முல்லைப்பெரியாறு அணை விவகாரம் நாளுக்கு நாள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வேட்டை படத்தை கேரளாவில் எப்படி ரிலீஸ் செய்வது பற்றியும், படத்தின் கேரளா ரைட்ஸ் பற்றியும் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி, குழப்பத்தில் இருந்தபோது, படத்தின் நாயகன் ஆர்யா, இது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம், பிரச்சனை முடிந்தபிறகு அது பற்றி யோசிக்கலாம், கேரளா ரைட்ஸ் சம்பந்தமாக இப்போதைக்கு உங்களுக்கு எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அந்த இழப்பீட்டை ஈடுகட்ட, என் சம்பளத்தில் கொஞ்சம் திரும்ப கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
Jan 6, 2012
Jan 5, 2012
டாக்டர்கள் ஸ்டிரைக் நியாயமா?
தமிழகத்தின் தென்கோடி முனையில், தவறான சிகிச்சை அளித்ததாக கருதி, பெண் டாக்டர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி காட்டுத் தீயாக பரவ, மருத்துவ உலகமே கொதித்து போய் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளும் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. ஆனால், பொது மக்கள் இந்த போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கவில்லை. "டாக்டர்களின் கோரிக்கை நியாயமானது. டாக்டர்களுக்கு முழுபாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், திடீரென டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ததை அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
மதுரை பதிவருக்கு விகடன் பாராட்டுக்கள்
மதுரைமீது தீராத காதல் கொண்ட சுந்தர் வலை பதிவுகள்
விகடன் வரவேற்பறையில் வெளியிட்டுள்ளது ஆனந்த விகடன் 11/01/2012
விகடன் வரவேற்பறையில் வெளியிட்டுள்ளது ஆனந்த விகடன் 11/01/2012
மதுரேய்…மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!
- ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி
Jan 4, 2012
எனது இந்தியா (9)-எஸ்.ராமகிருஷ்ணன் நினைவுகள் அழிவதில்லை !
இந்தியாவுக்கு வெளியில் இருந்து கொண்டு இந்தியாவின் விதியை மாற்றியமைக்க முயற்சி செய்த மாபெரும் வீரர்கள் என்று இருவரைச் சொல்வேன். ஒருவர் ஜப்பானில் வாழ்ந்து கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய ராஷ் பிகாரி போஸ். இன்னொருவர் ஜெர்மனியில் வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமன் பிள்ளை. இருவருமே, இந்திய விடுதலை குறித்த பெருங்கனவுடன் செயல்பட்டவர்கள். இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான். ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ். தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர்... ராஷ் பிகாரி போஸ்! மேற்கு வங்காளத்தின் பர்தவான் மாவட்டத்தில் உள்ள கபால்டா எனும் கிராமத்தில் 1886-ம் ஆண்டு மே25-ம் தேதி பிறந்தவர். தமது 15-வது வயதில், சாரு சந்திரராய் என்பவர் தலைமையில் நடந்த 'சுஹ்ரித் சம்மேளம்’ என்ற புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வங்காளத்தில் உள்ள புரட்சியாளர்களுடன் இணைந்து ஆங்கிலயேர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முடிவு செய்தார் ராஷ் பிகாரி. அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தும் வைசிராயை வெடிகுண்டு வீசிக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. 1912-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
முல்லைப் பெரியாறுக்கு இயக்குனர்கள் 8-ந்தேதி உண்ணாவிரதம்: நடிகர், நடிகைகள் கலந்துகொள்வார்களா?
மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மலையாள நடிகர், நடிகைகள் கேரள அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊர்வலம் நடத்தினர். இதில் அங்குள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். முல்லைப் பெரியாருக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு பதிலடியாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச்செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு எடுக்கப்படும்
Jan 3, 2012
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று.
வீரத்தின் அடையாளமே, தமிழனின் ஆதாரமே.
எங்கள் தமிழின தளகர்த்தவே!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு வீரம் பிறந்தது.
நீ தோன்றியதால் தான் தமிழர்கள் வீரமானவர்கள் என்று பெயர் வந்தது,
நீ தோன்றியதால் தமிழனுக்கு போராட்ட குணம் வந்தது.
நீ தோன்றியதால் அநிதியினை எதிர்த்து கேட்கும் துணிவு வந்தது!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரிந்தது!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு வீர பரமம்பரை என்று பெயர் வந்தது!
நீ தூக்கு கயறினை முத்தமிட்ட அஞ்சாநெஞ்சன்,
இனியும் எத்தனை யுகங்கள் தமிழன் வரலாறு இருந்தாலும் நீ தான் தமிழனின் வீரத்தின் விளைநிலம்
நீங்கள் புதைக்கப்படவில்லை...
மண்ணில் விதைக்கப்பட்டுஇருக்கின்றீர்கள்.
வீரத்தின் அடையாளமே, தமிழனின் ஆதாரமே.
எங்கள் தமிழின தளகர்த்தவே!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு வீரம் பிறந்தது.
நீ தோன்றியதால் தான் தமிழர்கள் வீரமானவர்கள் என்று பெயர் வந்தது,
நீ தோன்றியதால் தமிழனுக்கு போராட்ட குணம் வந்தது.
நீ தோன்றியதால் அநிதியினை எதிர்த்து கேட்கும் துணிவு வந்தது!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரிந்தது!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு வீர பரமம்பரை என்று பெயர் வந்தது!
நீ தூக்கு கயறினை முத்தமிட்ட அஞ்சாநெஞ்சன்,
இனியும் எத்தனை யுகங்கள் தமிழன் வரலாறு இருந்தாலும் நீ தான் தமிழனின் வீரத்தின் விளைநிலம்
நீங்கள் புதைக்கப்படவில்லை...
மண்ணில் விதைக்கப்பட்டுஇருக்கின்றீர்கள்.
Jan 1, 2012
எனது இந்தியா! (8) நரி வேட்டை -எஸ். ராமகிருஷ்ணன்.
புது டெல்லி நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, டிசம்பர் 15-ம் தேதி 1911-ம் ஆண்டு நடைபெற்றது. 1905-ம் ஆண்டில் இருந்தே பிரிட்டிஷ் அரசு தலைநகரத்தை மாற்றக் காரணங்களைத் தேடிக்கொண்டு இருந்தது. அதன் விளைவுதான், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் அறிவிப்பு என்றும் சொல்கிறார்கள். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வேட்டைக்கும் ஆதியில் நடைபெற்ற வனவாசிகளின் வேட்டைகளுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்ற கேள்வி வரக்கூடும். வனவாசிகள் தங்கள் அதிகாரத்தைக் காட்டிக்கொள்வதற்காக ஒரு போதும் வேட்டையாடவில்லை என்பதுதான் அதற்கான பதில். ஆங்கிலேயர்கள் அடர்ந்த காடு இல்லாத தேசத்தில் இருந்து வந்தவர்கள். அதிலும், புலி போன்ற வலிமை மிக்க மிருகம் அங்கே கிடையாது. ஆகவே, அவர்கள் புலியை வெறும் ஆட்கொல்லியாக மட்டுமே அடையாளம் கண்டார்கள். புலியைக் கொல்வதை சாதனை என்று கூறி விருது கொடுத்தார்கள். அந்த எண்ணம்தான் இந்திய விலங்குகளை அவர்கள் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது.இங்கிலாந்து கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக நரி வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்களை வைத்து நரிகளைத் துரத்தி வேட்டையாடுவார்கள். சில நேரங்களில், குதிரைகளில் சென்று துப்பாக்கியால் நரிகளைச் சுட்டுக் கொல்வதும் உண்டு. அது இயற்கையை அழிக்கும் செயல் என்று இங்கிலாந்து அரசு தடை விதித்தது. அவர்கள் நாட்டில் நரியைக் கொல்வதைத் தடை செய்த அரசு, இன்னொரு நாட்டில் காண்டா மிருகத்தைக் கொல்வதைக்கூட தவறாக நினைக்கவே இல்லை. அதுதான், பெரிய முரண்.
சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே
Subscribe to:
Posts (Atom)