தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பேனா முனையின் வலிமையை நிரூபித்தவர் பேரறிஞர் அண்ணா
அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா