Dec 17, 2011

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன் (4) வராகமித்திரர்


சந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திர அறிஞர் வராகமித்திரர். உஜ்ஜயினியில் 505-ம் ஆண்டு பிறந்தார். கிரகணம் வரப்போவதை முன் கூட்டியே அறிந்து சொல்லும் எளிய முறையை வராகமித்திரர் கண்டறிந்தார். அதாவது, எண்ணெய்க் கிண்ணம் ஒன்றில் கீரையை மிதக்கவிடும் செயல்முறையின் வழியே எப்போது கிரகணம் தோன்றும் என்று சொல்லி இருக்கிறார். கூடுதலாக, கோள்களின் இணைப்பே கிரகணத்துக்குக் காரணம் என்று அறிவியல்பூர்வமாக எழுதினார்.

Dec 16, 2011

சிம்புவை தாக்கி பேசவில்லை ஜீவா பல்டி !



சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.


அதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

நிகழ்ச்சியில் ஜீவா பேசும்போது இயக்குனர் மிஸ்கின் “முகமூடி” படத்தில் நடிக்க 90 நாள் கால்ஷீட் கேட்டார். நான் 120 நாட்கள் கொடுக்க தயாராக இருக்கிறேன். இரு வருடங்களுக்கு முன் மிஸ்கின் வெற்றிகரமாக ஓடிய “அஞ்சாதே” படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைத்தான் அழைத்தார். நான் அதை ஏற்கவில்லை.

சரியாக மீசைகூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிப்பது? அதற்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்று கூறி விட்டேன். “ஒஸ்தி” படத்தில் சிம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரைத்தான் ஜீவா தாக்கி பேசியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து ஜீவாவிடம் கேட்டபோது, மறுத்தார். “அஞ்சாதே” படத்தில் மிஸ்கின் போலீஸ் வேடத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு மீசை முளைக்கவில்லை. அதைத்தான் குறிப்பிட்டு பேசினேன். வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. அடக்கடவுளே என் பேச்சில் இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்களே என்றார்.

Dec 15, 2011

பாகிஸ்தானுக்கு ரூ3,500 கோடி நிதியுதவி அதிரடியாக ரத்து அமெரிக்காவில் சட்டம் நிறைவேறியது


பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்வதற்கான சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து பாகிஸ்தான்  அமெரிக்க உறவில் நெருக்கடி முற்றியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் அழித்து வருகின்றனர். தீவிரவாதிகளும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்க வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் நேட்டோ விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கியானி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Dec 14, 2011

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு


நிலத்தை இழந்தால் மீட்டுவிடலாம், மொழியை இழந்து விட்டால்... மீட்கவே முடியாது என்பதை இந்திய வரலாறு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள். கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்​டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்ட​போது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.உருதும் அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை.

வைகோ-வை அழவைத்த‘உச்சிதனை முகர்ந்தால்’


தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன்;;:அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி: இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்:

சேஷல்ஸ் தீவில் அமெரிக்க உளவு விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது


அமெரிக்க உளவு விமானம் சேஷல்ஸ் தீவில் உள்ள லன்வேயில் தரையிறங்குமுன்  வீழ்ந்து நொருங்கியுள்ளது. சமீபத்தில்தான் அமெரிக்க உளவு விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியதாக செய்தி வெளியாகி, அந்தப் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை.

கிழக்கு ஆபிரிக்கக் கடலில் கொள்ளையர்களின் நடமாட்டங்களை உளவு பார்க்கும் அமெரிக்க விமானமே

தென் கொரியாவில் இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் ஒட்டல்,


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர். அப்போது கட்டிடம் தகர்ந்து புகை கிளம்பியது, விமானம் மோதும்போது கட்டிடம் எப்படி தோற்றம் அளித்ததோ அதே போன்ற வடிவில் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளனர்.

இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைத்து உள்ளது. கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஒட்டல், பூங்கா , நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.

சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க.,கலந்து கொள்ளும். மனித சங்கிலியில் கலந்து கொண்டு : ஸ்டாலின்


இன்று (14.12.2011) தேனியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 200 இடங்களில் உண்ணாவிரத்தை நடத்தியிருக்கிறோம். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற உண்ணாவிரத்தை நடத்தி முடித்து, இன்று மனித சங்கிலி என்ற அறப்போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

வெங்கட் பிரபு இயக்கதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக புதியபடம்


மங்கத்தா வெற்றி பிறகு மீண்டும் முழு நீள போலீஸ் கதை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கி‌ரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடியாம். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. 
 வெங்கட் பிரபு இயக்கதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக புதியபடம் 

கவர்ச்சி நடிகைகளின் துள்ளல் பேட்டி:வித்யா பாலன்,ராணி முகர்ஜி

கவர்ச்சி ரொம்ப நல்லது! வித்யா பாலன்
தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் நடிகை வித்யா பாலன், கவர்ச்சி ரொம்ப நல்லது, என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருக்கிறார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து

Dec 12, 2011

சீனா ராணுவதளம் இந்திய பெருங்கடலில் அமைக்கிறது இந்திய கடற்படை கவலை! ( காணொளி)


இந்திய பெருங்கடலின் ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ராணுவ தளத்தை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பினால் இந்தியா பெருங்கவலை அடைந்துள்ளது. கண்காணித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ரணுவத் தளத்தை அமைப்பதால், இந்தியாவை சீனா உளவு பார்ப்பதற்கும் இது வசதியாகி வடும் என்று இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. 

இதனால் யாருக்கு லாபம்?


கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.

Dec 11, 2011

முல்லை பெரியாறு பிரச்சினை: டிசம்பர் 15-ல் தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் : ஜெ.முடிவு


முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகம், கேரளா இரு மாநிலங்களுக்கிடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இன்று 2--வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 15-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டம் வியாழன் அன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனக்கூறினார்.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; இந்திய தம்பதிகள் உள்பட 5 பேர் பலி


அமெரிக்காவில் லாஸ்வேகாசில் இருந்து சன்செட் நகரில் உள்ள ஹுவர் அணைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

லேக்மியாட் என்ற இடத்தில் மலைப்பகுதியில் சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. அதில், விமானி லாஸ்வேகாசை சேர்ந்த நியல்டு (31), டெல்லி தம்பதி டெல்வின் (49), தமரா சாப்மான் (49) உள்பட 5 பேர் பலியாகினர். 

தங்களின் 25-வது ஆண்டு திருமண விழாவை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி தம்பதிகள் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.



முல்லைப் பெரியாறு விவகாரம் :நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி


முல்லைப் பெரியாறு விவாகரத்தில் கேரள&தமிழ்நாடு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் தாக்கப்பட்டன. 

பெரியாறு அணையை நோக்கி தமிழக மக்கள்! :எல்லையில் பதட்டம் (காணொளி)







தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்துவதால், எல்லையில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.