குழந்தைகள் செலவுசெய்யும் பணத்தை அதுவாகவே கணக்குவைத்துக் கொள்ளும் என்பதும் அபிலாக்ஷாவின் கருத்தாகும்.இந்த கருத்தை நிதி நிபுணர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.சித்திரமும் கைப் பழக்கம் என்பது போல, பணத்தைக் கையாள்வதும் கூட பழக்கத்தின் அடிப்படையில்தான் என சொல்லும் இவர்கள், குழந்தைகளின் செலவுக்கு ஓரளவு பணம் தருவதில் தவறில்லை என்கிறார்கள்.குழந்தைக்கு பணம் தருவதில் தவறில்லை. அது செலவு செய்வதற்குகூட நாம் உதவிபுரியலாம் என நிதி ஆலோசகர் பார்வதி தெரிவிக்கிறார்.ஆனால், இவ்வாறு தரப்படும் பணம், ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டியது அவசியம்.இல்லாவிட்டால், அதுவே பாதகமாக முடியவும் வாய்ப்புண்டு.சில பணக்கார குழந்தைகளுக்கு பணம் நிறைய தந்துவிட்டு பெற்றோர் அதை கண்காணிப்பதே இல்லை. அவ்வாறு இல்லாமல் அக்குழந்தைகள் செய்யும் செலவை கண்காணிப்பது அவசியம் என மனோதத்துவ நிபுணர் அபிலாக்ஷா தெரிவித்துள்ளார்.கண்காணிப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகள் எதை எப்படி அணுக வேண்டும் என சொல்லித்தர வேண்டிய அவசியமும், பெற்றோரிடம்தான் உள்ளது.ஆனால், அதை மறைமுகமாக, அதாவது சர்க்கரை தடவிய மாத்திரைகளைப் போல அளிப்பதே புத்திசாலித்தனமாகும்.குழந்தைகளுக்கு விளையாட்டுகள் மூலமாக சேமிப்பு குறித்து விளக்கலாம் நிதி ஆலோசகர் பார்வதி தெரிவித்துள்ளார்.இப்படியெல்லாம் பயிற்றுவிக்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் சந்திக்கும் திடீர் நிதி நெருக்கடிகளை திறமையாக சமாளிக்கும் திறன் பெற்றவர்களாகவும், அதில் இருந்து மீளும் தன்னம்பிக்கை பெற்றவர்களாகவும் இருப்பார்கள் என்பது பலரது கருத்து.அத்தகைய குழந்தைகள், இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றுவார்கள் என்று சொன்னால், நம்ப முடிகிறதில்லையா?
Sep 7, 2013
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கும் சேமிப்பு குறித்து சொல்லித் தருவது வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது
Sep 2, 2013
உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்துள்ளது. சோமாலியா நாட்டின் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதுநாஞ்சில் சம்பத்,
கூட்டத்தில்
கட்சியின் கொள்ளை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு
பேசியபோது, ’’தமிழகத்தில் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு கட்சியை தொடங்கி
1977-ல் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து அவர் 3 தடவை முதலமைச்சராக பதவி
வகித்தார். இதுவரை எந்த தலைவராலும் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர்.
மறைவிற்கு பிறகு 89-ம் ஆண்டு அ.தி.மு.க. இரண்டாக பிளவு பட்டு இரட்டை இலை
சின்னம் முடக்கப்பட்டதால் கருணாநிதி ஆட்சியை பிடித்தார். அதன் பின்னர்
அ.தி.மு.க. ஒன்றாகி இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்ட பின்னர் 1991-ம் ஆண்டு
ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
2011-ம் ஆண்டு 3–வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
மத்திய
அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவில் தற்போது பொருளாதார நெருக்கடி
உருவாகி உள்ளது. பலவிதமான அச்சுறுத்தல்கள் வருகின்றன. இப்போது லடாக் வரை
சீனா ஊடுருவிவிட்டது. 5 ராணுவவீரர்களை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றுவிட்டனர்.
வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் 1 ரூபாயின் மதிப்பு ஒரு டாலராக இருந்தது.
ஆனால் இப்போது 67 ரூபாய் கொடுத்தால்தான் 1 டாலர் கிடைக்கும்.
இதனால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிந்துள்ளது. சோமாலியா நாட்டின் நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
குறை, குற்றம் ஏதாவது சொல்ல முடியுமா? எல்லா பிரச்சினைக்கும் தீர்வு
கண்டுள்ளோம். மத்திய அரசு 28 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியும்
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப் படவில்லை. வருகிற
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்
முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமராக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்’’என்று
தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)