஒரே நாடு, ஒரே இனம்' என்று அறை​கூவாத குறையாக தங்களுக்குத் தாங்களே வெற்றிச் சின்னங்கள் எழுப்புவதைப் பார்த்தால் துக்கம் எப்படி தாக்காமல் இருக்கும்?

ஊடறுத்துப் பாயும்..

ஜூனியர் விகடன்


Jan 30, 2013

புலித்தடம் தேடி...மகா. தமிழ் பிரபாகரன்-பாகம் 10

ஆயுதப் போராட்டம் மெள்ள அடங்கி சமாதானச் சம்மதங்களில் அகிம்சையை ஈழம் பின்பற்றிய காலம். அன்றுதான் உயிருக்கும் உடலுக்கும் இடையேயான போரில் இருந்து மீண்டு, ஈழத்துக்குத் திரும்பினார் அன்டன் பாலசிங்கம். அவர் வந்து இறங்கிய இடம், இரணைமடு. அந்த இடத்தில் நான் இப்போது நிற்கிறேன்.பாலசிங்கத்தோடு அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் கொழும்பு நோர்வே தூதரகத்தைச் சேர்ந்த தோமஸும் வந்திருக்க, அவர்களை வரவேற்க பிரபாகரன், அவரது மனைவி மதி​வதனி, சூசை, நடேசன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மூத்த புலி உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
பாலசிங்கம் மீது பிரபாகரன் எத்தகைய பாசத்தையும் மரியாதையையும் வைத்துள்ளார் என்பதை அடையாளப்படுத்தும் புகைப்படங்கள் அவை. புலிகளின் இணையதளங்கள் இவற்றை அந்தக்காலத்தில் பெருமையாக வெளியிட்டன. அத்தகைய படங்களை இன்று, சிங்கள அரசே காட்சிப்படுத்தி இந்த இடத்தில் வைத்துள்ளது.இரணைமடு என்ற இடத்துக்கு என்ன பெருமை தெரியுமா? பாலசிங்கம் வந்து இறங்கிய இடம், பிரபாகரன் அவரை வரவேற்ற இடம் என்பதை பெருமைக்குரிய வரலாற்றுச் சம்பவமாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.1998-ம் ஆண்டின் இறுதியில் கடுமையான சிறுநீரகப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டு இருந்தார் பாலசிங்கம். அவருக்குச் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல நோர்வே அரசாங்கமும் செஞ்சிலுவைச் சங்கமும் முயற்சித்தது.ஆனால், அப்போதைய சந்திரிகா அரசு கடுமையான நிபந்தனைகளைப் புலிகளுக்கு முன்வைக்க, பாலசிங்கத்தையும் அவரது மனைவியையும் கடல் வழியாக தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.அங்கிருந்து தன் இங்கிலாந்து கடவுச்சீட்டின் மூலம் லண்டன் சென்றார். 'தாயகத் தேசத்தில் மீண்டும் நான், அதுவும் உயிரோடு என்ற நிலையில் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை’ என்று தன்னுடைய புத்தகத்தில் சொல்லும் அளவுக்கு, அப்போது பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலைமையில் இருந்தார்.அவர் வெளிநாடுகளில் இருந்த மூன்றாண்டுகளில் சந்திரிகா ஆட்சியில் இருந்து ரணில் விக்கரமசிங்க ஆட்​சிக்கு இலங்கை மாறி இருந்தது. சமாதானக் காலமும் நடைமுறையில் இருந்தது. ஆனாலும், பாலசிங்கம் கொழும்பு வழியாக வருவதை புலிகள் விரும்பவில்லை.ஏனென்றால், சிங்கள அரசு மீது அவர்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. அதனால், நோர்​வேயின் ஏற்பாட்டில் லண்டனில் இருந்து மாலைதீவுக்கு வந்து, அங்கிருந்து மாலைதீவின் கடல் விமானத்தில் இரணைமடு குளத்தில் வந்திறங்கினார். அந்த இரணைமடு குளம் இப்போதும் அப்படியே இருக்கிறது.கிளிநொச்சியின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் குளம் அது. இதன் அருகே காடு தென்படுகிறது. அங்குதான் புலிகள் 1993-ம் ஆண்டில் விமான ஓடுதளத்தை அமைத்தனர். அது இப்போது இராணுவ வசம். அதைப்பற்றி கூறிய நண்பர், ''சீரமைப்பை காரணம் காட்டி நீர்த் தேக்க அளவை இராணுவம் குறைச்சிருச்சு.கிளிநொச்சிக்கே நீர்த் தேவை இருக்கு. அதைப் பூர்த்தி செய்யாம, யாழ்ப்பாண குடிநீர்த் தேவைக்கு இங்கே இருந்து நீர் கொண்டு போறதா அரசு சொல்லி இருக்கு. இது யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் சண்டை மூட்டிவிடும் வேல. இன்னுமும் இரணைமடு குளத்தைச் சுத்தியுள்ள இடங்கள இராணுவம் உயர் பாதுகாப்பு வளையங்களாகதான் வச்சிருக்கு'' என்றார்.நான் சென்றிருந்தபோது குளத்தின் நீர்மட்டம் மிகக் குறைவாகத்தான் இருந்தது. அந்தக் குளம் அருகே ஒரு இராணுவச் சிற்றுண்டி, புத்த கோயில் ஆகியவை இருந்தன. குளத்தின் மேம்பாட்டு அலுவலகம் எல்லாம் இராணுவ அலுவலகமாக மாறி இருந்தது. துப்பாக்கி ஏந்திய ஆமியின் ஒரு ஆள், வந்து போகிறவர்களை கவனித்துக்கொண்டு மட்டும் இருக்கிறார்.இரணைமடு குளத்தைப் பார்த்துவிட்டு நண்பரும் நானும் கிளம்பினோம். அங்கே வரும் வழியில் இராணுவ முகாம்கள் இருந்தன. அதன் முன் அரண்களில் புலிகளின் பீரங்கிகள், ஆட்லறி தாக்கிகள் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அங்கு எல்லாம் நின்று பார்க்கக் கூடாது; போகிற போக்கில் பார்வையில் பதிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.இராணுவத்தின் கடைநிலை ஆட்கள் பனங்கன்றுகளை ஊன்றிக்கொண்டு இருந்தனர். போரில் பல ஆண்டுகள் பழைமை கொண்ட பனைமரங்களை குண்டுகளாலும் செல்களாலும் அழித்த இராணுவம், 'தேசிய மர நடுகைத் திட்டத்தின்’ கீழ் பனங்கன்றுகளை நடுகிறது. இது சிங்களத்தில் 'தெயட செவன’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கென்று பனை அபிவிருத்திச் சபையும் அமைக்கப்பட்டு உள்ளது.இது, அழித்த மரங்களை நடும் திட்டமல்ல இதன் நோக்கம் பனை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்துவதுதான். இதைப்பற்றி கொழும்பில் இருக்கும் நண்பர் ஒரு நிகழ்வை குறிப்பிட்டு இருந்தார். 'பனை மரத்தை சிங்கள தேசிய அடையாளமாகக் காட்டுவதற்கு கொழும்பு கடற்கரையில் முழு பனைமரத்தை அப்படியே கொண்டுவந்து வைத்தனர். அது இறந்து விட்டது.இப்போது முழு தென்னை மரத்தை கொண்டு வந்து வைத்து உள்ளனர்’ என்றார். அப்படியான மரங்களின் பிடிப்புக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதை நானே கொழும்பில் கண்டேன். அந்த மரங்களும் காய்ந்து சாகும் நிலைமையில்தான் இருந்தன. ராஜபக்ச அரசுக்கு தேவை எல்லாம், 'இலங்கை மண்ணில் தன் அரசு நினைப்பதைதான் இயற்கையுமே செய்தாக வேண்டும்’ என்பதுதான்.இப்படியான சம்பவங்களை நானும் நண்பரும் பேசிக்கொண்டே வர, இரணைமடு சந்தி வந்தது. அங்கும் இராணுவத்தின் வெற்றிச் சின்னம் ஒன்று உள்ளது. அந்த வெற்றிச் சின்னத்தின் சுவரில் குண்டு பாய்ந்து சுவர் பிளந்துள்ளதைப் போன்றும், பிளந்துள்ள இடுக்கில் சிங்கள தேசிய மலரான 'நீல அல்லி’ உதித்தது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிட்ட மாலதி 1987-ல் மரணம் அடைந்தார். இவரே புலிகளின் முதல் பெண் மாவீரர். மாலதியின் நினைவாக இரணைமடுச் சந்தியில் ஒரு நினைவிடத்தை புலிகள் அமைத்து இருந்தனர். அந்த நினைவிடத்தைப் பற்றி நண்பரிடம் கேட்டேன். அவர் காட்டிய இடத்தில், அப்படி ஒரு நினைவிடம் இருந்ததற்கான அடையாளமே இல்லை.
அந்தச் சந்தியில் இருந்து சாலையைக் கடக்க... பொலிஸ்காரர் நிறுத்தினார். அப்போதுதான் கவனித்தேன், தலைக்கவசத்தை அணியாமல் நான் கையில் வைத்திருந்ததை. ஆம்! இலங்கைச் சட்டப்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடிய இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும். அரை மணி நேரம் நிற்க வைத்து, பிறகு போக அனுமதித்தார் அவர்.
வண்டியில் போகும்போது நண்பர், 'தமிழீழ வாகனச் சட்டம்’ பற்றி கூறினார். ''இலங்கைச் சட்டப்படி 'இவ்வளவு கி.மீ. வேகம்’ என்ற கட்டுப்பாடு உள்ள இடத்தில் எவ்வளவு வேகம் போனாலும் ஒரே அபராதம்தான். ஆனால், புலிகளிடம் அப்படி இல்லை, ஒவ்வொரு கி.மீ. வேக அதிகரிப்புக்கும் தனித் தனியாக அபராதம் விதிப்பார்கள்.
ஒரு முறை இலங்கை நீதிபதி ஒருவர் குடித்துவிட்டு அதிவேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார். அந்த வாகனத்தை புலிகளின் வாகனப் பிரிவு பொலிஸார் நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர்.
உடனே அவர், தமிழ்ச்செல்வனுக்கு அழைத்து முறையிட, 'நானே அவ்விடத்தில் வேக​மாகச் சென்றதற்காக அபராதம் செலுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார். நீதிபதி, 'கட்ட முடியாது’ என்று சொல்ல... 'இல்லை என்றால், நீங்கள் போக முடியாது’ என்று கூறியுள்ளார். 'உங்களிடம் பணம் இல்லை என்று சொல்லுங்கள். நான் தருகிறேன்.
ஆனால், கட்ட முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், நீங்கள் போக முடியாது. நான் இதில் தலை​யிட முடியாது’ என்று கூறிவிட்டார் தமிழ்ச்செல்வன். பணத்தைச் செலுத்திய பிறகுதான் சென்றுள்ளார் நீதிபதி. இந்தக் கடுப்பில் அதே நீதிபதி ஒரு வழக்கில் பிரபாகரனுக்கு கடுமையான தண்டனைகள் விதித்துள்ளார்’ என்று சொல்லிச் சிரித்தார் நண்பர்.
அதற்குள், நண்பர் ஒருவரின் வீட்டை அடைந்​தோம். நல விசாரிப்புகளுக்குப் பிறகு இப்போதைய நிலைமைகளை அவர் குறிப்பிட்டார். ''எல்லோரும் சமாதானப் போர், பொருளாதாரப் போர் என்று எது எதோ சொல்றாங்கள். ஆனால், உண்மையில் இங்கு நடந்துகொண்டு இருப்பது கலாசாரப் போர். அனுராதபுரம் என்பது சிங்கள கலாசார நகரம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
இப்போ நீங்க வந்த சந்திப் பக்கம் போருக்கு முன்ன 'பாண்டியன் ஐஸ்கிரீம் கடை’ இருந்தது. அவ்விடம் இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள கலாசார இடமாக மாறும். அனுராதபுரத்துல இருந்து கற்களை இங்க கொண்டுவந்து போட்டிருக்காங்க. அதில் கழிவு நீர ஊத்தறது என் கண்கூட பாத்திருக்கன். கழிவு நீர ஊற்ற ஊற்ற அது பழைய கல்போல ஆகும்.
அதன் பின் ஆய்வாளர்களை அழைத்து அனுராதபுர கல்லையும், இரணைமடு சந்தியில கொண்டு வந்து போட்ட கல்லையும் ஒப்பிடுவாங்க. அதன் தொடர்ச்சி இங்கிருக்குனு சொல்லி 'சிங்களத்தின் பூர்வீக நிலம்’னு நினைவிடம் கட்டுவாங்க'' என்றார்.
தமிழ்ப் பகுதிகள் சிங்களத்தின் பூர்வீகம் என்ற அடையாளம் காட்டப்படுவதற்கு இவர் குறிப்பிட்டது​போல் பல வேலைகள் தமிழர் பகுதிகளில் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதனால்தான் இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து விலக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது இலங்கை அரசு.இப்போது நாங்கள் கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கி நகர்கிறோம். உடன் வந்திருந்தவர் ஒரு கவிஞர். ''பொதுவாகவே நவம்பர் மாத இறுதியில் துயிலும் இல்லங்களுக்குச் செல்லும் வீதிகள் கண்ணீரால் நனைக்கப்பட்டு இருக்கும். தமிழீழமே சோக கீதத்தை இசைத்துக் கொண்டு இருக்கும்.போராளிகளை நினைவுகூரும் நினைவிடங்கள் ஈழத்தில் இருந்ததுபோல், எந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் முனைப்பிலுமே இருந்தது இல்லை. அப்படிப்பட்ட புலிகள், சிங்கள இராணுவத்தை நிராயுத பாணிகளாக பிடித்தால், ஒரு அடிகூட அடிக்க மாட்​டார்கள்.இவ்வளவு ஏன், முள்ளிவாய்க்கால் முடிவுக்கு முன்னர்கூட, எட்டு சிங்கள இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்தனர். ஆனால் இன்று மாவீரர் துயிலும் இடங்களை அடையாளம் இல்லாமல் ஆக்கி விட்டனர்'' என்ற அவர், தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட பாலஸ்தீன மாவீரர் பாடல் ஒன்றை நினைவு படுத்தினார்.''ஓ! மரணித்த வீரனே... உன் சீருடைகளை எனக்குத் தா, உன் பாதணிகளை எனக்குத் தா, உன் ஆயுதங்​களை எனக்குத் தா, ..... எவருமே காணாத உன் இரு துளி கண்ணீரை... தப்பி ஓடும் உன் இருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை உன் தோழன் இருக்கூராய் உண்டாடப்பட்டதனால் உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து​கொள்வதற்கு...'' என்று விடுதலைப் போரின் வலியை சொல்லும் அப்பாடலை நினைத்தவாறு மாவீரர் துயிலும் கல்லறைகளை நோக்கி நகர்கிறேன்.
ஊடறுத்துப் பாயும்..
ஜூனியர் விகடன்