Aug 31, 2012
Aug 9, 2012
மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!
மதுரை வலைப் பதிவர்கள் குழுமம்
மதுரையை அடையாளமாக கொண்டுள்ள வலைப்பதிவர்கள் குழுமமாக சங்கமிக்கும் வலைப்பூ!
WEDNESDAY, AUGUST 8, 2012
மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்!
வணக்கம் வலையுலக நண்பர்களே,
மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட,மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுரை மாவட்டம், அருகிலுள்ள திண்டுக்கல், சிவகங்கை போன்ற அருகிலுள்ள மாவட்டம் மற்றும் மதுரையைச் சேர்ந்த இந்தியாவின் மற்றைய பகுதிகள் மற்றும் மதுரையைச் சேர்ந்த அயல் நாட்டு பதிவர்களும் நமது குழுமத்தில் இணையலாம்.
bloggersmadurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றிய விபரங்கள், வலைப்பதிவு பெயர், லிங்க் அனுப்பவும். மேலும் இந்த தளத்தில் பாலோயராகவும் இணையலாம்.
மேலும் தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.
நட்புடன்,
தருமி - தருமி
சீனா - வலைச்சரம்
ரமணி - தீதும் நன்றும் பிறர்தர வாரா!
தமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்வாசி
வா.கோவிந்தராஜ்- தமிழன்
Jul 9, 2012
'செயல்படாத பிரதமர் மன்மோகன்' - டைம் இதழ் கருத்து !
'செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங்' என்று அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் அட்டைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
'டைம்' பத்திரிகையின் ஆசியப் பதிப்பு அடுத்த வாரம் வெளிவர உள்ளது. அதில் மன்மோகன் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில், 'மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவான பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லை; நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், மன்மோகன் சிங் செல்வாக்கை இழந்து வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளாக தனது நம்பிக்கைத் ததும்பும் சாந்தமான முகத்தை மன்மோகன் சிங் இழந்துவிட்டார். அவர் தனது அமைச்சரவை சகாக்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் திணறுகிறார்.தாற்காலிகமாக நிதியமைச்சர் பொறுப்பையும் அவர் கவனித்து வந்தாலும், தான் கொண்டு வர முயற்சிக்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் உதவக்கூடிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் முட்டுக்கட்டை போடப்படுகின்றன...''இப்படி அடுக்கடுக்காக நீளுகின்றன, பிரதமர் மன்மோகன் சிங் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள்.
அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர் என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங்கை, டைம் பத்திரிகை காய்ச்சி எடுத்து இருப்பதன் பின்னணி குறித்து நடுநிலையாளர்கள் அலசத் தொடங்கி இருக்கிறார்கள். டைம் சொல்லும் சேதியில் முக்கிய விஷயத்தில் ஒன்று... '1990-களில் நிதி அமைச்சராக இருந்தபோது... பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், தற்போது மன்மோகன் சிங் அரசில் நிலவும் பணவீக்கம், ஊழலால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். தொழிலதிபர்கள் தெரிவிக்கும் யோசனைகளான மானியங்களை குறைத்தல், டீசல் விலை நிர்ணயத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே மேற்கொள்ள அனுமதித்தல், மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற வியாபார நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதியளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலை என அவருடைய கைகள் கட்டப்பட்டுள்ளன' என்று 'டைம்' கூறியிருக்கிறது!அதாவது, மன்மோகனின் கைகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று டைம் அல்லது அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வி இப்போது எழுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் பற்றி, இந்தியர்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை.
நன்றி விகடன்
Jul 3, 2012
இளமையாக இருக்க நிறைய தண்ணீர் குடிங்க!
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனி களில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன் மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.
எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பைக் குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையப் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது.
இளமையாக இருப்பது குறித்து, இயற்கை மருத்துவர் சிவராமன்: "ஸ்கின் டிரை ஆகுதுப்பா... நீ என்ன கிரீம் யூஸ் பண்ற...?' என, குளிர்பானத்தை உறிஞ்சுக் கொண்டே கேட்கும் யுவதிக்கு, தான் உறிஞ்சும் குளிர்பானமே, தன் வயதை உறிஞ்சும் என்பது தெரியவில்லை. "காலையில் சாப்பாட்டுக்கு முன், ஒரு வருடம், மாலையில் சாப்பாட்டுக்கு அப்புறம், ஒரு வருடம், இந்த மருந்தை சாப்பிட்டால் போதும்...' என, யாராவது, உங்கள் வயதைக் குறைக்கிறேன்னு சொன்னால் நம்ப வேண்டாம். அக்மார்க், டுபாக்கூர் மாத்திரை வியாபாரம் மட்டுமே அது. மருந்து மாத்திரையால், வயதைக் குறைக்க முடியாது; வாலிபத்தை மீட்க முடியாது.ஆனால், உணவால் இளமையை இழக்காமல் வைத்திருக்க முடியும். தண்ணீரைச் சுட வைத்து, ஆற வைத்து, தினசரி நாலைந்து லிட்டர் குடித்தாலே போதும். தோலின் ஈரத் தன்மை போகாது இருக்க அது உதவும். உடல் செல்லின் வளர்சிதை மாற்றத்தில், ஒவ்வொரு செல்லும், ஆரோக்கியத்துடன், உத்வேகத்துடன் திகழ, போதுமான நீர்ச் சத்து அவசியம். ஆதலால், இளமையாய் இருக்க, போதுமான தண்ணீர் குடியுங்கள். காலையில், நவதானியக் கஞ்சி, வரகரிசிப் பொங்கல், ராகி இட்லி என, சிறுதானியம் நிறைந்த உணவு சாப்பிடுங்கள். ஒவ்வொரு வேளை உணவிலும், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த சமாச்சாரமெல்லாம், வாசனை தருவது மட்டுமல்ல; வயசும் தரும்.அடுத்து, வயதாவதைத் தடுக்கும் உணவில், முதலிடம், பழங்களுக்குத் தான். நெல்லியில் உள்ள பாலிபீனால்கள், வைட்டமின் சி, இன்னும் சில நுண்ணிய துவர்ப்பிகள் எல்லாம், வயோதிக மாற்றத்தைத் தடுப்பதை, மருத்துவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதேபோல், கொட்டையுள்ள பன்னீர் திராட்சை, மாதுளை, சிவப்புக் கொய்யா, அத்தி, அவகாடோ, சிவப்பு ஆப்பிள் இவையெல்லாம், இளமைக்கு வித்திடும் உணவுகள். வயதாவதைக் காட்டிக் கொடுக்கும் முகச் சுருக்கம், கண்ணுக்கு கீழான கருவளையம், தோல் சுருக்கம், வறட்சி நீங்க அல்லது வராமல் தடுக்க, தினம், ஒரு வேளை பழம் சாப்பிடுங்கள்; பொலிவு பொங்கும்.Jun 18, 2012
ஆரோக்கியத்திற்கான உணவுகள் மற்றும் முறைகள்
உணவே மருந்து உங்கள் உடல் நிலையை பாதுகாக்க நல்ல உணவை நேரத்தோடு அளவாக சாப்பிடுங்கள்
பல சமயங்களில் நாம் என்ன உண்ணுகிறோம் என்பதை உணராமலேகூட உண்ணுகிறோம். பொதுவாகவே நாம் சாப்பிடும்போது, பேசுவது, நடப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற மற்ற நடவடிக்கைகளில் ஈடு படுகின்றோமே தவிர, உண்ணும் உணவில் கவனம் செலுத்துவதில்லை. நாம் உண்ணும் உணவிற்கு சிறிய அளவே மதிப்பு கொடுக்கிறோம். பிறகு கொழுப்பு சக்தி அதிகமாக சேருவதில் ஏன் ஆச்சரியப்பட வேண்டும்.
சைவ உணவு என்றால் அதிகமாக உண்ணலாம் என்பது மக்களுடைய எண்ணமாக இருக்கிறது. இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சைவ உணவாகவே இருந்தாலும் தேவைக்கு அதிகமாக உண்ணுதல் என்பது தவறு.தேவைக்கு அதிகமாக உண்ணுதல் என்பது நோய்.சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி, தேவைக்கு அதிகமாக உண்ணுவது உடலில் அதிக பிரச்சினைகளை உருவாக்கும். தேவைக்கு ஏற்ப உண்ணுவது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ளவேவில்லை.
நாம் உண்ணும்போது, நமக்கு என்ன தேவை, எவ்வளவு தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உண்ணுவது என்பது பேராசையால் விளைவது. அதிகமாக உண்ணுவது என்பதை நம்மால் அடைய முடியாத தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்கான ஒரு மாற்றுவழியாகப் பயன்படுத்துகிறோம்.சைவ உணவே ஆன்மீக பயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு சிறந்த உணவு. அது சுலபமாக ஜீரணிக்கப்பட்டு நல்ல சக்தியை உடலில் சேர்க்கிறது. மற்றும் மென்மையான சக்தி ஓட்டத்தை உருவாக்கி உடலில் உள்ள சக்ரங்கள் மற்றும் சக்தி மையங்களை இணைக்க உதவுகிறது.
புத்தரின் கருணையாலேயே அதிக அளவில் சைவ உணவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தோமானால் சைவ உணவே சாத்வீக உணவாக உணவறையில் ஆள்கிறது. சாத்வீக சைவ உணவு உண்ணும் மக்கள் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தவிர்க்கிறார்கள். இந்த மூன்று பொருட்களிலும் (Steroid) உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் உள்ளது. அவற்றுள் இருக்கும் சில நல்ல மருத்துவ குணத்திற்காக அவ்வப்பொழுது உட்கொள்ளலாம். தொடர்ச்சியாக இவற்றை உட்கொள்வதால் சக்ரங்களுக்குச் செல்லும் சக்தி ஓட்டத்தை குறுக்கீடு செய்கிறது. அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதும் ஒரே விளைவையே ஏற்படுத்துகிறது. தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, நாம் நமது உடலை ஒரு குப்பைத் தொட்டி போன்று பார்க்கின்றோம். தேவையற்றப் பொருட்களைச் சேர்க்கும்போது அதனை செறிமானம் செய்வதற்கே உடம்பிலுள்ள நல்ல வேதிப்பொருட்கள் விரயப்படுத்தப்படுகிறது. உணவை உடலுக்குள்ளே செலுத்தி வீணாக்குவதை விட உணவை வெளியே விரயமாக்குவது அதனினும் சிறந்தது. ஆகையால் உணவுபரிமாரும்போது சிறுது சிறுது தாகத்தான் பரிமாற்ற வேண்டும்
நாம் தட்டிலுள்ள உணவை மறுக்கும் போது தட்டிலுள்ள உணவை வெளியே மீந்து விடுகிறது. மிகையான உணவை மட்டுமே வீணடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு உண்ண கொடுத்து விடலாம்.ஆனால் உணவை உடலில் திணிக்கும்போது அது உடலுக்கு இரட்டை தீமையை விளைவிக்கின்றோம். அப்படி திணிக்கும்போது அது உடலுக்கு தேவையற்றதாகி விடுகிறது. மற்றும் அந்த உணவினால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. அதை செரிமானம் செய்வதில் நம் உடல் சக்தி (சோர்ந்து விடுகிறது) அளவுக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, உணவு விரயமாகிறது. மேலும் விஷமாகவும் உருவாகிறது.தேவைக்கு அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, மறுப்பதே சிறந்தது. என்ன உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் உணவிற்கு மதிப்பு கொடுக்கும் போது உங்கள் உடலும் அதற்கு இணையாக உங்களுக்கு மதிப்பளிக்கும்.
லேபிள்கள்:
Steroi,
உணவே மருந்து,
சைவ உணவு,
விரயமாக்குவது
Subscribe to:
Posts (Atom)
