Nov 4, 2011

ஜெ., மனு: சுப்ரீம் கோர்ட் மீண்டும் நிராகரிப்பு சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு !


பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் நேரில் ஆஜராகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 20, 21 ந்தேதிகளில் ஆஜராகி 500க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Nov 3, 2011

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.82 பைசா உயர்வுபெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.82 பைசா உயர்வு

திமுக தனது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நவம்பர் மத்தியில் கூட்ட முடிவு! கடும் அதிர்ச்சியில் கருணாநிதிதிமுக தனது கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நவம்பர் மத்தியில் கூட்ட முடிவு கடும் அதிர்ச்சியில் கருணாநிதி

ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள்? அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ! !இரட்டை குழந்தைக்கு அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7 ஸ்டார் மருத்துவமனையில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் (ஒரு ஆண், ஒரு பெண்) பிறக்கலாம் என அமிதாப் பச்சனின் குடும்ப ஜோதிடர் ஒருவர் உறுதியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அன்று காலை(நவம்பர் 11) சரியாக காலை 11 மணி 11 நிமிடம் ஆகும் போது குழந்தைகள் பிறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nov 2, 2011

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணபுரத்தில் இளையராஜாவின் அம்மா சமாதி அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடந்த சில நாட்களாகவே வைரஸ் காய்ச்சலும், லேசான நெஞ்சுவலியும் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை ஜீவாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம்(31.10.11) இரவு 10மணியளவில், ஜீவாவிற்கு நெஞ்சுவலி அதிகமாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தெலுங்கு படத்தின் இசையமைப்புக்காக இளையராஜா ஐதராபாத் சென்று இருந்தார். தகவல் அறிந்து உடன் அவர் சென்னை திரும்பிவிட்டார்.

மறைந்த ஜீவாவின் உடல் நேற்று சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் ‌அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஜீவாவின் உடலுக்கு மதிமுக. பொதுச்‌செயலாளர் வைகோ, தி.மு.க.,தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், , தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாச்சலம், உதயநிதி ஸ்டாலின், டைரக்டர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, கஸ்தூரி ராஜா, வஸந்த், சந்தானபாரதி, மகேந்திரன், நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, விஷால், நடிகைகள் குஷ்பூ, அபர்ணா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, ஸ்ரீகாந்த் வேதா, உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.


 இறுதி சடங்கில் டைரக்டர்கள் பாரதிராஜா, விஷ்ணுவர்தன், ஸ்டான்லி, அமீர், லெனின், ரத்னகுமார், நடிகர்கள் வைபவ், ஜெய், விஜய் வசந்த், சிவா, கிருஷ்ணா, மற்றும் இளையராஜாவின் மகன், மகள் மற்றும் குடும்பத்தார் ‌கங்க‌ை அமரன், பிரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

பின்னர் ஜீவாவின் உடல் நேற்று இரவு 12.50 மணியளவில் இளையராஜாவின் சொந்த ஊரான தேனிமாவட்டம் அருகேயுள்ள பண்ணபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இன்று(02.11.11) மதியம் 12.30 மணியளவில் கூடலூர்-லோயர்கேம்ப் ரோடு அருகேயுள்ள இளையராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Nov 1, 2011

இளையராஜாவின் மனைவி ஜீவா மாரடைப்பு கார ணமாக காலமானார்.


 பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா (58)மாரடைப்பு கார ணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.


சென்னை தியாகராய நகரில் குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இரவு 10.40 மணியளவில் அவர் காலமானார்.
பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரி மகள் ஆவார். இசையமைப்புப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ள இளையராஜாவுக்கு, ஜீவா மறைந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாகப் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை வருகிறார்.
அதன் பின்னரே, இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் தெரிய வரும் என இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்தார்.
இளையராஜா- ஜீவா தம்பதியருக்கு கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர்.

Oct 31, 2011

காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு ராஜபக்சே பேச்சு: கனடா பிரதமர் புறக்கணிப்பு காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு ராஜபக்சே பேச்சு: கனடா பிரதமர் புறக்கணிப்பு

பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

இலங்கையில் 2013ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.
ராஜபக்சேவை மாநாட்டில் பேச அழைக்கப்பட்டதும் கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் ராஜபக்சேவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார்.

கடந்த வாரம் ராஜபக்சேவுடன், ஸ்ரீபன் ஹாபர் நேரடியாக பேசியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவரிடம் விவாதித்தார். காமன்வெல்த் கூட்டத்திற்கு முன்பாக இதற்கு இலங்கை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியிருந்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்சேவின் உரையை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதன்படி ஹாபர் வெளிநடப்பு செய்தார்.
                   இதில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் ழூசுப் ரசா கிலானி உள்பட 54 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு நேற்று விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோரை, இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி  சந்தித்தார்

நடிகை மனோரமாவுக்கு நாளை (01/11/2011) ஆபரேஷன்பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது.  அடிபட்ட இடத்தில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.
  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், மனோரமாகோமாநிலைக்குச் சென்றுவிட்டதாகவும், கவலைக்கிடமாக உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனால், திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது
அவரை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததின் பேரில் நேற்று அவருக்கு லேசாக நினைவு திரும்பியது. டாக்டர்கள் அவர் பெயரை சொல்லி அழைத்த போது லேசாக கண் திறந்தார்.

மனோரமாவின் மகன் , அம்மா இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரது தலையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதால், அதை ஆபரேஷன் மூலம் நீக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை (01/11/2011)ஆபரேஷன் நடக்கிறதுஎன்றார்.

சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல்
 சென்னை, தி.நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு மாதம் முன்னரே அறிவிப்பும் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத சூழ்நிலையில், கடந்த வாரம், சென்னை உயர்நீதிமன்றம் இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை கண்டித்தது.
இந்நிலையில், இன்று காலை 5 மணி முதல் தி.நகர் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணியை அவர்கள் மேற்கொண்டனர்.
சில கட்டடங்கள் வர்த்தகக் கட்டடங்கள் என்பதால், இரவு தூங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் உள்ளிருப்பில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரிகள் அவர்களை வெளியேற்றிய பிறகு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனார்.