Nov 19, 2011

நடிப்புக்கு முழுக்கு போடா மாட்டேன் நடிகை மந்த்ராபேடி !

நடிப்புக்கு முழுக்கு போட்டதாக கூறுவது உண்மையல்ல என்கிறார் மந்திரா பேடி. ‘மன்மதன்Õ படத்தில் சிம்புவுடன் நடித்தவர் இந்தி நடிகை மந்திரா பேடி. இவர் கூறியதாவது : குழந்தை பிறந்துவிட்டதால் நான் நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். அது சரியல்ல. ஆனால் என் வாழ்க்கையில் எல்லாம் மாறி இருக்கிறது. கர்ப்பமாகி 7 மாதம் வரை நான் நடித்துக்கொண்டிருந்தேன். அதன்பிறகுதான் ஓய்வு இப்போது என்னிடம் எல்லாமே மாறி இருக்கிறது.

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களில் சிபிஐ ரெய்டு!:அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்

அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக தனியார் செல்போன் நிறுவனங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லியிலுள்ள தனியார் செல்போன் நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிரடி சோதனையில் ஈடுப்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையீட்டால் சிபிஐ கடந்த சில மாதங்களாக இந்த அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இன்று நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nov 17, 2011

பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு தலைவர்கள் கடும் எதிர்ப்பு


பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தும்:தமிழக அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும், மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதற்கும் அவர்கள் கண்டித்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் மற்றும் பால் விலையை உயர்த்தப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள்:

 மதிமுக பொதுச் செயலர் வைகோ:
"ஜெயலலிதாவின் மக்கள் விரோத போக்கின் அடையாளம்தான் இந்த விலையேற்றம். இலவச திட்டங்களை கொடுத்து விலையை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது."
 
 திமுக தலைவர் கருணாநிதி:
பேருந்து கட்டணம், பால் விலை உயர்வை கண்டிக்கிறேன். விலை உயர்வுக்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து, திமுக தனது கருத்தை தெரிவிக்கும். தேவைப்பட்டால் திமுக போராட்டத்தில் ஈடுபடும்.

சீனாவை பார்த்து பயப்படவில்லை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

சீனாவை பார்த்து பயப்படவில்லை'' என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறினார். ஆஸ்திரேலியாவில் கூடுதலாக ராணுவ முகாம்கள் அமைத்து ஆயுதங்களை குவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீன பிரதமர் வென் ஜியாபோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஹவாய் தீவில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பெராவுக்கு நேற்று வந்தார். இங்கு பிரதமர் ஜூலியா கில்லார்டை சந்தித்து, ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவ முகாம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஜெயலலிதா அதிரடி பேருந்து கட்டணம் உயர்வு !

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருப்பதாகவும் குறிப்பாக போக்குவரத்து துறையும், மின்சார துறையும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மின்துறையில் 40659 கோடி கடன் தொகையும் போக்குவரத்து துறையில் 6150 கோடியும் கடன் தொகையும் நிலுவையில் உள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் போக்குவரத்து கழங்கள் திவாலாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் மதுரையில் அழகிரி பேட்டி

மதுரையில் அழகிரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.பேட்டியின்போது அவர்  கூறியதாவது:
 உள்ளாட்சித்தேர்தலுக்குப்பின் தி.மு.க., எழுச்சியுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்தைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அணு வல்லமையைத் தடுக்கும் தீய சக்திகள்! எஸ். குருமூர்த்தி

தமிழ்நாட்டில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், சின்னத்திரையில் வரும் சீரியல்போல கடந்த சில வாரங்களாகத் தொடர்கிறது. ரூ.13,000 கோடியில் கட்டப்பட்டுள்ள அணு மின் நிலையத்தின் உண்மை நிலையை உணராமல், சில ஊடகங்கள், செய்திகள் இல்லாமல், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தையே பிரதானப்படுத்தி ஒளிபரப்பி வந்தன. ஆனால், இப்போது அவை அதைக் குறைத்துக் கொண்டுவிட்டன. 
தொடர்ந்து கட்டுரை வாசிக்க சுட்டியை சொடுக்கவும் நன்றி தினமணி 
 அணு வல்லமையைத் தடுக்கும் தீய சக்திகள்! எஸ். குருமூர்த்தி

பேஸ்புக்கில் செக்ஸ் படங்கள் பெங்களூரில் பரபரப்பு 2 லட்சம் பேர் பாதிப்பு

பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். சமூக இணையதளமான பேஸ்புக் இளைஞர்களிடையே ம¤கவும் பிரபலம். இன்டர்நெட் வசதி இருக்கும் பெரும்பாலானோர் பேஸ்புக் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். போட்டோ, தகவல்களை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

வங்கிகளில் கடன் வாங்கி விட்டு,திருப்பிச் செலுத்தாத, 100 தொழிலதிபர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்' என, ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு!

அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த, பி.பி.கபூர் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும்' என கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை நிராகரித்த ரிசர்வ் வங்கி, "வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர், விவரங்கள்

Nov 16, 2011

அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்! பழ. நெடுமாறன்


அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது.....................
இந்த கட்டுரை தினமணி யில்  வெளியாகியள்ளது  கீழே யுள்ள சுட்டியை சொடுக்கவும்

நன்றி தினமணி 

இந்தியர்கள்! 40,000 பேர் வேலைக்கு உலை வைத்தது யு.கே-


வரும் ஆண்டில் 40,000 பேருக்கு வேலை கிடைக்காத வகையில் புதிய ஆள் குறைப்பு நடவடிக்கையை இங்கிலாந்து மேற்கொண்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியர்கள்தான்.

நில அபகரிப்பு வழக்கில் நடிகரும் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று அதிகாலை கைது


 நில அபகரிப்பு வழக்கில் நடிகரும் ராமநாதபுரம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை காஞ்சிபுரம் போலீசார் எழுப்பி கைது செய்து எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு திமுகவினர் திரண்டதால் பரபரப்பு

பெண் குழந்தை பிறந்தது.உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு




நடிகை ஐஸ்வர்யாவுக்கு 11&11&11ல் குழந்தை பிறக்கும், ஆணா, பெண்ணா என்று கூறி ‘பெட்’ கட்டி ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 11ம் தேதி குழந்தை பிறக்கவில்லை.


இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 14ம் தேதி லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள 5வது மாடியில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Nov 15, 2011

கூடங்குளம் போராட்டக்காரர்கள் அப்துல்கலாம் கூறியதை கொச்சைபடுத்த கூடாது : இல.கணேசன்

நாகர்கோவில் கிருஷணன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வந்த தமிழக பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அணுமின் நிலைய விவகாரத்தில் யுரேனியம் போன்ற எரிபொருளுக்கு அந்நிய நாடுகளை சார்ந்து இருக்க கூடாது. நமது நாட்டில்  கிடைக்கும் தோரியம் போன்ற எரிபொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நமது நாட்டிலேயே எரிபொருளை தயாரிக்க

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா கிடையாது: அமெரிக்கா உறுதி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொடர்பான விசா கொள்கையில் மாற்றமில்லை என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்க வர்த்தகத்துக்கு குஜராத் மாநிலம் சிறந்த வரவேற்புக்குரிய சூழலைப் பெற்றுள்ளது என அந்த நாடு தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் இதைத் தெரிவித்தார்.
குஜராத் மதக் கலவரங்களுக்கு சம்பவங்களுக்கு மோடிதான் பொறுப்பு என்பதால் அவருக்கு விசா வழங்க முடியாது என அமெரிக்க முன்பு மறுத்திருந்தது. அந்த கொள்கையில் மாற்றமில்லை என பிளேக் கூறினார்.

அணு ஆயுதங்களை தாங்கி,3,000 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி !

அணு ஆயுதங்களை தாங்கி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அக்னி 2 ஏவுகணைகளின் துல்லிய தன்மை மற்றும் தாக்கும் தூரத்தை மேம்படுத்தி அக்னி 2 பிரைம் ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. அக்னி 2 ஏவுகணை,

Nov 14, 2011

ரயில் டிக்கெட் விலை விரைவில் உயரும்: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

ரயில் டிக்கெட் விலை விரைவில் உயரும்: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி
கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும், ரயில்வே கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணத்தை சிறிதளவு உயர்த்தினால், ரயில்வே நிர்வாகம், மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய முடியும். இருப்பினும், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே, கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? தினமலர் தமிழனை கொச்சை படுத்தி செய்தி வெளியிட்டதற்கு கண்டனங்கள் குவிகிறது! தமிழன் சொரணை கெட்டவனா? இதோ தினமலர் வெப்சைட் லிருந்து கணைகள்

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? தினமலர் தமிழனை கொச்சை படுத்தி செய்தி வெளியிட்டதற்கு கண்டனங்கள் குவிகிறது! தமிழன் சொரணை கெட்டவனா? இதோ தினமலர் வெப்சைட் லிருந்து கணைகள்

simeshwaran - chennai,இந்தியா
2011-11-14 09:57:51 IST Report Abuse
ஸ்டுபிட் நியூஸ்...........
    Share this comment

    Mohan Balakrishnan - marib,ஏமன்
    2011-11-14 09:56:24 IST Report Abuse
    தவறு செய்த கொடிய மிருகத்திற்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது அவ்வளவுதான். அதற்கு மேல் கருத்து எதுவும் கூறுவதற்கு அருகதை இல்லாத விஷயம் இது.

    பொட்டு சுரேஷ் ரிலீஸ் : அழகிரி எஸ்கேப்

    பொட்டு சுரேஷ் விடுதலை
    மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ்,  கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி, மதுரை திருமங்களத்தை சேர்ந்த பாப்பா கொடுத்த நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.   அடுத்து  அவர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட நான்கு வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் பாளை  சிறையில் அடைக்கப்பட்டார்.

    Nov 13, 2011

    அமெரிக்க ஏர்போர்ட்டில் அப்துல் கலாமிடம் கோட்,ஷூவை கழற்றி 2 முறை வெடிகுண்டு சோதனை !


     அமெரிக்க ஏர்போர்ட்டில் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் கோட், ஷூவை கழற்றி பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை வெடிகுண்டு சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.