May 29, 2012

நடக்க நடக்க, "ஆயில்' குறையும்! ஆயுள் கூடும்.!!


எரிபொருளை மிச்சப்படுத்துவதால் என்ன பலன்? மிச்சமான எரிபொருளை மட்டும் வைத்து, சென்னையிலிருந்து மதுரை வரை சென்றுவிட முடியாது தான். அதேசமயம், கூட்டம் அதிகமிருக்கும் "பங்க்'கைத் தவிர்த்து, அடுத்த "பங்க்' வரையாவது செல்ல முடியும். இல்லாவிட்டால், எந்த வண்டியாக இருந்தாலும், தள்ளு வண்டியாக மாறிவிடும்.
எரிபொருள் சிக்கனத்துக்கான சில எளிய வழிகள் இதோ:

* முதலில், வாகனத்தை, "சர்வீஸ்' செய்யுங்கள். எண்ணெய் கசிவு நீக்குங்கள். "மைலேஜ்' பரிசோதனை செய்யுங்கள்.
* சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிடுங்கள்.
* தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், "பிரேக்' பிடிக்காதீர்கள்.
* எந்நேரமும், "கிளட்ச்'சில் கால் / கை வைக்காதீர்கள்.
* குறிப்பிட்ட வேகத்துக்கு எந்த, "கியரோ' அந்த வேகத்தில் அந்த, "கியரை' பயன்படுத்துங்கள்.
* இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தாதீர்கள்.
* எந்தப் பயணம் மேற்கொள்ளும் முன்பும், இது தேவை தானா என ஒரு முறை சிந்தியுங்கள். முடிந்தால், தொலைபேசியிலேயே வேலையை முடிக்கப் பாருங்கள்.
* குழுவாகச் செல்லும்போது மட்டும் படகு கார்களைப் பயன்படுத்துங்கள்.
* தனியாகச் செல்ல நேர்ந்தால், இரு சக்கர வாகனங்கள் உத்தமம்.
* எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.* ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகுங்கள். நடக்க நடக்க, "ஆயில்' குறையும்; ஆயுள் கூடும்.
நன்றி தினமலர் 

May 18, 2012

இன்றைய தமிழகம்


ஒரே நாளில் 25 கோடிக்கு விளம்பரம்: ஜெயாவின் புதிய புரட்சி!



சென்னை:ரோம் நகரம் பற்றி எரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையைப் போலத்தான் தமிழகத்தில் ஜெயா அரசின் நிலையும் அமைந்துள்ளது.

 தனது அரசின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி ஒரே நாளில் 25 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து சாதனைப் படைத்துள்ளார் புரட்சி தலைவி.ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டு நிறைவு விளம்பரத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ஆகும். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களின் தேசிய பத்திரிகைகளில் நேற்று முன்தினம் முதல் பக்க முழு நீள விளம்பரம் வெளியானது.
ஒருவருட சாதனைகள் தாம்(சாதனையா? வேதனையா? என்பது வேறு விஷயம்) பல மொழி விளம்பரங்களின் உள்ளடக்கம். விளம்பரத்திற்கு இந்தியாவில் செலவழிக்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவே. பெரும் நிறுவனங்களோ, கார்ப்பரேட்டுகளோ இதுவரை இவ்வளவு தொகையை விளம்பரத்திற்காக செலவிட்டதில்லை.


சேதம் அடைந்த அண்ணா சிலைகள்! அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் கவனிப்பார்களா? 



சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடானது... பெண்களுக்கு சொத்தில் பங்குகிடைத்தது... சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றியது... தமிழ் ஆட்சிமொழிக்கான அங்கிகாரம் கிடைத்தது... ஊர்கள் தோறும் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் என்று கொண்டு வந்தது, உட்பட தமிழகம் இன்று உயரிய நிலைக்கு வர பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

நன்றி மறவாத அந்தகால தமிழ் பெரியோர்கள் அண்ணாவுக்கு ஊர்கள் தோறும சிலை வைத்தனர். தெருவுக்கு பெயர் வைத்தனர். அண்ணா உயிருடன் இருந்தபோதும், அவரது மறைவுக்கு பிறகும் பலர் தங்களின் குழந்தைகளுக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்து அவருக்கு நன்றி செலுத்தினார்கள்.
தமிழகத்தில் அண்ணா பெயரில் தெருக்களும், நகரும், சிலைகளும் இல்லாத ஊர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அண்ணாவின் புகழ் தமிழகம் எங்கும் நிறைந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக அண்ணாவின் பெயரில் தான் தமிழகத்தில் ஆட்சியே நடந்து வருகிறது.

ஆனால், இப்போது அண்ணா சிலைகள் எப்படி உள்ளார்...? என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. சேலம் மாவட்டத்தின் முக்கிய ஊராக இருக்கும் ஆத்தூர் நகராட்சியின் தலைவராக இருப்பவர் உமாராணி பிச்சைக்கன்னு, அ.தி.மு.க வை சேர்ந்த இவர் குடியிருக்கும் அம்பேத்கார் நகரின் நுழைவாயிலில் இருக்கும் அண்ணா அவகளின் முழு உருவச்சிலை கடந்த 1980 ஆண்டில், அ.தி.மு.க வினரால் நிறுவப்பட்டு அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வரகூர் அருணாசலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதற்கு பிறகு, பராமரிப்பே இல்லாமல் போன அண்ணாவின் சிலையில் இப்போது இரண்டு கைகளும் சிதைந்து உடைந்து போய் கைகள் இல்லாத நிலையில் பரிதாபமாக உள்ளது.

இதேபோல, ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட அண்ணாவின் சிலையில் இப்போது தலையே இல்லாத நிலையில் உள்ளது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக இருக்கும் அமுதராணி சண்முகம் என்பவர் அ.தி.மு.க வை சேர்ந்தவர்தான்.

இந்த ஊர்களின் உள்ளாட்சி பொறுப்புகளில் இருப்பவர்கள் மாற்று கட்சிகரர்களாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், மாநிலத்திலும், மாவட்டத்திலும், உள்ளாட்சி பொறுப்புகளிலும் அ.தி.மு.க வினரே இருக்கிறார்கள்.

இவர்கள் அண்ணாவின் பெயரால் ஆட்சி நடத்திக்கொண்டு அந்த அண்ணாவையே கண்டுகொல்லாமல் இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நடத்த்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திராவிட இயக்க தலைவர்களின் கொள்கைகளையும் நோக்கங்களையும் நம்முடைய அரசியல்வாதிகள் மறந்து விட்டாலும், அந்த தலைவர்களின் சிலைகளையாவது அவமானப்படுத்தாமல் வைத்திருந்தால் நல்லது.

இவ்வளவு பணம் விளம்பரங்கள் செய்ய செலவு செய்யும் ஜெயலலிதா  அண்ணா சிலையை கவனிப்பார ? அல்லது  அவரது தொண்டர்கள் கவனிப்பார்களா?


May 12, 2012

வசவாளர்களே வாழ்க ! அறிஞர் அண்ணா


1957-ம் ஆண்டு வாழ்க வசவாளர் எனும் ஓர் கட்டுரையை அண்ணா வரைந்தார்.
நெசவு - நெசவாளர் போல்
வசவு - வசவாளர்
இரு அண்ணாவின் புதிய சொல்லாக்கம் தமிழ் மொழிக்கு புது வரவு.

இரு சொல்லடுக்கு அல்ல; அண்ணாவின் நெஞ்சம்

இந்தக் கட்டுரையில் பெரியார் நம்மை எவ்வளவு தாக்கிப்பேசினாலும் தளராத பொறுமையுடன் நாம் மேற்கொண்ட பணியில் வெற்றி பெறுவோமேயானால் பெரியார் அவர்களும் போற்றிப் புகழ்வது திண்ணம்.

கரி தன் குட்டிக்கு, வீரமும், திறமும் வருவதற்காக துதிக்கையால் குட்டியை இழுத்தும், தள்ளியும் தட்டியும் கொட்டியும், பயிற்சி தரும் என்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அத்தனை பயிற்சியை தந்திருக்கிறது திராவிடக் கழகம். பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணிக்கொண்டு மறுபடியும் பயிற்சி தர முன் வரக்கூடும். அதைத் தவறாகக்கருத வேண்டாம்.
வாழ்க வசவாளர் 02.12.1957.

தோழர் ஈ.வெ.கி. சம்பத் கருத்து வேற்றுமை காரணமாக அண்ணாவைவிட்டு விலகி, பொது மேடைகளில் பேசுகிறார். அப்போது அண்ணா அவர்கள இப்படிக் குறிப்பிட்டார்.

கைமாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன், இத்தனைக் காலம். இப்பொழுதுதான் அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பெரியாரும், காங்கிரஸ் காரர்களும் என்னென்ன ஏசினார்ளோ அதை அப்படியே சிந்தாமல் எத்துவைத்துக் கொண்டு தோழர் சம்பத் பேசுகிறார். தாங்கிக் கொள்கிறேன். அதுதான் நான் காட்டவேண்டிய கைமாறு என்று கொள்கிறேன். என் இயல்போ எவர் என்னை எக்காரணம் கொண்டு எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும் அவர்கள் எப்போதாவது என்னைப்பற்றி எதாகிலும் இரண்டொரு நல்வார்த்தைகள் சொல்லி இருந்தால் அதை நினைவுப்படுத்திக்கொண்டு மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக்கொள்வது வாடிக்கை. இது மட்டுமல்ல அன்று நம்மை எவ்வளவோ பாராட்டினவர்கள்தானே, இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டார்கள். போகட்டும் என்று எண்ணிக்கொள்வேன்.
தம்பிக்குக் கடிதம், 23.04.1961
1957 தேர்தல் நேரம். அண்ணா காஞ்சியில் போட்டியிடுகிறார். காங்கிரசார் அவரை மூர்கத்தனமாக எதிர்த்தனர். ஒரு நாள் அண்ணா எழுந்து வெளியே வந்த போது அவர் வீட்டிற்கு எதிரில் உள்ள மின் விளக்குக் கம்பத்தில் காங்கிரசார் கையில் எழுதி - ஓர் தட்டியை மாட்டியிருந்ததைப் பார்த்தார். அந்தத் தட்டியில் அவர் பிறப்பு பற்றி மிக கீழ்த்தரமாக எழுதப் பட்டிருந்தது.  அண்ணா அவர்கள் பொறுமையாக என்னை அழைத்து ஆத்திரப்பட வேண்டாம் அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஒன்று செய்ய வேண்டும். பகலில்தான் தட்டியைப் படிக்க முடியும். இரவில் எல்லோரும் படிப்பதற்கு வசதியாக ஓர் பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்பாடு செய்ய சொன்னவர் அண்ணா!

மறுநாள் அந்த தட்டி அங்கே இல்லை. யார் அதை வைத்தார்களோ அவர்களே வெட்கப்பட்டுக் கழற்றி எடுத்துக் கொண்டுப்போய்விட்டார்கள்.

May 4, 2012

அறிவு பாதி அழிவு மீதி

  ""சார் புதுசா ஒரு ஐ-பேட் வாங்குனோம். எப்படி ஆபரேட் பண்ணுறதுன்னு நானும் என் ஒய்ஃப்பும் முழிச்சிக்கிட்டிருந்தப்ப, டென்த் படிக்கிற எங்க பையன் அசால்ட்டா ஆபரேட் பண்ணிட்டான் சார். கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுறான். பார்ட் பார்ட்டா கழட்டி, அசெம்பிள் பண்ணிடுறான். செவன்த் படிக்கிற எங்க பொண்ணும் ஃபேஸ்புக்கு, இ-மெயிலுன்னு கலக்கிக்கிட்டிருக்கா சார்''

-தங்கள் பிள்ளைகளின் தகவல் தொழில் நுட்பத் திறமை பற்றி இப்படிச் சொன்ன எக்ஸ்போர்ட் கம்பெனி பிராஞ்ச் மேனேஜர் கார்த்திகேயன் போன்றவர்களுக்கு இந்த திறமையின் பின்னே அறிவுடன் ஆபத்தும் கலந்திருக்கிறது என்பது ரொம்பவும் லேட்டாகத்தான் தெரிய வருகிறது.

சீட் வாங்குவதே குதிரைக்கொம்பு என்று சொல்லக்கூடிய சென்னை யின் பிரபல மூன்றெழுத்துப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தியும் இப்படித்தான் தகவல் -தொழில்நுட்பத்தில் எக்ஸ்பர்ட் என்று பெயரெடுத்திருந்தாள். சுறுசுறு துறுதுறு மாணவியான அவள் சில நாட்களாக ரொம்பவும் டல்லடிப்பதைப் பார்த்து, டாக்டரிடம் கூட்டிச்  சென்றார்கள். செக்கப் செய்த  லேடி டாக்டரிடமிருந்து வெளிப்பட்ட ரிசல்ட் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம், அந்த மாணவி கருவுற்றிருந்தாள்.

எந்தெந்த திறமைகளுக்காக அவளைப் பெற்றோரும் ஆசிரியைகளும் பாராட்டினார்களோ, அதே விஷ யங்களுக்காக அவளைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள். அவளுடைய இ-மெயில் இன்பாக்ஸிலும், ஃபேஸ் புக் மெசேஜ் பாக்ஸிலும் குவிந்திருந்த பாய் ஃப்ரென்ட்ஸின் ரொமான்ட்டிக் சாட்டிங்குகளும், செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.களும், இந்தத் தகவல் -தொழில்நுட்பம்தான் அவள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சி ரிசல்ட்டுக்குக் காரணம் என்பது தெரியவந்தது.

சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் இன்ஃபர்மேஷன் டெக்னா லஜியின் வளர்ச்சி எந்தளவுக்கு குழந்தைகள்-மாணவர்கள்-இளைஞர்களின் அறிவைப் பெருக்குகிறதோ, அதே அளவுக்கு சற்றும் குறைவில்லாமல் அழிவுப்பாதைக்கும் திசை திருப்புகிறது என்பதை சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் ஒப்புக்கொள்கிறார் கள்.

அறிவியலின் அதிவேக வளர்ச்சி- உலகமயமாக்கல் கோட்பாடு-புதிய பொருளாதாரக் கொள்கை- நுகர்வுக் கலாச்சாரம் இவையெல்லாம் நம் வீட்டுக்குள் தகவல்-தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு வந்து குவித்து வைக்கின்றன. இந்தியாவில் 55% மக்கள் கழிப்பிட வசதியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், 65%க்கும் அதிகமான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இது அண்மையில் கிடைத்த புள்ளி விவரம். செல்போனைத் தாண்டி, கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், ஐ-பேட் என்று புதுசு புதுசாக தகவல்-தொழில் நுட்ப சாதனங்கள் தாராளப் புழக்கத்தில் உள்ளன. வீட்டில் உள்ள பெரியவர்களைவிட இளைஞர்களும் மாணவர்களும் குழந்தைகளுமே இவற்றை அதிகமாகக் கையாள்கிறார்கள். அரசாங்கமே மாணவர்களுக்கு லேப்டாப்பை விலையில்லாமல் வழங்கி வரும் காலம் இது.

""நான் படிக்கும்போதெல்லாம் ஸ்கூலில் ஏதாவது அசைன்மென்ட் கொடுத்தால் எங்கப்பாவையும் அண்ணனையும் ஹெல்ப் பண்ணச் சொல்லி  தொந்தரவு செய்வேன். இப்ப என் பிள்ளைகள் அவங்களே இன்டர்நெட் மூலமா எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணிடுறாங்க. ப்ராட்பேண்டுக்கு ஒழுங்கா பில் கட்டுறது மட்டும்தான் என்னோட வேலை. என்னைவிட என் பிள்ளைகள் அறிவாளிகளாக இருக்கிறார்கள்'' என்கிறார் இரண்டு குழந்தைகளின் தந்தையான முரளி.

குழந்தைகள் உரிமை அமைப்பின் செயல்பாட்டாளரான தேவநேயன் நம்மிடம் விரிவாகப் பேசினார். ""தகவல்-தொழில் நுட்ப வசதிகளை எந்தெந்த வயதில் எந்தெந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வும் கண்காணிப்பும் மிகவும் அவசியம். இவையிரண்டும் இல்லாவிட்டால் பாதிப்புகள் அதிகமாகிவிடும். அதிலும், நுகர்வுவெறியோடு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஒரு குழந்தை, இரு குழந்தை உள்ள வீடுகளில், பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவதே பெற்றோரின் கடமை என்ற மனநிலை இருப்பதால், ஐ-பேட் உள்பட எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற கருவிகளுடன் தான் குழந்தைகள் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றன. போதாக்குறைக்கு, டி.வி. சேனல்களின் நிகழ்ச்சிகளும் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. வீட்டில் குழந்தைகளும் பெற்றோரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது.

இதன் காரணமாக, குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல்ரீதியான தவறிழைத்தல் களுக்கும் வழிவகுக்கின்றன. பழக்கவழக்கங்கள் பேச்சு வார்த்தைகள் இவை மோசமானதாக மாறுகின்றன. "பெரிய பருப்பா' என்ற வார்த்தை சர்வசாதாரணமாக குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அதுபோல இளம்பெண்கள் பலரும் "டுபுக்கு' என்கிறார்கள். இந்தச் சொற்கள் எதைக் குறிக் கின்றன என்பதைக்கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை. பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தருவது என்பதற்குப் பதில், "இது உனக்கு இப்போது தேவையில்லை. இது வேண்டாம்' என்று சொல்லி அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குவதே பெற்றோர்களின் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு, குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் அதிகரிக்கவேண்டும்.

பள்ளியிலும் அணுகுமுறைகள் மாறவேண்டும். ஊடகங் களை முறைப் படுத்தும் செயல் பாடுகள் வர வேண்டும். -அப் போதுதான் தகவல்-தொழில் நுட்ப ஆபத்து களிலிருந்து இளைய சமு தாயத்தை மீட்டு, அறிவுப்பாதைக்குத் திருப்ப முடியும்'' என்றார் தேவநேயன்.

இப்போதெல்லாம் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டரைக் கை யாளக் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்லும் ஆசிரியை ஜெயந்தி நிர்மலா, ""கம்ப்யூட்டரின் அடிப்படைச் செயல் பாடுகள், அதில் பெயிண்டிங் செய்வது, டிராயிங் முறைகள் பற்றியெல்லாம் சொல்லித் தரப்படுகிறது. உயர் வகுப்புகளில் கம்ப்யூட்டர் லேங்வேஜ்கள் கற்றுத் தரப்படு கின்றன.

செயல்வழிக் கற்றல் முறை வளர்ந்து வருவதால், மாணவ-மாணவிகளே தங்க ளுக்குத் தேவையானதைத் தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. அதனால் இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்துவது, கூகுளில் எப்படி சர்ச் செய்வது என்பதையெல்லாம் சொல்லித் தர வேண்டியுள்ளது. இதன் மூலமாக, அவர்கள் தங்களின் பாடம் சம்பந்தமான தகவல்களையும் படங்களையும் தேடிப் பெறமுடி கிறது'' என்கிறார்.

மாணவர்களின் இந்தத் தேடலும் ஆர்வமும், அதன் எல்லைகளைக் கடக்கும்போதுதான் திசைமாற்றம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற் பட்டவர்கள்தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உறுப்பின     ராக முடியும். ஆனால், பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் ஃபாய் ஃப்ரெண்ட்ஸ், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் தேடலுக்காக பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்து உறுப்பினர்களாகிவிடுகிறார்கள்.

சாட்டிங் வசதிகள் மூலமாக டேட்டிங், ஃப்ரீசெக்ஸ் பற்றியெல்லாம் பேசத்தொடங்கி, பின்னர் நேரில் அறிமுகமாகி, தீம்பார்க்-ஷாப்பிங் மால்-ரிசார்ட்ஸ் எனத் தனிமை நாடி செல்கின்ற அளவுக்கு நிலைமை முற்றிவிடுகிறது. இந்தப் போக்கு சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருவதால் தகவல்-தொழில் நுட்ப வளர்ச்சி என்பது வரமா, சாபமா என்ற கேள்வி எழுகிறது.

""வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. இத்தகைய சாதனங்கள் நம் வீட்டு வரவேற்பறையைத் தாண்டி, படுக்கையறை வரைக்கும் வந்துவிட்டன. அவற்றை நம் பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இது வரமா, சாபமா என்று சொல்ல முடியும் என்கிற இல்லத்தரசியும் சுற்றுச்சூழல் இலக்கிய ஆய்வாளருமான சித்ராபாலசுப்ரமணியன், ""பொறுப் புணர்ச்சியுடன் கூடிய சுதந்திரத்தை நம் பிள்ளைகளுக்கு அளித்து, அதற்கேற்றபடி அவர்களைப் பழக்கினால் இத்தகையத் தொழில்நுட்பங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், பெற்றோர்கள் பலரும் இதனை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் திரிசங்கு நிலையில் இருந்தால், பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது.

நான் வளர்ந்த காலத்திற்கும் இன்று என் பிள்ளைகள் வளர்கிற காலத்திற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. சகமாணவர்களுடன் பேசுவதும் பழகுவதும் இன்று இயல்பானதாகிவிட்டது.

இப்படிப்பட்ட நிலையில், நாம்தான் நம் பிள்ளை களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதைச் சொல்லித்தரவேண்டும்.

கவுன்சிலிங் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் தேவைப்படுகிறது. நம் பிள்ளைகளுடன் நாம் எந்தளவுக்கு நேரத்தைச் செலவிடுகிறோம், அவர்களின் செயல்பாடுகளில் அக்கறை செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். அறிவியல் வளர்ச்சியை நல்லமுறையில் பிள்ளைகள் பயன்படுத்தச் செய்யும் பொறுப்பு பெற்றோருக்குரியது'' என்கிறார் அழுத்தமாக.

ஒரே வீட்டில் உட்கார்ந்துகொண்டு "சாப்பிட வருகிறீர்களா' என்று மனைவி எஸ்.எம்.எஸ். அனுப்புவதும், அதற்கு கணவனும் பிள்ளைகளும் பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் வளர்ந்துகொண்டிருந்தால் தகவல்- தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தறிகெட்ட நிலைமை யைத்தான் உருவாக்கும். "அளவுக்கு மிஞ்சினால்' என்ற பழமொழி, இந்தத் தகவல்தொழில்நுட்பக் காலத்திலும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.

-லெனின்

 நன்றி :நக்கீரன்

Apr 4, 2012

இந்தியன் பிரிமியர் லீக் அட்டவணை 2012



Date Time Match Detail venue
Wed Apr 04 8 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி (8 விக்கெட்)
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Thu Apr 05 8 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் வெற்றி ( 8 விக்கெட்)
ஈடன் கார்டன் மைதானம்
Fri Apr 06 4 PM மும்பை இந்தியன்ஸ் Vs புனே வாரியர்ஸ்


புனே வாரியர்ஸ் வெற்றி( 28 ரன்கள்)
வான்கடே மைதானம்
Fri Apr 06 8 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி(30 ரன்கள்)
சவாய் மான்சிங் மைதானம்
Sat Apr 07 4 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி (20 ரன்கள்)
சின்னசாமி மைதானம், பெங்களூரு
Sat Apr 07 8 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை கிங்ஸ்வெற்றி (74 ரன்கள்)
ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., மைதானம்
Sun Apr 08 4 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி (22 ரன்கள்)
சவாய் மான்சிங் மைதானம்
Sun Apr 08 8 PM புனே வாரியர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


புனே வாரியர்ஸ் வெற்றி (22 ரன்கள்)
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Mon Apr 09 8 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி (5 விக்கெட்)
ஏ.சி.ஏ., - வி.டி.சி.ஏ., மைதானம்
Tue Apr 10 4 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கோல்கட்டா நைட் ரைடர்ஸ் வெற்றி (42 ரன்கள்)
எம். சின்னசாமி மைதானம்
Tue Apr 10 8 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் வெற்றி(8 விக்கெட்)
பெரோஷா கோட்லா மைதானம்
Wed Apr 11 8 PM மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி (27 ரன்கள் )
வான்கடே மைதானம்
Thu Apr 12 4 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி (5 விக்கெட்)
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Thu Apr 12 8 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs புனே வாரியர்ஸ்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி (7 விக்கெட்)
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
Fri Apr 13 8 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


கோல்கட்டா நைட் ரைடர்ஸ் வெற்றி (5 விக்கெட்)
ஈடன் கார்டன் மைதானம்
Sat Apr 14 8 PM புனே வாரியர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


புனே வாரியர்ஸ் வெற்றி (7 விக்கெட் )
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Sun Apr 15 4 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி (2 ரன்கள்)
ஈடன் கார்டன் மைதானம்
Sun Apr 15 8 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி(59 ரன்கள்)
எம். சின்னசாமி மைதானம்
Mon Apr 16 8 PM மும்பை இந்தியன்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் வெற்றி(92 ரன்கள்)
வான்கடே மைதானம்
Tue Apr 17 4 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெறறி(5 விக்கெட்)
சவாய் மான்சிங் மைதானம்
Tue Apr 17 8 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs புனே வாரியர்ஸ்


பெங்களூரு ராயல் சால்ஞ்சர்ஸ் வெற்றி(6 விக்கெட்)
எம். சின்னசாமி மைதானம்
Wed Apr 18 8 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கோல்கட்டா நைட் ரைடர்ஸ் வெற்றி(8 விக்கெட் )
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
Thu Apr 19 4 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் வெற்றி ( 5 விக்கெட்)
பெரோஷா கோட்லா மைதானம்
Thu Apr 19 8 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs புனே வாரியர்ஸ்


சென்னை கிங்ஸ் வெற்றி(13 ரன்கள் )
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Fri Apr 20 8 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி(5 விக்கெட்)
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
Sat Apr 21 4 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி (7 விக்கெட்)
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Sat Apr 21 8 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs புனே வாரியர்ஸ்


புனே வாரியர்ஸ் வெற்றி (20 ரன்கள்)
பெரோஷா கோட்லா மைதானம்
Sun Apr 22 4 PM மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி (6 விக்கெட்)
வான்கடே மைதானம்
Sun Apr 22 8 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கோல்கட்டா நைட் ரைடர்ஸ் வெற்றி(5 விக்கெட்)
பாரபதி மைதானம்
Mon Apr 23 8 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி (46 ரன்கள்).
சவாய் மான்சிங் மைதானம்
Tue Apr 24 4 PM புனே வாரியர்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் வெற்றி (8 விக்கெட்).
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Tue Apr 24 8 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


மழையால் போட்டி ரத்து
ஈடன் கார்டன் மைதானம்
Wed Apr 25 4 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி (4 விக்கெட்).
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
Wed Apr 25 8 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


மழையால் போட்டி ரத்து.
எம். சின்னசாமி மைதானம்
Thu Apr 26 8 PM புனே வாரியர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றி ( 18 ரன்கள் )
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Fri Apr 27 8 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்


டில்லிடேர்டெவில்ஸ் வெற்றி (37 ரன்கள் )
பெரோஷா கோட்லா மைதானம்
Sat Apr 28 4 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி ( 7 ரன்கள் )
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Sat Apr 28 8 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


கோல்கட்டா நைட்ரைடர்ஸ் வெற்றி ( 47 ரன்கள் )
ஈடன் கார்டன் மைதானம்
Sun Apr 29 4 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


டில்லி வெற்றி(1 ரன்)
பெரோஷா கோட்லா மைதானம்
Sun Apr 29 8 PM மும்பை இந்தியன்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி(5 விக்கெட்)
வான்கடே மைதானம்
Mon Apr 30 8 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கோல்கட்டா ரைட் ரைடர்ஸ் வெற்றி(5 விக்கெட்)
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Tue May 01 4 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs புனே வாரியர்ஸ்


டெக்கான் சார்ஜர்ஸ் வெற்றி ( 13 ரன்கள் )
பாரபதி மைதானம்
Tue May 01 8 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் (6 விக்கெட்)
சவாய் மான்சிங் மைதானம்
Wed May 02 8 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி (4 விக்கெட்)
எம். சின்னசாமி மைதானம்
Thu May 03 4 PM புனே வாரியர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி(1ரன்)
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Fri May 04 8 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


சென்னை கிங்ஸ் வெற்றி(10 ரன்கள்)
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Sat May 05 4 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs புனே வாரியர்ஸ்


கோல்கட்டா நைட்ரைடர்ஸ் வெற்றி (7 ரன்கள்)
ஈடன் கார்டன் மைதானம்
Sat May 05 8 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி (43 ரன்கள்)
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
Sun May 06 4 PM மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி (2 விக்கெட்)
வான்கடே மைதானம்
Sun May 06 8 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி (5 விக்கெட்)
எம். சின்னசாமி மைதானம்
Mon May 07 8 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கோல்கட்டா நைட்ரைடர்ஸ் வெற்றி (6 விக்கெட்).
பெரோஷா கோட்லா மைதானம்
Tue May 08 4 PM புனே வாரியர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி (7 விக்கெட்)
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Tue May 08 8 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி (25 ரன்கள்)
ராஜிவ் சர்வதேச மைதானம்
Wed May 09 8 PM மும்பை இந்தியன்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் வெற்றி (9 விக்கெட்).
வான்கடே மைதானம்
Thu May 10 4 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


டில்லி டேர்டெவில்ஸ் வெற்றி ( 9 விக்கெட்)
ராஜிவ் சர்வதேச மைதானம்
Thu May 10 8 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி ( 4 விக்கெட்).
சவாய் மான்சிங் மைதானம்
Fri May 11 8 PM புனே வாரியர்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (35 ரன்கள்).
சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Sat May 12 4 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்


மும்பை இந்தியன்ஸ் வெற்றி ( 27 ரன்கள்).
ஈடன் கார்டன் மைதானம்
Sat May 12 8 PM சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டில்லி டேர்டெவில்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி (9 விக்கெட்).
எம்.ஏ., சிதம்பரம் மைதானம்
Sun May 13 4 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs புனே வாரியர்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி (45 ரன்கள்)
சவாய் மான்சிங் மைதானம்
Sun May 13 8 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs டெக்கான் சார்ஜர்ஸ்


பஞ்சாப் வெற்றி(4 விக்கெட்)
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்
Mon May 14 4 PM பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ்


மும்பை அணி வெற்றி(5 விக்கெட்
எம். சின்னசாமி மைதானம்
Mon May 14 8 PM கோல்கட்டா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை வெற்றி(5 விக்கெட்)
ஈடன் கார்டன் மைதானம்
Tue May 15 8 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்


டில்லி வெற்றி(5 விக்கெட்)
பெரோஷா கோட்லா மைதானம்
Wed May 16 8 PM மும்பை இந்தியன்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ்


கோல்கட்டா வெற்றி(32 ரன்கள்)
வான்கடே மைதானம்
Thu May 17 4 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs சென்னை சூப்பர் கிங்ஸ்


பஞ்சாப் வெற்றி(6விக்கெட்)
இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம்
Thu May 17 8 PM டில்லி டேர்டெவில்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்


பெங்களூரு வெற்றி(21 ரன்கள்)
பெரோஷா கோட்லா மைதானம்
Fri May 18 8 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்


டெக்கான் வெற்றி(5 விக்கெட்)
ராஜிவ் சர்வதேச மைதானம்
Sat May 19 4 PM கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs டில்லி டேர்டெவில்ஸ் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம்
Sat May 19 8 PM புனே வாரியர்ஸ் Vs கோல்கட்டா நைட் ரைடர்ஸ் சுப்ரதா ராய் சகாரா மைதானம்
Sun May 20 4 PM டெக்கான் சார்ஜர்ஸ் Vs பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ராஜிவ் சர்வதேச மைதானம்
Sun May 20 8 PM ராஜஸ்தான் ராயல்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் சவாய் மான்சிங் மைதானம்