ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படைகள் கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தவறுதலாக நடந்துவிட்ட தாக்குதல் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் திட்டமிட்டே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக பாகிஸ்தான் கருதுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்டு துபாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Dec 10, 2011
எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன் (2)
நீதிக்கு போராட்டம்
இன்று ஓர் எளிய மனிதனுக்கு நீதி கிடைப்பதுஎன்பது போராடிப் பெற வேண்டிய காரியமாக ஏன் மாறிவிட்டது? யோசித்துப்பாருங்கள்... நதி நீர்ப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, இன மொழிப் பிரச்னைகள்என்று எத்தனையோ பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றம் அதற்குத் தீர்வு தந்தாலும், அந்த வழியைப் பின்பற்ற அரசே மறுக்கும் நிலை உருவாகிவிட்டது. என்றால், நீதி உணர்வே இல்லாத காலத்தில் நாம் வாழ்கிறோமா?இந்திய சரித்திரம் எங்கும், எத்தனையோ விதமான அரசியல் சூழ்ச்சிகள், படுகொலைகள், ஏமாற்று வேலைகள், நம்பிக்கை மோசடிகள், கொலைகள், இன அழிப்பு நடைபெற்று இருக்கின்றன. அவற்றை நாம் மன்னர்களின் தனித் திறமை, வெற்றிக்கான வழிமுறைகள் என்று எளிதாகக் கடந்து போய்விடுகிறோம்.இந்திய அரியணையைப் போல குருதிக்கறை படிந்த ஆசனம் வேறு எதுவுமே இல்லை. அதிகாரப் போட்டியில் நடந்த சதிகளை எண்ணிப்பாருங்கள்..
எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்(1)
1
கடந்த காலம் நிகழ் காலத்திற்குக் கற்றுத்தரும் பாடத்தின் பெயர்தான் வரலாறு. சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத் தவறிய உண்மைகளை, மறந்துபோன நினைவுகளை, அறியப்படாமல்போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத் துறை.அதிகாரம் கைமாறுவதன் சரித்திரத்தை மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கு, சரித்திரம் என்பது ஒரு பெரும் மானுடப் பிரவாகம் என்பதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கக்கூடும்.வரலாற்றின் குரலுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது, வரலாற்றினை ஒரு நதி என உருவகப்படுத்தினால், ஒரே நதிதான் எல்லாக் காலத்திலும் ஒடிக்கொண்டு இருக்கிறது, ஆனால்,
மதுரையிலிருந்து இலங்கைக்கு விரைவில் நேரடி விமான சேவை!
மதுரையிலிருந்து இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் நேரடி விமான போக்குவரத்து துவங்க உள்ளது. இதற்கான தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் நிஷன்தா விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் திருச்சியில் நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் நிஷன்தா விக்ரமசிங்கேயை சங்கத் தலைவர் ஜெகதீசன் முதுநிலை தலைவர் ரத்தினவேல் செயலர் ராஜமோகன் டிராவல்ஸ் கிளப் முன்னாள் தலைவர் ஸ்ரீராம் சந்தித்தனர்.மதுரையிலிருந்து இலங்கைக்கு நேரடி விமானம் இயக்குவதன் மூலம் ஏற்படும் பலன்கள் பொருளாதார வளர்ச்சி குறித்து விளக்கினர். இவ்விமான சேவையை சந்தைப்படுத்துதல் மற்றும் குறைந்த அளவிலாவது பயணிகள் செல்வதை உறுதிப்படுத்தும் பொறுப்பை சங்கம் ஏற்கும் என்றனர். இதைத் தொடர்ந்து மதுரையிலிருந்து இலங்கைக்கு விமான சேவையை துவக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் நிஷன்தா அவர்களிடம் உறுதியளித்தார்.
ராணுவ பலம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
சீனா தனது ராணுவ பலத்தை மறைமுகமாக வெளிப்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகையில், "சீனாவுக்கு அதன் ராணுவ பலத்தை அதிகரிக்க முழு உரிமை உள்ளது. ஆனால், அது முழுமையான வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் : கோயில்களில் சிறப்பு பூஜை!
இன்று, இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணி நேரம் தெரியும் என்றும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை காணலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்று மாலை 6 .16 மணி முதல் இரவு 9 .48 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என்று கூறிய விஞ்ஞானிகள், சரியாக இரவு 8 மணி ஒரு நிமிடத்தின் போது, முழு சந்திர கிரகணத்தையும் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திரகிரகணம் தொடங்கி, முடியும் வரை, கிரகண முழுவதையும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்ரிக்கா நாடுகளில் கிரகணம் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பம்
பாலிவுட் நடிகையும், ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸின் கிரிக்கெட் அணியின் பார்டனருமான ஷில்பா ஷெட்டி (வயது 36)க்கும், ராஜ்குந்த்ரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது.
தற்போது தான் கர்ப்பமாக உள்ளதாக அவர் டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் தான் நடிகை ஐஸவர்யா ராய் குழந்தை பெற்றெடுத்தார். மேலும், பாலிவுட் நடிகைகளான லாரா தத்தா மற்றும் செலினா ஜெட்லி ஆகியோரும் கர்ப்பமாக உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் பங்க்குகளில் தவறும் கவனம்... எகிறும் அளவு!
அணை 'வீக்' இல்லை... கேரள அரசியல் கட்சிகள்தான் 'வீக்'! - கே.எம்.அப்பாஸ் அதிரடி
'போராட்டம், மறியல், உருவப் பொம்மை எரிப்பு என்று நாளுக்கு நாள் முல்லைப் பெரியாறு விவகாரம் தீவிரம் அடைகிறது. இதற்குக் காரணம் அணை அல்ல, கேரள அரசியல்தான்’ என்று புதியதோர் கோணத்தைச் சொல்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ். பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தனிமனிதராக நின்று குரல் கொடுத்து வருபவர் இவர். அணையின் வரலாற்றையும் இன்றைய அரசியலையும் நமக்குச் சொல்கிறார்...
ஒரே ஓடுபாதையில் வந்த இரண்டு விமானத்தால் பரபரப்பு :400 பயணிகள் உயிர் தப்பினர்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதனால், 400 பயணிகள் உயிர் தப்பினர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.10க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று கத்தார் நாட்டுக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பி கொண்டு இருந்தபோது, கொழும்பில் இருந்து வந்த ஏர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரை இறங்கியது.
" ஒஸ்தி " விமர்சனம்
இரு தந்தைக்கு பிறந்த ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் சிம்புவும் ஜித்தன் ரமேஷும். இவர்களது குடும்ப பிரச்சினையில் வில்லன் நுழைந்து பிரச்சினை செய்கிறான். இதுதான் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இதை வைத்து தனது கமர்ஷியல் வித்தையை காட்டியிருக்கிறார் இயக்குனர் தரணி. சிம்பு குழந்தையாக இருக்கும் போதே அவரது அப்பா இறந்து விட, அவரது அம்மாவான ரேவதி நாசரை திருமணம் செய்து கொள்கிறார்.
அவர்களுக்கு பிறந்தவர்தான் ஜித்தன் ரமேஷ். சிம்பு மேல் பாசம் இல்லாமல் ஜித்தன் ரமேஷ் மேல் பாசம் கொள்கிறார் நாசர். இதனால் சிறுவயதில் இருந்தே அண்ணன் தம்பிகள் இருவரும் முட்டிக் கொள்கின்றனர். பாரபட்சம் காட்டுவதால் சிறுவயதிலிருந்தே தந்தையை வெறுக்கிறார் சிம்பு.
Dec 9, 2011
இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கினர் ஜெயலலிதா. !
தமிழக சட்டத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.பரஞ்சோதி. இதையடுத்து அவர் அமைச் சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒன்று போனால் ஒன்று இலவசம் என்பதுமாதிரி சமூக நலத்துறை அமைச்சர் செல்வி. ராமஜெயத்தையும் அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பே பரஞ்சோதி மீது, திருமணம் செய்தவதாக கூறி ஏமாற்றினார் என்று டாக்டர் ராணி புகார் கூறினார். ஆனாலும் அத்தேர்தலில் வெற்றி பெற்றார் பரஞ்சோதி.
வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரிடம் சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில் ராணி, பரஞ்சோதி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார்.
கொல்கத்தா: மருத்துவமனையில் தீ விபத்து: 73 பேர் பலி - படங்கள்
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துவிட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் 40 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த ஏ.எம்.ஆர்.ஐ. தனியார் மருத்துவமனையின் லைசன்சை ரத்து செய்து முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். மருத்துவமனை நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யவும் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
விபத்து ஏற்பட்டால் தப்பிக்க உரிய வசதி செய்யாத நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது வழக்கு ஐதராபாத் நீதிமன்றம்
தி டர்ட்டி பிச்சர் என்ற திரைப்படத்தில் ஆபாசமாக நடித்துள்ள நடிகை வித்யா பாலன் மீது குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் Ôதி டர்ட்டி பிச்சர்Õ என்ற இந்தி திரைப்படம் கடும் விமர்சனத்துக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இதில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இவர் மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆசாத் என்ற வக்கீல் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். ‘டர்ட்டி பிச்சர்’ திரைப்பட போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாகவும்
முறைகேடு செய்ய முடியாத வாகன நம்பர் பிளேட் திட்டத்தை 4 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்
வாகனங்களில் முறைகேடு செய்ய முடியாத நம்பர் பிளேட்களை பொருத்தும் திட்டத்தை 4 வாரத்தில் அமல்படுத்த வேண்டும்’ என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் எச்சரித்துள்ளது. வாகனங்களில் பயன்படுத்தும் நம்பர் பிளேட்களில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் முறைகேடுகள் செய்து பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுப்பதற்காக, முறைகேடுகள் செய்ய முடியாத அதிக பாதுகாப்புமிக்க நம்பர் பிளேட்களை வாகனங்களில் பொருத்துவதற்கான உத்தரவை கடந்த 2001ல் மத்திய அரசு பிறப்பித்தது. ஆனால், இதை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை.
கௌதமுக்கு இசையமைக்க மறுத்த ரஹ்மான்!
மணிரத்னம் படம், ரஜினி படம் என தமிழில் ரஹ்மான் பிஸி. இதுதவிர சர்வதேச பிராஜெக்ட்கள் இருக்கின்றன. இதனால் கௌதமுக்கு நோ சொல்லியிருக்கிறார் ரஹ்மான். கௌதம் இயக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கிற்கும் ரஹ்மான்தான் இசை. கூடுதலாக இரண்டு பாடல்களும் போட்டுக் கொடுத்தார். அதேபோல் நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கும் ரஹ்மானிடம் பேசிணுயிருந்தார் கௌதம். ஆனால் நேரமின்மை காரணமாக இசையமைக்க முடியாது என அவர் கௌதமிடம் கூறியதாகத் தெரிகிறது. அதேநேரம் கௌதம் அடுத்து விஜய்யை வைத்து இயக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்திற்கு கண்டிப்பாக இசையமைப்பதாக தெரிவித்துள்ளார்.
Dec 8, 2011
முல்லை பெரியாறு : இடுக்கி மாவட்டத்தில் பதட்டம் , ஐயப்ப பக்தர்கள் அவதி !
முல்லை பெரியாறு அணை பிரச்னை காரணமாக, கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால், அவர்களில் பெரும்பாலானோரின் பயணம் ரத்தாகியுள்ளது. தமிழக - கேரள எல்லையில், வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பயங்கர பதட்டம் நிலவுகிறது.
முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, தமிழக - கேரள எல்லையில் சில நாட்களாக மறியல், கடையடைப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதில் ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் பாமர மக்கள் தொழில் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை சந்திப்பு பகுதியில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 14 பேரை, போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து வழக்கமாகச் செல்லும் பயணப்பாதைகள் முழுவதும், பதட்டம் எப்போது தீரும் என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சென்னை, திண்டுக்கல், ஓசூர் போன்ற மாவட்டங்களில், கேரள உரிமையாளர்களின் நகைக் கடைகள், நிதி நிறுவனங்கள் மீது, மக்கள் ஆவேசத்தில் தாக்குதல் நடத்தினர்.
Dec 7, 2011
தமிழக - கேரள எல்லையில் அய்யப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது
முல்லைப் பெரியாறு பிரச்னையால், தமிழகம் - கேரள எல்லையில், இரண்டாவது நாளாக பதட்டம் நீடிக்கிறது. கம்பம் மெட்டு பகுதியில், 200 தமிழக ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியாறு அணை விவகாரத்தால், தமிழக ஐயப்ப பக்தர்கள், பெரும் பாதிப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரள கட்சிகளின் அடாவடி செயல்களால், தமிழகத்தின் எல்லையோரப்பகுதிகளான தேனி, கம்பம், கூடலூர், போடியில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்தனர். வாகனப்போக்குவரத்தை முழுமையாக, நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர். கம்பத்தில் கடையடைப்பு நடத்தி, உம்மன் சாண்டி உருவ பொம்மைகளை எரித்தனர்
Dec 6, 2011
இரு மாநிலங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்க- தமிழக பாஜக கோரிக்கை
தமிழக, கேரள மக்களுக்கிடையே துவேஷத்தை அதிகரிக்கும் வகையிலும், குரோதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடைபெற்று வரும் வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் ஊக்கமளித்து வரும் கேரள அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துல்லார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டு தமிழர்கள் மீதான தாக்குதலை ஊக்குவித்து வருகிறது கேரள அரசு. தேசிய ஒருமைப்பாட்டை நிலைகுலையச் செய்து வரும் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
முல்லை பெரியாறு பிரச்னை மலையாள நடிகர்கள் திடீர் போராட்டம் !
முல்லை பெரியாறு பிரச்னையில் சுமூகமான தீர்வு கோரி மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி திடீர் போராட்டம் நடத்தினர். முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகம், கேரளா இடையே பிரச்னை இருந்து வருகிறது. முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் முடிவுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக தமிழக, கேரள எல்லையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பிரச்னை தீவிரமாகி உள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூகமான தீர்வை விரைந்து எடுக்கக் கோரி மலையாள திரையுலகம் சார்பில் நேற்றிரவு போராட்டம் நடந்தது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினசரி ஸ்பைஸ்ஜெட் விமான சர்வீஸ் !குறைந்தபட்ச கட்டணம் 1499
சென்னை தூத்துக்குடி இடையே தினசரி விமான சர்வீசை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. குறைந்த கட்டணம் மற்றும் தரமான சேவையின் மூலம் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. மற்ற விமான நிறுவனங்களை ஒப்பிடுகையில், மிகவும் குறைவான கட்டணத்தில் ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சர்வீஸ்களை இயக்கி வருகிறது.
சமூக வலைதளங்களுக்கு கபில் சிபல் எச்சரிக்கை
Facebook, google உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சில கருத்துகளுக்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சில குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்த மக்களை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்க, வலைத்தளங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், அதே நேரம், இந்த வலைத் தளங்களை தணிக்கை செய்யும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று அதிகார வட்டாரங்களை மேற்கோள் காட்டி றிஜிமி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைக் காக்க தீக்குளித்த கூடலூர் வாலிபர்.செல்லப்பாண்டி
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கம்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கேரள அரசை கண்டித்து கூடலூரில் மறியல் போராட்டம் நடந்தபோது கேரள முதல்- அமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்- அமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரது கொடும்பாவியை கொளுத்தினர்.
தமிழக - கேரள எல்லையில் பதற்றம் : போலீசார் குவிப்பு!
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை காரணமாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான நிலை
காணப்படுகிறது. தமிழக – கேரள எல்லையில் பதற்றம் நிலவுவதால் கம்பம் பகுதியில் 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 600 போலீசார், கூடுதலாகக்
குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாய் கண்காணிக்க, வட்டார நிர்வாக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கார்களுக்கும் இனி ஸ்டார் ரேட்டிங்:இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ)
கார்களுக்கும் இனி ஸ்டார் ரேட்டிங்:இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ)
பிரிட்ஜ், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃபேன்களுக்கு மின் சிக்கன குறியீடாக இருக்கும் 5 ஸ்டார் ரேட்டிங் முறையை கார்களுக்கும் அமல்படுத்த இந்திய எரிசக்தி சேமிப்பு ஏஜென்சி(பி.இ.இ) திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார் அதிக மைலேஜ் தருவதாக இருக்கும். மின்சார சிக்கனம் கருதி பிரிட்ஜ், ஏசி உட்பட பல பொருட்களுக்கு ஸ்டார் ரேட்டிங் பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
‘அதிக ஸ்டார்கள்... அதிக பணம் சேமிப்பு’ என்ற வாசகத்துடன் இந்த குறியீடுகளை பி.இ.இ. மின்சாதனங்களில் பொறித்து வருகிறது. எனவே, வீட்டில் மின்சிக்கனம் கருதி நுகர்வோரும் ஸ்டார்கள் எண்ணிக்கையை பார்த்து பொருட்களை வாங்கத் தொடங்கி விட்டனர். பி.இ.இ. ஏஜென்சியின் இந்த திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Dec 5, 2011
50 லட்சம் கோடி ரூபாய்: இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு
இந்தியர்களால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள் அதாவது சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் மக்கள் நகைகளாகவும், தங்கக்காசுகளாகவும் சேர்த்துவைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி தெரிவிக்கிறது.இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மக்கள் நகைகளாகவும், தங்கக்காசுகளாகவும் சேர்த்துவைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி தெரிவிக்கிறது.இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
பேஸ்புக்கினால் அம்பலமான அதிபரின் லீலை (பட இணைப்பு)
அமெரிக்க நியூயோர்க்கைச் சேர்ந்த பள்ளியொன்றின் அதிபர் ஒருவர் தனது புகைப்படமொன்றினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
செரொன் ஸ்மால்ஸ் என்ற அவர் வாலிபர் ஒருவருடன் நடனம் புரியும் அப்புகைப்படம் அவர் அதிபராக பணியாற்றும் உயர் பள்ளி மாணவர்களிடையே பரவியதாலேயே இச் சர்ச்சை கிளம்பியுள்ளது. இப்புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் தரவேற்றியுள்ளார். தனைத் தொடர்ந்தே இப் புகைப்படம் மாணவர்களிடையே பரவத்தொடங்கியுள்ளது.
கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்றாத மாணவர்களுக்கு புள்ளி வழங்கியமைதொடர்பில் இவர் மீது ஏற்கனவே விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இப்புகைப்படமும் இவ்வரிசையில் சேர்ந்துள்ளது.
இவரது நடத்தை தொடர்பில் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இப் பள்ளியை வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடலூரில் சாலை மறியல், பள்ளிகளுக்கு விடுமுறை! :முல்லை பெரியார் விவகாரம்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவை கண்டித்து, கூடலூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், கூடலூரில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சென்ற இரண்டு லாரிகளை, நேற்று நள்ளிரவு கேரள இளைஞர் காங்கிரசார் அடித்து நொறுக்கியுள்ளனர். சபரிமலை செல்லும் தமிழக ஐயப்பப் பக்தர்கள் தாக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
விவகாரம் விஸ்வரூபம்; எல்லையில் பதற்றம்; கேரளாவுக்கு பஸ் -லாரிகள் நிறுத்தம்
கேரளாவுக்கு பஸ் -லாரிகள் நிறுத்தம்
தமிழகத்தில் இருந்து சென்ற லாரி டிரைவர்களை கேரள எல்லையில் மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியது. வண்டிப்பெரியாறு அருகே தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்து மர்ம ஆசாமிகள் விரட்டியடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அணை பலவீனமாக இருப்பதாகவும் அணை உடைந்து பேரழிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கேரள அரசு கூறிவருகிறது.
தற்போதைய அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கேரளாவில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
Dec 4, 2011
96 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட கோக் பாட்டில் 1.22 கோடிக்கு ஏலம் !
உலக புகழ் பெற்ற குளிர்பானம் ‘கோக கோலா’. அமெரிக்காவின் கொலம்பஸ் நகரை சேர்ந்த பார்மசிஸ்ட் ஜான் ஸ்டித் பெம்பர்டன் என்பவர் 1886ல் இந்த பானத்தை கண்டுபிடித்தார். ஆசா காண்ட்லர் என்பவர் 1889ல் இதன் தயாரிப்பு உரிமையை பெற்று, 1892ல் தி கோக கோலா கம்பெனியை தொடங்கினார்.
அந்த கால கட்டத்தில், தற்போதைய சென்ட் பாட்டில், ஒயின் பாட்டில் வடிவத்தில் கோக் வெளிவந்தது.
விக்கிலீக்ஸ் வெளியிடுகிறது:வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய முழு விவரத்தை
இந்திய அரசு இந்த கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிடுகிறதோ இல்லையோ, அசாஞ்சே அந்த பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களை பற்றிய முழு விவரத்தை பெற்று வெளியிடுவதில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களை பற்றிய முழு விவரத்தை பெற்று வெளியிடுவதில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
ஒஸ்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கலாசலா பாடல் (காணொளி )
ஒஸ்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கலாசலா பாடல் வெளியான பின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குத்துப் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை டி.ராஜேந்தரும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பின்னணி பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு பிரபல இந்தி நடிகையான மல்லிகா ஷெராவத் நடனமாடியுள்ளார்.
சீனா சுரங்கத்தில் அணு ஆயுதங்கள் :அச்சத்தில் அமெரிக்கா!
சீனாவானது பல ஆயிரம் மைல்கள் நீளமான சுரங்கத்தில் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 3 வருட ஆராய்ச்சிக்குப் பின்னரே இத் தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
செயற்கைக்கோள்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படங்கள், இரகசிய ஆவணங்களை மொழிபெயர்த்துமே இம் முடிவினை வெளியிட்டுள்ளனர்.
ஹிலாரி கிளிண்டனுக்கு துணை அதிபர் பதவி இல்லை. ஒபாமா
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் அதிபர் பதவிக்கு பராக் ஒபாமாவும், துணை அதிபராக ஜோ பிடெனும் களமிறங்குவார்கள். இத்தகவலை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன், துணை அதிபராக களமிறக்கப்படுவார் என முன்னர் யூகங்கள் வெளியாயின. ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இப்போது அதிபராக உள்ள ஒபாமாவும், துணை அதிபராக உள்ள ஜோ பிடெனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மின்னஞ்சல்கள்,தொலைபேசிகள் சீனாவால் திருடப்படுகின்றன. ஜூலியன் அசாஞ்
டில்லியில், நேற்று நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் நிகழ்ச்சி ஒன்றில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், லண்டனில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பேசினார். அவர் கூறியதாவது: வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள், அவர்களின் வங்கிக் கணக்குகளுடன், அடுத்தாண்டு வெளியிடப்படும்.
சி.பி.ஐ., மின்னஞ்சல்களில் இருந்து, சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு, என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை, மேற்கத்திய நாடுகள் ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால், இந்தியா, பாதுகாப்பான தகவல் தொடர்பை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, என்றார்.
சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது.
சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது.
இது 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கினைத் தாக்க வல்லது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவ் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இத்தாலிய மொடல் அழகிகள்..! _
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட அமெரிக்கரை விடுவிக்க அல் கய்தா நிபந்தனை !
பாகிஸ்தானில் அமெரிக்கர் ஒருவரை அல் கய்தா தீவிரவாதிகள் கடத்தி உள்ளனர். இதனால் பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கர்களை குறி வைத்து தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேட்டோ படை தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் சமீபத்தில் பலியானது சர்வதேச அளவில் சர்ச்சையை எழுப்பி உள்ளது. Ôஇன்னொரு முறை இதுபோல் தாக்குதல் நடந்தால், நேட்டோ படைகள் மீது பதிலுக்கு தாக்குதல் நடத்துவோம்Õ என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி எச்சரித்துள்ளார்.
தாக்கினால், துவம்சம்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க விமான தளத்தை உடனடியாக காலி செய்யுமாறு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துவிட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளிடையே பெரும் உரசலை ஏற்படுத்திவிட்டது.
Subscribe to:
Posts (Atom)