Dec 29, 2011

மேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )

பிரான்ஸ் நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் ஏராளமான ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதத்தில் அவர்களது முக்கிய கோரிக்கையை அந்நாட்டின் தபால்துறை ஏற்று செயல்படுத்தியுள்ளது. இதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் 'பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை' அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 
புத்தாண்டு கொண்டாட நடிகை,நடிகர்கள் செல்லும் நகரங்கள் (படங்கள்)

புத்தாண்டு கொண்டாட கோலிவுட் ஹீரோயின்கள் காதலனுடன் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர்

ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.

ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.

நடிகை த்ரிஷா தோழிகளுடன் சிட்னி பறக்கிறார். அவரது காதலரும் தனியே சென்று, பிறகு சிட்னியில் புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம்.
காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.

. ஜெனிலியா, தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கோலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும் சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்துள்ளனர் .


சமீரா ரெட்டி இந்த வருட புத்தாண்டை எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கிறேன். இப்போதே எனக்கு அதிக சந்தோஷத்தை அது தருகிறது. இதற்கு சினிமா நண்பர்களையும் அழைத்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் எனக்காக வீட்டை அலங்கரிப்பதில் பிசியாக இருக்கிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட்டிங்கிற்கு செல்லும் சிம்பு, அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார்.
  இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் ‘இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் ‘துப்பாக்கி பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.


அப்புறம் நீங்க எங்க யாரோட கொண்டாட போரிங்க?

எனது இந்தியா! (7) புலியின் கேள்விகள்

எனது இந்தியா! எஸ். ராமகிருஷ்ணன்,(7) புலியின் கேள்விகள்

வேட்டை என்பது சாகச விளையாட்டா? அல்லது உயிர்க் கொலையா? பசிக்​காக மிருகங்களைக் கொல்வது வேறு, பெருமை அடித்துக்கொள்ள மிருகங்களை கொல்வது வேறு இல்லையா? ஆட்சியில் இருக்கும் மன்னர்களே வேட்டை ஆடுவது சரிதானா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தேடி அலைந்து ஏமாந்து​போயிருக்கிறேன்.வெள்ளைக்காரர்களுக்கு இந்தியா என்றாலே... முரட்டு யானையும், புலியும், பாம்பும்தான் அடை​யாளமாக இருக்கின்றன. அப்படித்தான் அவர்கள், அனுபவக் குறிப்புகளில் இந்தியாவைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். அதை வாசிக்கும் அயல்நாட்டு​காரர்களுக்கு இந்தியா என்பது நாகரிகமற்ற மனிதர்கள் வாழும் ஓர் அடர்ந்த காடு என்று​தான் தோன்றக்கூடும்.இந்தியர்களை நல்வழிப்படுத்தி நாகரிகமடையச் செய்தது ஆங்கிலேய அரசு மட்டுமே என்ற பொய்யை இன்றும் திரும்பத் திரும்ப பிரிட்டிஷ் சரித்திரக் குறிப்புகள் கூறிக்கொண்டு இருக்கின்றன. உணவுக்காக வேட்டையாடுதல் என்பது தொல்குடிகளில் இருந்து தொடர்கிறது. ஆனால், வேட்டை எவ்வாறு பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக, வீரத்தை நிலைநாட்டும் சாகச விளையாட்டாக உருமாறியது? வன விலங்குகள் இன்று பன்னாட்டுச் சந்தைப் பொருள் ஆகியிருப்பது எதனால் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. எந்தப் புலி, தேசிய விலங்காகப் பெருமையோடு இன்று அறியப்படுகிறதோ, அது நூற்றாண்டு காலமாக வேட்டையாடும் மனிதர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க ஓடிய ஓட்டமும், பட்ட காயமும், அடைந்த வலியும் அறிவீர்களா? ஓடிய புலியின் கால் தடங்களுக்கு கீழே அறியப்படாத வரலாறு மறைந்துகிடக்கிறது. அதிகாரம், மனிதர்களை மட்டும் இல்லை, விலங்குகளைக்கூட தனது வாழ்விடத்தில் இருந்து துரத்தி அடிக்கிறது என்பதுதான் காலம் உணர்த்தும் உண்மை.வரலாற்று வெளி எங்கும் ரத்தம் காயாத கால் தடங்களாக புலியின் மௌனமான கேள்விகள் பதிந்து இருக்கின்றன. காலம் மறந்த அந்தக் கேள்விகள் முக்கியமானவை. அதற்கு மனசாட்சியுள்ள மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும். உண்மையில், ஒவ்வொரு புலியும் மனிதனைப் பார்த்துக் கேட்க நினைப்பது, 'பசித்தால் மட்டுமே நாங்கள் வேட்டையாடுகிறோம். அதுவும் ஒரு மானையோ, முயலையோதான்.  நீங்களோ உங்கள் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுகிறீர்கள். ஒன்றிரண்டு இல்லை, ஒரே நேரத்தில் 40 மிருகங்களைக்கூடக் கொன்று உங்களை வீரனாக அடையாளம் காட்டிக்கொள்கிறீர்கள் என்றால், நம் இருவரில் யார் கொடூரமானவர்கள்? யார் ஆபத்தானவர்கள்?’காலம் இந்தக் கேள்வியை நம் முன்னே அலையவிடுகிறது. பதில் தெரிந்தும் நாம் சொல்ல மறுக்கிறோம். புலிகளைப் பார்த்து மனிதன் பயந்து நடுங்கிய காலம் போய், மனிதர்களைக் கண்டு புலி அஞ்சி பதுங்கும் காலம் உருவாகிவிட்டது, ஓர் உயிரின் அழிவு மற்றொரு உயிருக்குக் கேளிக்கையாக மாறியிருக்கிறது. ஏராளமான பணம் சம்பாதிக்கும் ஒரு கள்ளத் தொழிலாக இன்று வேட்டை ஆடுவது மாறியிருக்கிறது.

 இந்த எதிர்நிலை எப்படி உருவானது? அதைச், சமூகம் ஏன் கண்டுகொள்வதே இல்லை?இயற்கையை அழித்தொழிக்க முனைந்தது விலங்குகளை உணவாகக்கொள்ளும் ஆதிவாசிகள் இல்லை, அரசாண்ட மன்னர்களே. அடிமைப்பட்ட இந்தியாவின் முதல் பேரரசியாக இங்கிலாந்து ராணி பதவி ஏற்றார். அவருக்குப் பின், மூன்று இங்கிலாந்து மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்தார்கள். நான்காம் அரசராகப் பதவி ஏற்றவர் வேல்ஸ் இளவரசனும் விக்டோரியாவின் பேரனுமான ஐந்தாம் ஜார்ஜ். இவர், இந்தியாவுக்கு வந்து மன்னராக முடிசூடிக்கொள்ள விரும்பினார். இதற்காக, 40 நாட்கள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்தார். 1911 டிசம்பர் 12-ம் தேதி சிறப்பு தர்பார் ஏற்பாடு செய்யப்பட்டது. இளவரசர்கள், வைஸ்ராய்கள், குறுநில ஆளுநர்கள், ஐ.சி.எஸ். அலுவலர்கள், இந்தியப் பிரபுக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தர்பார் ஹாலில் கூடியிருந்தனர். புதிய மன்னரும் மகாராணியும் பட்டம் ஏற்றுக்கொண்டார்கள்.தமிழ்நாட்டில்கூட பல இடங்களில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி ஏற்பதைக் கொண்டாடும் விதத்தில், சிலைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. சென்னையில் உள்ள பனகல் பூங்காவில் ஒரு காலத்தில் ஐந்தாம் ஜார்ஜின் மார்பளவு சிலை இருந்தது. ஐந்தாம் ஜார்ஜுக்கு, வேட்டையாடுவது மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இளவரசராக இந்தியா வந்த நாட்களிலேயே, நேபாளத்தின் அடர்ந்த காடுகளுக்குள் வேட்டையாட வேண்டும் என்று வேல்ஸ் ஆசைப்பட்டார். காலரா நோய் பரவியிருந்த நேரம் என்பதால், அவரது விருப்பம் அப்போது நிறைவேறவில்லை. ஆகவே, மன்னர் ஆன உடனேயே, ஒரு பெரிய வேட்டையை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இதை, நேபாள மன்னர் ரானா ஏற்பாடு செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள தராய் பகுதியில் முகாம் அமைத்து வேட்டையாட ஏற்பாடு செய்யப்பட்டது. விசேஷ ரயிலில் நேபாள எல்லை வரை சென்ற மன்னர், அங்கிருந்து காரில் காட்டின் உள்ளே அமைக்கப்பட்ட முகாமுக்குப் போனார்.இந்த வேட்டைக்காக 14,000 ஆட்கள், 300 யானைகள், டபுள் பேரல் மற்றும் சிங்கிள் பேரல் துப்பாக்கிகள் என்று விதவிதமான துப்பாக்கிகள் மன்னருடன் அனுப்பிவைக்கப்பட்டன. ஜந்தாம் ஜார்ஜ் மன்னர் வேட்டையாட வரப்போகிறார் என்பதால், நான்கு நாட்களுக்கு முன்பே, 20 தனிப் பிரிவுகள் காட்டுக்குப் போனது. புலிகளின் நடமாட்டம் எங்கு இருக்கிறது என்று அறிவதற்காக, எருமைக் கன்றுக்குட்டிகளை தண்ணீர் துறை அருகில் கட்டிப் போட்டனர். அதை அடிக்க புலி வருகிறதா என்று கண்காணித்தனர். எருமைக் கன்று கொல்லப்பட்டு இருந்த பகுதிகளை அடையாளப்படுத்திக்கொண்டனர். சில இடங்களில் கடுகு எண்ணையை ரப்பர் பந்துகளோடு சேர்ந்து புலி தண்ணீர் குடிக்க வரும் நீர்நிலையில் கலந்துவிடுவார்களாம். புலி, தண்ணீரைக் குடிக்கும்போது பிசுபிசுப்பு ஒட்டிக் கொள்ளவே முகத்தை காலால் துடைப்பது போல தடவித் தடவி கண்ணில் பிசுபிசுப்பு படும்படியாகச் செய்துவிடுமாம். அதன் பிறகு, அந்தப் புலியால் துல்லியமாக எதையும் பார்க்க முடியாது. உடனே அதை வேட்டையாடத் துவங்கிவிடுவார்களாம். இப்படி, புலியை அடையாளம்கொண்டு அதை எங்கே இருந்து சுற்றிவளைப்பது என்று திட்டமிட்டார்கள். புலி வேட்டைக்கு உகந்த காலம் ஜனவரி முதல் மார்ச் வரை. அந்தப்பருவத்தில்தான் புற்கள் செழித்து வளர்ந்து இருக்காது. புதர்களும் காய்ந்துபோயிருக்கும். ஆகவே, புலிகளை எளிதாக மடக்கிவிடலாம். ஒன்று, புதர்களுக்குத் தீ வைத்து புலி தப்பி ஓடும்போது அதைக் கொல்வது, அல்லது புலி பதுங்கி உள்ள இடத்தைச் சுற்றி யானைகளைக்கொண்டு ஒரு வளையம் போலாக்கி, நடுவில் புலியை ஓடவிட்டுக் கொல்வது. இந்த இரண்டில் எதை மன்னர் விரும்புகிறாரோ... அப்படி வேட்டையாடலாம் என்று முடிவு செய்துகொண்டார்கள்.


யானைகளை வைத்து வளைத்து நேரடியாக வேட்டை​யாடலாம் என்று மன்னர் முடிவு செய்தார். அதுதான் துணிச்சல் மிக்கதாக இருக்கும் என்றார். அதன்படி, முதல் நாள் 300 யானைகள் அழைத்துச் செல்லப்பட்டன. ஒரு யானையின் தங்க சிம்மாசனம் கொண்ட அம்பாரியில், ஐந்தாம் ஜார்ஜ் துப்பாக்கியோடு உட்கார்ந்துகொண்டார். 300 யானைகள், அதை ஓட்டிச் செல்லும் ஆட்கள், சிகாரி எனப்படும் வழிகாட்டிகள், உடல் வலிமைகொண்ட கிராமவாசிகள், வேட்டையாடிய புலியின் தோலை உரிக்க தனித் திறன்கொண்ட ஆதிவாசிகள், வேட்டையைப் படம் பிடிக்க புகைப்படக் கலைஞர் என ஒரு படையே புலி வேட்டைக்குப் புறப்பட்டது.புலி பதுங்கி உள்ள இடத்தை 300 யானைகள் வளைத்துக்கொண்டன. புலி எங்கே போவது என்று தெரியாத சீற்றத்தில் பாய்ந்தது. யானை மீது இருந்த வீரர்கள் குத்தீட்டியால் புலியைத் துரத்தி மன்னர் முன்னால் போகும்படி செய்தார்கள். புலி ஆவேசமாகப் பாய்ந்தது. ஜந்தாம் ஜார்ஜ், தனது துப்பாக்கியால் புலியைச் சுட்டுக் கொன்றார். உடனே, கூட்டம் கைதட்டிப் பாராட்டியது. சுட்டுக் கொன்ற புலியோடு மன்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படியாக, ஐந்து நாட்கள் தொடர்ந்த வேட்டையில் 39 புலிகள், 18 காண்டா மிருகங்கள், 4 கரடிகள், 6 காட்டு எருதுகள் கொல்லப்பட்டன. இவை தவிர, பறவைகள், குழிமுயல்கள் மற்றும் மான்கள் ஆகியவை உணவுக்காக வேட்டையாடப்பட்டன.புதிய மன்னரின் பதவியேற்பு, 39 புலிகளைக் கொன்று உற்சாகமாகத் தொடங்கியது. இந்தப் பணிக்கு தன்னோடு உதவியாக வந்த 14,000 பேருக்கும் மன்னர் சன்மானம் வழங்கினார்.

 நேபாள மன்னருக்கு விசேஷ சலுகைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.பதிலுக்கு, நேபாள மன்னர் யானை முதல் கிளி வரை 70 விதமான காட்டு மிருகங்களைக் கூண்டில் அடைத்து இங்கிலாந்தில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குப் பரிசாகக் கொடுத்தார். பிறந்த காடு தவிர வேறு ஒன்றும் அறியாத கரடியும், காண்டா மிருகமும், ஓநாயும் கப்பலில் பயணம் செய்து இங்கிலாந்தின் கண்காட்சிப் பொருளாக மாறின. அந்த ஊரின் குளிரும் உணவும் சேராமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துப்போயின.நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்க முடியாது என்பார்கள். அது உண்மைதான். மனிதர்​கள்தான் நினைவுகளைத் தூர எறிந்து​விட்டு எந்த இழிநிலைக்கும் தன்னை ஒப்புக்கொடுத்து​விடுவார்கள். மிருகங்கள் அப்படி இல்லை. பட்டினி கிடந்து சாகுமே அன்றி, அது எளிதில் தன்னை விட்டுக்கொடுத்து விடாது. ஒரு மிருகம் பணிந்துபோகிறது என்பது மனிதன் மேல் உள்ள அன்பால் மட்டுமே, பயத்தால் இல்லை.ஒரே வேட்டையில் இவ்வளவு புலிகளைக் கொன்ற சந்தோஷமோ என்னவோ, ஐந்தாம் ஜார்ஜ் அது வரை இந்தியாவின் தலைநகரமாக இருந்த கல்கத்தாவில் இருந்து மாறி, புதிய தலைநகரமாக டெல்லியை அறிவித்தார். பிரிட்டிஷ் கட்டடக் கலை நிபுணர் எட்வின் லூட்டியன்ஸிடம் புதிய தலைநகரம் அமைப்பது பற்றி அரசர் ஆலோசனை செய்தார். மனிதர்களின் சமாதிகள் இல்லாத வெற்று நிலமாக ஒரு பெரிய பரப்பளவு இருந்தால், அதில் ஒரு புதிய டெல்லி நகரை உருவாக்கிக் காட்டுகிறேன் என்றார் எட்வின் லூட்டியன்ஸ். அப்படித்தான் புது டெல்லி உருவானது!

நன்றி ஜூனியர் விகடன்


Dec 27, 2011

யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி : சங்கீதா - கிரிஷ் திமிர் பேட்டி(காணொளி )


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்’’ என்று  கூறியுள்ளார்.இந்நிலையில் இன்று (26.12.2011)  செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி,   யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம் அடாவடி பேட்டி அளித்தார்கள். கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள்,   அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.  

பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள்,  தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ,  ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள்.   

தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.    ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


நன்றி நக்கீரன்


Dec 26, 2011

மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட சுமார் 1000 பேர் கைது!முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டிப்பதாக கூறி சென்னையில் தங்கியிருந்த பிரதமர் மன்மோகன்  சிங்குக்கு கருப்புக்கொடி காட்ட சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.  சைதாப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட முயன்றபோது அனைவரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் இன்று காலை கருப்புக்கொடி காட்டும்  போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தனர்.காலை 8.45 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பனகல் மாளிகை அருகே வந்தார். அவருடன் இளைஞர் அணி செயலா ளர் எல்.கே.சுதீஷ், எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, நல்லதம்பி உள்பட கட்சி நிர்வாகிகள் வந்தனர். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான  தொண்டர்கள் திரண்டிருந்தனர். கருப்புக்கொடியுடன் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண் டும். முல்லை பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். கூடங்குளம் பிரச்னையில் சுமுக முடிவு எடுக்க வேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பினர்.

விஜயகாந்த் தலைமையில் தொண்டர்கள் அனைவரும் கையில் கருப்புக்கொடியுடன் கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட் டனர். ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் கூறினர். தடையை மீறி எல்லாரும் பேரணியாக சென்றனர். மறை மலை அடிகள் பாலத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறியதாக விஜயகாந்த் உள்பட அனைவரையும் கைது செய்தனர். 

அவர்களை பஸ் மற்றும் போலீஸ் வேன்களில் ஏற்றி, சிஐடி நகரில் உள்ள மாநகராட்சி சமூகநல கூடம், சைத £ப்பேட்டை எஸ்பிஎஸ் கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் வைத்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாநகராட்சி சமூக நல கூடத்தில் வைக்கப்பட்டுள்ளார். கருப்புக்கொடி போராட்டத்தால் அண்ணா சாலையில் 3 மணி நேரம்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Dec 25, 2011

நீங்கள் பதிவரா? அப்படிஎன்றால் உங்களுக்குத்தான் !!

அனைவருக்கும் எனது X-MAS , NEW YEAR வாழ்த்துக்கள்

Christmas Myspace Graphics

சும்மா சின்ன பில்டப்பு எல்லாம் உங்ககிட்ட கத்துகிடதுதன் !

Dec 24, 2011

"அதில் " வித்யா பாலனை மிஞ்சுவேன் மாடல் அழகி சுரபி பிரபு சவால்!

மாடல் அழகியும், நடிகையுமான சுரபி பிரபு. பிரபல மாடல் அழகியும், ‘இலா அய்தே இலா’ என்ற தெலுங்கு பட ஹீரோயினுமான சுரபி பிரபு கூறியதாவது:நடிகையாக வேண்டும் என்பது என் கனவு. பட்டப்படிப்பு முடித்தவுடன் மாடல் அழகியானேன். பின்னர் மேடை நாடகங்களில் நடித்தேன். நடிகையாக வேண்டும் என்ற கனவு பலித்தது. மும்பை நடிகைகளுக்கு அதிகம் கைகொடுத்திருப்பது தென்னிந்திய படங்கள்தான். என்னுடைய அறிமுகமும் தென்னிந்திய படங்களில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘இல அய்தே இலா’ படத்துக்காக டைரக்டர் பி.சந்திரசேகர் ரெட்டி ஹீரோயின் தேடுவதாக அறிந்தேன். அவரை தொடர்பு கொண்டேன். நான் அதிர்ஷ்டக்காரி. எனக்கு உடனே வாய்ப்பு கிடைத்தது. நல்ல கேரக்டர். ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்தது. அதுபற்றி கவலைப்படாமல் நடித்தேன்.  ‘தி டர்டி பிக்சர்’ படத்தில் வித்யாபாலன் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து ஒரே படத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். அவரைவிட என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். நடிப்பும், கவர்ச்சியும் இருந்தால் எந்த  நடிகையும் நெம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும். நானும் அதற்கு முயற்சிப்பேன்.

எனது இந்தியா (6)-எஸ்.ராமகிருஷ்ணன் -எவரெஸ்ட் என்றொரு அதிகாரி !நில அளவைப் பணிக்காக 'தியோடலைட்’ என்ற அளவியல் கருவி, இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது. அதைப் பயன்படுத்த, தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். நில அளவை துவங்க மலை உச்சிகளின் மீது ஏற வேண்டி இருந்தது. அதில், அளவைப் பணியாளர்கள் பலர் காயமுற்றனர். பணியின்போது ஒரு முறை தியோடலைட் கருவி நழுவி விழுந்து சேதம் அடைந்தது. இந்தியாவை அளப்பது என்பது அவர்கள் நினைத்தது போல எளிதாக இல்லை.வில்லியம் லாம்டன், ஒரு ராணுவ அதிகாரி. ஆனால், புவியியல் நுட்பங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணித அறிஞரும்கூட. ஆகவே,

டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு :தமிழர்கள் கொதிப்பு !


டேம் 999 படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தமிழராக இருந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கூறலா மா? என்று தமிழர் அமைப்புகள் குமுறுகின்றன. முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச பிரச்னையாக்க மலையாளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் கேரள அரசின் ஆதரவுடன் எடுத்த படம் தான் டேம் 999. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் நிதியுதவி செய்துள்ளனர். 

மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )


மார்பகங்களை பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பிரஞ்சுப் பெண்களால் மார்பகங்களில் பொருத்தப்பட்ட சிலிக்கன் உள்ளீடுகளில் குறை காணப்படுவதால், அவற்றை அவர்கள் அனைவரும் நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இதற்கான அறுவைச் சிகிச்சைகளை செய்வதற்கான பணத்தை தமது பொதுச் சுகாதார நிதியில் இருந்து வழங்குவோம் என்று கூறியுள்ள பிரஞ்சு அரசாங்கம், இப்படியான உள்ளீடுகளை மார்பகங்களில் பொருத்திய பெண்கள் அனைவரும் அவற்றை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறது

Dec 23, 2011

நியூசிலாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் (படங்கள்)

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதிகாலை 1.58 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே உருண்டன. தூங்கி கொண்டிருந்த மக்கள் பதறியடித்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். பின்னர் 70 நிமிடங்கள் கழித்து அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து தெருக்களிலேயே இருந்தனர். நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலில் இருந்த ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல பகுதிகளில் தொலைதொடர்பு, மின்சார சேவை துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். நியூசிலாந்தில் கடந்த பிப்ரவரியில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 181 பேர் பலியாயினர். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. அங்கு ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் முறை நில அதிர்வுகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dec 22, 2011

அஜீத்தின் பில்லா-2 ஜனவரியில் ரிலீஸ்?


அஜீத் நடித்த பில்லா படம் கடந்த 2007-ல் ரிலீசானது. இதில் நயன்தாரா, நமீதா ஜோடியாக நடித்தனர். விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இப்படம் ரஜினி நடிப்பில் வந்த பழைய பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இதன் இரண்டாம் பாகத்தை “பில்லா 2” என்ற பெயரில் படமாக்க அஜீத் விரும்பினார். அதன்படி இயக்குனர் சக்ரிடோலட்டி இதற்கான கதையை உருவாக்கினார். இந்நிலையில் இப்படத்தில் ‌ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 25நாட்கள் சூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். இந்த பாடல் காட்சியில் அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களை ஆட்டி வைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம். ஏற்கனவே வந்த அஜித்தின் பில்லா-வை காட்டிலும், இப்படம் அதிரடியாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் இயக்குநர். இதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, பார்த்து எடுத்து வருகிறாராம் சக்ரி டோல்டி.

இவர் கமலஹாசன் நடித்த ' உன்னைப்போல் ஒருவன்' என்ற படத்தை டைரக்டு செய்தவர். தூத்துக்குடி கடற்கரையோரம் பிறந்து வளர்ந்து ஒருவன் சர்வதேச கடத்தல் தாதா ஆவதுபோல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறு விறுப்பாக நடந்தது.

கடைசி கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 93 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து பாடல் மற்றும் டிரெய்லர்கள் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் படம் ரிலீசாக உள்ளது.


மதுரையை பற்றி "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகடமி விருது

 "காவல் கோட்டம்' என்ற நாவலை எழுதிய சு.வெங்கடேசனுக்கு, இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த மதுரை சு.வெங்கடேசன் எழுதிய, "காவல் கோட்டம்' என்ற நாவலுக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வெங்கடேசன் குறிப்பிடுகையில், "மதுரையில் 1920ம் ஆண்டு வரை இருந்த பாதுகாப்பு முறையை அடிப்படையாக வைத்து, இந்த நாவலை எழுதினேன். பொதுவாக இந்த விருது, வயதான எழுத்தாளர்களுக்குத் தான் வழங்கப்படுவது வழக்கம். இளம் வயதில் இந்த விருதைப் பெறும் எழுத்தாளன் என்ற முறையில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, டில்லியில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும், தாமிர பட்டயமும், சால்வையும் அடங்கியது.

Dec 21, 2011

தமிழக போலீஸ் பொதுமக்கள்மீது தடியடி கண்ணீர் புகை குண்டுவீச்சு பதட்டம்


கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். லோயர் கேம்ப்பில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பதட்டம் நிலவுகிறது. சுருளிப்பட்டி, கருணாக்கமுத்தன்பட்டி, கம்பம், கூடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கம்பத்தில் இருந்து பேரணியாக சென்றனர். 

கூடலூரில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசார் தடுப்பையும் மீறி லோயர் கேம்ப் பகுதியில் பேரணியாக விவசாயிகள் சென்றனர். தென்மண்டல ஐஜி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி செல்லக்கூடாது என்று விவசாயிகளிடம் சொன்னார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறை மீது கல்வீச்சு நடந்தது. இதனையடுத்து போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடந்தது. காவல்துறை தடியடியால் விவசாயிகள் சிதறி ஓடினர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கண்ணீர் புகை குன்ன்டு வீசியதால் பெரும் பரபரப்பு .

               காலையில் மறியல் செய்த வைகோ கைது செய்யப்பட்டது குறிபிடத்தக்கது 

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்.(எவரெஸ்ட் என்பது மலை இல்லை! )இந்திய வரைபடத்தைப் பார்க்கும்போது எனக்குள் நிறைய கேள்விகள் உருவா​கின்றன, இந்திய வரைபடம் எப்படி, யாரால் வரையப்பட்டது? எவ்வாறு நதிகளையும் நிலத்தையும் வேறுபடுத்திப் பிரித்தார்கள்? யார் முதன்முதலாக இந்திய வரைபடத்தை அச்சிட்டது? இன்று உள்ள இந்திய வரைபடமும் அசோகர் கால இந்திய வரைபடமும் ஏன் வேறு​பட்டு இருக்கின்றன? இப்படிக் கேள்விகள் கிளைவிட்டுக்கொண்டே இருக்கின்றனஇதற்கான பதிலின் பின்னே பல நூற்றாண்டு கால உண்மைகள் புதையுண்டு இருக்கின்றன. ஆகவே, இந்தப் பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக இன்னொரு துணைக் கேள்வி இருக்கிறது.சென்னையில் உள்ள பரங்கிமலைக்கும் வடக்கில் உள்ள இமயமலைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?இரண்டும் வெவ்வேறு உயரமான மலைகள் என் பதைத் தவிர, வேறு என்ன இருக்கப்போகிறது என்றுதான் பொதுப்புத்தி யோசிக்கிறது. ஆனால் அப்படி இல்லை. தொடர்பு இல்லாத இந்த இரண்டு புள்ளிகளும் ஒரே கண்ணியால் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த ஒன்றிணைக்கும் புள்ளியாக இருந்தது, இந்தியாவில் நடைபெற்ற நில அளவைத் திட்டம். இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் அரசியலும் விஞ்ஞானமும் ஒன்று கலந்திருக்கின்றன. இன்று நாம் காணும் வரைபடம் இந்தியா கடந்து வந்த வரலாற்றுப் பாதையின் ஓர் அடையாளம்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V

(முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V க்கு கண்டன கடிதம் , நான் ஈமெயில் அனுப்பியது  உங்கள் பார்வைக்காக )

வணக்கம் நான் கோவிந்தராஜ் மதுரை , நேற்று (21/12/2011) செய்தியில் கேரளாவில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக செய்தி வெளியிட்டு உள்ளீர்கள் உங்கள் விளம்பரம் "சிலர் இந்தப்பக்கம் சிலர் அப்படியே அந்தபக்கம் " ஆனால் நீங்கள் கேரளா பக்கமா ? தமிழர்களை கேரளவினர் தாக்கவில்லையா ? என்ன நடுநிலையோ ! கேரளாவில் கலக்டரிடம் பேட்டி,  ஆனால் தமிழகத்தில் எந்த அதிகாரியிடம் பேட்டி வாங்கினீர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாத செய்திகள் 

கேரளத்தினர் வெறி: இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால்  உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

கேரளாவில் உள்ள குமுளி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தால் அவர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. அணையில் 136 அடி உயரத்துக்கு நீரை தேக்குவது பாதுகாப்பானது அல்ல. எனவே அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். அணை பலப்படுத்தப்பட்டு இருப்பது அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பது ஏற்கக்கூடியது அல்ல.


116 ஆண்டு கால அந்த அணை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அதற்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவில் பேரழிவு ஏற்படும். 5 மாவட்டங்களில் உள்ள 14 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கவும், சுமுகமான தீர்வு காணவும் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கைகளும், உத்தரவாதங்களும் கொடுத்துள்ள போதிலும் நெடுங்கண்டம், கைலாசபாறை, மனப்பாடு, உடுமன்சாலை போன்ற கேரள கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சில சமூக விரோதிகளால் அவர்களது குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக விரட்டியடிக்கப்படுகின்றனர்.


கேரளா எல்லையில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது கற்கள் வீசப்படுவது, தீயிடப்படுவது போன்ற செய்திகள் கேரளாவில் பல பகுதிகளிலிருந்து வருகின்றன. கேரளாவைத் தங்களது சொந்த நாடாக கருதி நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வர மறுத்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கும் அளவுக்கு சென்று விட்டனர்.


எனவே, தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மலையாளிகளுக்கும்,  மலையாள நிறுவனங்களுக்கும் தமிழக போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது.    ஆனால்,  கேரளாவில் மலையாள போலீசார் வெறிபிடித்து தமிழர்களை தாக்குகிறார்கள்.

 மு  ல்லை பெரியாறு பிரச்சணை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பகதர்கள் மீது மலையாளிகள் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். 


அதன் பிறகு தமிழின உணர்வாளர்கள் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள் மீது முற்றுகை , தாக்குதல் தொடுத்தனர்.


தோடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுவதால் கேரளாவுக்கு செல்லும் பால், காய்கறிகளை செல்லவிடாமல் தமிழர்கள் தடுத்து வந்தனர். 

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக தோட்ட தொழிலாளிகள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. 


ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக எல்லையில் உள்ள பல்வேறுகோயில்களில் மாலை கழட்டி தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்ததால் கேரள அரசுக்குவருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


இதனால் தமிழக பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர கேரள அரசு உதவி செய்யும் என்று சொன்னதால் தமிழக பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு செல்ல தொடங்கினார்கள்.


 சிவகங்கை மாவட்டம் பரமக்குடி ஹரி , கார்த்திக் தலைமையில் ரெட்டை பிள்ளையார் கோயில் தெரு, மருதுபாண்டியர் நகர், வேந்தொனி மற்றும் சில கிராமங்களைச் சேர்ந்த 35 பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர்.


இன்று ஞாயிற்று கிழமை காலை பம்பையில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவருந்திவிட்டு வெளியே வரும் போது 5 பேர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றவர்கள் இதை கேட்டதால் அவர்களையும் அடித்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த மலையாள காவல் துறையும் தமிழக பக்தர்கள் மீது தாக்கி அவர்கள் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர்.   அதனால் அவர்களில் 20 பேரை கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். 


அவர்களுடன் சென்ற மற்ற பக்தர்களின்  வைத்திருந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர் மலையாள போலிஸ். இந்த தகவல் உறவினர்களுக்கு தெரிந்ததால் கதறிக் கொண்டிருக்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை நீர் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை என்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஆகிய 4 மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்படும்.

Dec 19, 2011

ஜெயலலிதா அதிரடி அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா,:நடராஜன் உள்பட 13 பேர் நீக்கம்-


முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் வசித்து வந்தார்.  சமீபகாலமாக சசிகலா மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று திடீரென சசிகலா மீதும், அவரது குடும்பத்தினரும் மீதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து அவர்களை விலக்கி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Dec 17, 2011

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன் (4) வராகமித்திரர்


சந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திர அறிஞர் வராகமித்திரர். உஜ்ஜயினியில் 505-ம் ஆண்டு பிறந்தார். கிரகணம் வரப்போவதை முன் கூட்டியே அறிந்து சொல்லும் எளிய முறையை வராகமித்திரர் கண்டறிந்தார். அதாவது, எண்ணெய்க் கிண்ணம் ஒன்றில் கீரையை மிதக்கவிடும் செயல்முறையின் வழியே எப்போது கிரகணம் தோன்றும் என்று சொல்லி இருக்கிறார். கூடுதலாக, கோள்களின் இணைப்பே கிரகணத்துக்குக் காரணம் என்று அறிவியல்பூர்வமாக எழுதினார்.

Dec 16, 2011

சிம்புவை தாக்கி பேசவில்லை ஜீவா பல்டி !சிம்புவுக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ” படம் ஹிட்டானதில் இருந்து இருவருக்கும் தகராறு நடக்கிறது. அப்படத்தில் நடிக்க முதலில் சிம்புவைதான் இயக்குனர் கே.வி.ஆனந்த் அனுகினார். அவர் மறுத்ததால் ஜீவா வந்தார். படம் வெற்றி பெற்ற பிறகு இன்டர்நெட்டில் ஜீவா ரசிகர்கள் சிம்புவை தாக்கியும், சிம்பு ரசிகர்கள் ஜீவாவை தாக்கியும் கருத்துக்கள் வெளியிட்டனர்.


அதன் பிறகு ஜீவா கூறும்போது, சிம்பு என் நண்பன் இல்லை என்றார். உடனே நடிகர் ஜெய் குறுக்கிட்டு ஜீவாவை கண்டித்தார். இவ்வாறு மறைமுக சண்டைகள் தொடரும் நிலையில் சமீபத்தில் சாந்தோமில் நடந்த “முகமூடி” படப்பிடிப்பு துவக்க விழாவில் சிம்புவை ஜீவா தாக்கிய பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.

நிகழ்ச்சியில் ஜீவா பேசும்போது இயக்குனர் மிஸ்கின் “முகமூடி” படத்தில் நடிக்க 90 நாள் கால்ஷீட் கேட்டார். நான் 120 நாட்கள் கொடுக்க தயாராக இருக்கிறேன். இரு வருடங்களுக்கு முன் மிஸ்கின் வெற்றிகரமாக ஓடிய “அஞ்சாதே” படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க என்னைத்தான் அழைத்தார். நான் அதை ஏற்கவில்லை.

சரியாக மீசைகூட முளைக்கல. நான் எப்படி போலீஸ் வேடத்தில் நடிப்பது? அதற்கெல்லாம் இன்னும் வயசு வரணும் என்று கூறி விட்டேன். “ஒஸ்தி” படத்தில் சிம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். அவரைத்தான் ஜீவா தாக்கி பேசியதாக கூறப்பட்டது.

இதுகுறித்து ஜீவாவிடம் கேட்டபோது, மறுத்தார். “அஞ்சாதே” படத்தில் மிஸ்கின் போலீஸ் வேடத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கு மீசை முளைக்கவில்லை. அதைத்தான் குறிப்பிட்டு பேசினேன். வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை. அடக்கடவுளே என் பேச்சில் இப்படியெல்லாம் அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்களே என்றார்.

Dec 15, 2011

பாகிஸ்தானுக்கு ரூ3,500 கோடி நிதியுதவி அதிரடியாக ரத்து அமெரிக்காவில் சட்டம் நிறைவேறியது


பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3,500 கோடி நிதியுதவியை ரத்து செய்வதற்கான சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து பாகிஸ்தான்  அமெரிக்க உறவில் நெருக்கடி முற்றியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வீரர்கள் அழித்து வருகின்றனர். தீவிரவாதிகளும் நேட்டோ படைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதில் அமெரிக்க வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் நேட்டோ விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இதற்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கியானி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Dec 14, 2011

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன் (3) மெக்காலேயின் பல்லக்கு


நிலத்தை இழந்தால் மீட்டுவிடலாம், மொழியை இழந்து விட்டால்... மீட்கவே முடியாது என்பதை இந்திய வரலாறு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள். கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்​டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்ட​போது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேச வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.உருதும் அரபும் ஆட்சி மொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை.

வைகோ-வை அழவைத்த‘உச்சிதனை முகர்ந்தால்’


தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன்;;:அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி: இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்:

சேஷல்ஸ் தீவில் அமெரிக்க உளவு விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது


அமெரிக்க உளவு விமானம் சேஷல்ஸ் தீவில் உள்ள லன்வேயில் தரையிறங்குமுன்  வீழ்ந்து நொருங்கியுள்ளது. சமீபத்தில்தான் அமெரிக்க உளவு விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியதாக செய்தி வெளியாகி, அந்தப் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை.

கிழக்கு ஆபிரிக்கக் கடலில் கொள்ளையர்களின் நடமாட்டங்களை உளவு பார்க்கும் அமெரிக்க விமானமே

தென் கொரியாவில் இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் ஒட்டல்,


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர். அப்போது கட்டிடம் தகர்ந்து புகை கிளம்பியது, விமானம் மோதும்போது கட்டிடம் எப்படி தோற்றம் அளித்ததோ அதே போன்ற வடிவில் தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளனர்.

இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைத்து உள்ளது. கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஒட்டல், பூங்கா , நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.

சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க.,கலந்து கொள்ளும். மனித சங்கிலியில் கலந்து கொண்டு : ஸ்டாலின்


இன்று (14.12.2011) தேனியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 200 இடங்களில் உண்ணாவிரத்தை நடத்தியிருக்கிறோம். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற உண்ணாவிரத்தை நடத்தி முடித்து, இன்று மனித சங்கிலி என்ற அறப்போராட்டத்தை நடத்தி இருக்கிறோம்.

வெங்கட் பிரபு இயக்கதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக புதியபடம்


மங்கத்தா வெற்றி பிறகு மீண்டும் முழு நீள போலீஸ் கதை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட் பிரபு. ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தின் கதையை சூர்யாவை மனதில் வைத்து எழுதி வருகிறார் வெங்கட்பிரபு. ஸ்கி‌ரிப்ட் இன்னும் தயாராகவில்லை. ஆனால் அவுட்லைன் ரெடியாம். டபுள் ஹீரோ சப்ஜெக்டான இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகயிருக்கிறது. தெலுங்கில் சூர்யா வேடத்தில் ரவி தேஜா நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. 
 வெங்கட் பிரபு இயக்கதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக புதியபடம் 

கவர்ச்சி நடிகைகளின் துள்ளல் பேட்டி:வித்யா பாலன்,ராணி முகர்ஜி

கவர்ச்சி ரொம்ப நல்லது! வித்யா பாலன்
தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் நடிகை வித்யா பாலன், கவர்ச்சி ரொம்ப நல்லது, என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருக்கிறார் வித்யா பாலன். படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து

Dec 12, 2011

சீனா ராணுவதளம் இந்திய பெருங்கடலில் அமைக்கிறது இந்திய கடற்படை கவலை! ( காணொளி)


இந்திய பெருங்கடலின் ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ராணுவ தளத்தை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பினால் இந்தியா பெருங்கவலை அடைந்துள்ளது. கண்காணித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ரணுவத் தளத்தை அமைப்பதால், இந்தியாவை சீனா உளவு பார்ப்பதற்கும் இது வசதியாகி வடும் என்று இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. 

இதனால் யாருக்கு லாபம்?


கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.

Dec 11, 2011

முல்லை பெரியாறு பிரச்சினை: டிசம்பர் 15-ல் தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் : ஜெ.முடிவு


முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகம், கேரளா இரு மாநிலங்களுக்கிடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இன்று 2--வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 15-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டம் வியாழன் அன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனக்கூறினார்.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; இந்திய தம்பதிகள் உள்பட 5 பேர் பலி


அமெரிக்காவில் லாஸ்வேகாசில் இருந்து சன்செட் நகரில் உள்ள ஹுவர் அணைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

லேக்மியாட் என்ற இடத்தில் மலைப்பகுதியில் சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. அதில், விமானி லாஸ்வேகாசை சேர்ந்த நியல்டு (31), டெல்லி தம்பதி டெல்வின் (49), தமரா சாப்மான் (49) உள்பட 5 பேர் பலியாகினர். 

தங்களின் 25-வது ஆண்டு திருமண விழாவை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி தம்பதிகள் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.முல்லைப் பெரியாறு விவகாரம் :நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி


முல்லைப் பெரியாறு விவாகரத்தில் கேரள&தமிழ்நாடு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் தாக்கப்பட்டன. 

பெரியாறு அணையை நோக்கி தமிழக மக்கள்! :எல்லையில் பதட்டம் (காணொளி)தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்துவதால், எல்லையில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.

Dec 10, 2011

அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போவதாக ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக். விமானப்படை குவிப்பு


ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தவறுதலாக நடந்துவிட்ட தாக்குதல் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் திட்டமிட்டே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக பாகிஸ்தான் கருதுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்டு துபாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.