Jul 9, 2012

'செயல்படாத பிரதமர் மன்மோகன்' - டைம் இதழ் கருத்து !


'செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங்' என்று அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் அட்டைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

'டைம்' பத்திரிகையின் ஆசியப் பதிப்பு அடுத்த வாரம் வெளிவர உள்ளது. அதில் மன்மோகன் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில், 'மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை; நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், மன்மோகன் சிங் செல்வாக்கை இழந்து வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளாக தனது நம்பிக்கைத் ததும்பும் சாந்தமான முகத்தை மன்மோகன் சிங் இழந்துவிட்டார். அவர் தனது அமைச்சரவை சகாக்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் திணறுகிறார்.தாற்காலிகமாக நிதியமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தாலும், தான் கொண்டு வர முயற்சிக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் உதவக்கூடிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் முட்டுக்கட்டை போடப்படுகின்றன...''இப்படி அடுக்கடுக்காக நீளுகின்றன, பிரதமர் மன்மோகன் சிங் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள்.

அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர் என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கை, டைம் பத்திரிகை காய்ச்சி எடுத்து இருப்பதன் பின்னணி குறித்து நடுநிலையாளர்கள் அலசத் தொடங்கி இருக்கிறார்கள். டைம் சொல்லும் சேதியில் முக்கிய விஷயத்தில் ஒன்று... '1990-களில் நிதி அமைச்சராக இருந்தபோது... பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், தற்போது மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். தொழிலதிபர்கள் தெரிவிக்கும் யோசனைகளான மானியங்களை குறைத்தல், டீசல் விலை நிர்ணயத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதித்தல், மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதியளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலை என அவருடைய கைகள் கட்டப்பட்டுள்ளன' என்று 'டைம்' கூறியிருக்கிறது!அதாவது, மன்மோகனின் கைகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று டைம் அல்லது அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது. 

பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் பற்றி, இந்தியர்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை.

நன்றி விகடன்