Feb 22, 2012

மின் வெட்டு இரண்டு ஆண்டுகள் தொடரும் அமைச்சர் விஸ்வநாதன் ஒப்புதல்!


இன்று செடி நட்டு நாளை பலனை எதிர்பார்க்க முடியாது. புது மின் திட்டங்கள் செயலுக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதுவரை சிரமத்தை பொறுத்துக் கொள்ள தான் வேண்டும்.என்று  விஸ்வநாதன் பேசினார்.
 திண்டுக்கல்லில், தோல் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. உயர்மட்ட மாசுக் கட்டுப்பாட்டு குழு தலைவர் முகமது ஹாசிம் தலைமை வகித்தார்.விழாவில் அமைச்சர் பேசியதாவது:மின் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாக உள்ளது. இதற்கான காரணத்தை விளக்கினால், அது அரசியல் பிரச்னையாகி விடும். இதைக் கூறி பொறுப்பை தட்டிக்கழிக்க அரசு விரும்பவில்லை. இரண்டு, மூன்று மாதங்களில், படிப்படியாக மின்தடை நேரம் குறையும்.வரும் 2013ல், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். என்றார் கடந்த ஆட்சியில் மின்வெட்டை பற்றி
புள்ளிவிவரத்தோடு பேசியவர் இப்போது பல்டியடிகிறார் ஓட்டு போட்டமக்கள் அனுபவிக்கிறார்கள் வாழ்க ஜனநாயகம் !

Feb 20, 2012

விடுதலை புலிகள் தடை வழக்கு : வைகோ மனுவை தள்ளுபடி செய்ய ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு


விடுதலைப்புலிகளுக்கான தடையை நீக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்க மறுத்தது தவறானது என்றார். 
தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, விடுதலைப்புலிகளுக்கு  தடை விதித்தது சரியானது என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த நிலையை தமிழக அரசும் எடுத்துள்ளது. வைகோ மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்ரல் 9க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.