Aug 9, 2019

இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்-indian-education-sytem

சூர்யாவின் அகரத்திடம் இந்தியக் கல்வித் துறை கற்க வேண்டிய பாடம்

indian-education-sytem-things-to-learn-from-surya-agaram
சமஸ்
வாழ்வின் அபாரமான செய்திகளை அநாயாசமாகத் தாங்கி வரும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டு. அப்படி ஒரு தேவ தூதனுடனான சந்திப்பு, மூன்றாண்டுகளுக்கு முன் நான் அரிதாக எழுந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்ற ஒரு அதிகாலையில் நிகழ்ந்தது. நள்ளிரவில் மீன்பிடிக்குச் சென்றுவிட்டு படகில் திரும்பிவந்த கடலோடிகளின் குழுவில் அவன் இருந்தான். முந்தைய இரவின் நட்சத்திர ஒளியை உடலிலிருந்து உதிர்த்திராத நல்ல பொடி மீன்கள் அவர்களுடைய வலையில் இருந்தன. மீன் வாங்குவதற்காக நான் அங்கு செல்லவில்லை; அந்த நேரத்தில் அப்படி ஒரு படகே ஆச்சரியம் என்றாலும், சிறுவனின் துறுதுறுப்பும் வலையிலிருந்து மீன்களை அவன் கொய்த லாகவமும் படகை நோக்கி என்னை இழுத்தன. துடுப்புபோல இருந்தவனுடன் பேசலானேன்.
அவனுக்குத் தந்தை இல்லை. தாய் மனநலம் குன்றியவள். ஒரு தங்கை இருக்கிறாள் படிக்கிறாள், வீட்டு வேலைக்கும் செல்கிறாள். குப்பத்திலிருந்து நள்ளிரவில் சில மைல்கள் தொலைவை சைக்கிளில் கடந்து கடற்கரைக்கு வந்தால், சிறுவன் இந்த மூவர் குழுவில் சேர்ந்துகொள்ளலாம். உடன்கடல் மீன்பிடிக்கு இரவு இரண்டு மணி வாக்கில் கடலுக்குள் சென்று, ஆறு மணி வாக்கில் திரும்பிவிடுவது அவர்களுடைய வழக்கம். வீட்டுக்குச் செல்ல எட்டு மணி ஆகும். நூறு ரூபாய் கிடைக்கும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும். மருத்துவர் ஆகி சேவை புரிய வேண்டும் என்றான். வியர்வையில் நனைந்துவிட்டிருந்தவனைக் கை குலுக்கி அனுப்பிவைத்தேன்.
எப்போது தூங்குவான்?
ஓராண்டுக்கு முன் அவனை மீண்டும் பார்த்தேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘அகரம் கல்வி அறக்கட்டளை’ சார்பில் நடத்தப்பட்ட ‘அறம் செய்ய விரும்புவோம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்காகச் சென்றிருந்தபோது, கூட்டத்தில் ஒருவனாக அவன் முகத்தைப் பார்த்தேன். எனக்கு அப்போது அவன் அந்தப் புத்தகத்துக்குள் இருப்பவர்களில் ஒருவனாகத் தெரிந்தான்.
என்னை நிலைகுலையச் செய்த புத்தகங்களில் ஒன்று அது. சமூகத்தின் கீழ்த்தட்டிலிருந்து கல்வி உதவி பெற்று மேல் நோக்கி வருபவர்கள் எந்த மாதிரியான பின்னணியில் இருந்தெல்லாம் வருகிறார்கள், அவர்களுடைய வீடுகள் எப்படி இருக்கின்றன, அவர்களுடைய குடும்பச் சூழல் என்ன, அவர்களுடைய வாழ்க்கை பிற்பாடு எப்படி மாறுகிறது, அவர்கள் என்னென்ன தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் புகைப்படங்களோடு சொல்லும் அந்தப் புத்தகம், மனசாட்சியுள்ள எவருடைய நெஞ்சத்தையும் குமுறச் செய்யும்.நம்முடைய அகராதியிலிருந்து அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பிள்ளைகளின் குடியிருப்புகள் எதையும் நாம் வீடுகள் என்று குறிப்பிடவே முடியாது. வெறும் நூறு சதுரடி அல்லது இருநூறு சதுர அடிக்கு உட்பட்ட குடிசைகள்; கீழே மண் தரை, மேலே கீற்றுக்கூரை, சுவர்களாகச் சாக்குத் துணி; நான்கு பேர், ஐந்து பேர் கொண்ட குடும்பம் அதற்குள் வசிக்கிறது. அவர்களுடைய உடைமைகள், சமையல், படுக்கை, வாழ்க்கை சகலமும் அதற்குள்தான். பொருளாதார அழுத்தம் மட்டுமல்ல அது; நெஞ்சத்தில் ஒரு பெருமூட்டைபோல ஒட்டுமொத்த சமூக அழுத்தத்தையும் தூக்கிச் சுமந்துகொண்டுதான் பள்ளிக்கூடங்களை நோக்கி மூச்சிரைக்க அவர்கள் ஓடி வருகிறார்கள். அவர்களைத்தான் நாம் சொல்கிறோம், “இது ஒரே நாடு பன்னிரண்டு ஆண்டுகள் படித்து நீ எடுத்த உன் பள்ளிக்கூட மதிப்பெண்கள் போதாது; நான் வைக்கும் இன்னொரு தேர்வில் நீ டெல்லியிலும் சென்னையிலும் வருஷத்துக்கு பத்து லட்சம் வரை கட்டி சிறப்புப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுடன் மோதி ஜெயிக்க வேண்டும்; நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்குப் போ! இன்னும் ஓடு!”
இந்த 10 வருஷத்தில் ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்; அவர்களில் 1,169 பேர் பொறியாளர்கள்; 54 பேர் மருத்துவர்கள். இவர்களில் 90% பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நம் கண்ணுக்குப் புலப்படும் தூரத்தில் இருப்பது மட்டும் உலகம் அல்ல என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது இந்தக் கல்விப் பணி” என்றார். “பெற்றோர் இறந்துவிட்டார்கள். விண்ணப்பம் வாங்கக்கூட அந்த மாணவியிடம் பணம் இல்லை. நாம் செய்தது சின்ன உதவி. ஆனால், அது இன்று இந்திய ராணுவத்தில் அவரை மருத்துவராக ஆக்கியிருக்கிறது. கல் உடைக்கிற தொழிலாளியின் மகனும், ஆடு மேய்ப்பரின் மகனும் மருத்துவர்கள் ஆகியிருக்கின்றனர். கல்வி ஒரு சமூக அறமாக இருக்க வேண்டும். ‘பணம் இருந்தால் விளையாடு’ என்கிற சூதாட்டமாக அது மாறக் கூடாது இல்லையா?”
சூர்யா நிறுவியது என்றாலும், ‘அகரம் அறக்கட்டளை’ என்பது சூர்யா மட்டும் அல்ல; இப்படி ஒரு அமைப்புக்கு கருத்துருவம் கொடுத்த எழுத்தாளர் ஞானவேல், செயலுருவம் கொடுத்த கல்வியாளர் கல்யாணி, அமைப்பைச் சுமந்து பொறுப்பேற்று நடத்தும் ஜெயஸ்ரீ, தங்களுடைய பணிகளுக்கு அப்பாற்பட்டு எளியோரின் கல்விக்காகச் சேவையாற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், ஏழை மாணாக்கரின் எதிர்காலத்துக்காக நிதியளிக்கும் கொடையாளர்களின் கூட்டுச் சேர்க்கை அது. “உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களை நேரில் பார்க்கச் செல்லும்போது, நல்ல உடைகூட இல்லாத நிலையில் வெளியே வர சங்கடப்பட்டு கூனிக்குறுகி நிற்கும் பிள்ளைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களை அடுத்தகட்டத் தேர்வுக்காக அருகில் உள்ள நகரத்துக்கு அழைத்தால் பலரிடம் பஸ் செலவுக்குக்கூடப் பணம் இருக்காது. பெண் பிள்ளைகளின் எல்லா படிப்புச் செலவையும் நாம் ஏற்றுக்கொண்டாலும்கூட, சமூகச்சூழல் சார்ந்து பெற்றோர்கள் யோசிப்பார்கள். உயர்கல்வி படித்துவிட்டால் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவது, திருமணச் செலவு என்று எல்லாமே மாறிவிடும் என்று அஞ்சுவார்கள். ஏழ்மை என்றால் அப்படி ஒரு ஏழ்மை இங்கே இருக்கிறது; நாம் கிராமங்களிலிருந்து நிறைய தூரமாகிவிட்டோம்” என்றார் ஞானவேல்.
நான் ‘அகரம்’ அமைப்பின் மீது கொண்டிருக்கும் பெருமதிப்பு அது தன்னிடம் உதவி கோரும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க உருவாக்கிக்கொண்டிருக்கும் தேர்வு முறையில் இருக்கிறது. வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு மாணாக்கர்களை அது வரிசைப்படுத்துவதில்லை. உயர்கல்விக்கு உதவி கேட்டு விண்ணப்பிப்பவர்களைத் தேர்ந்தெடுக்க ‘அகரம்’ கையாளும் முறைமை இது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 150 புள்ளிகள், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 50 புள்ளிகள். அரசுப் பள்ளி மாணவர் என்றால் 15 புள்ளிகள். மாற்றுத்திறனாளி என்றால் 20 புள்ளிகள். தலித்துகள் அல்லது பழங்குடியினர் அல்லது இலங்கை அகதிகள் என்றால் 25 புள்ளிகள். மலைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர் என்றால் 25 புள்ளிகள். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத குக்கிராமத்தினர் என்றால் 20 புள்ளிகள். மின் வசதி இல்லாத வீட்டில் வசிப்பவர் என்றால் 10 புள்ளிகள். தாயை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 20 புள்ளிகள். தந்தையை இழந்த அல்லது அவருடைய அரவணைப்பை இழந்த மாணவர் என்றால் 10 புள்ளிகள். குடிநோய்க்கு ஆளாகி குடும்பத்தைக் கவனிக்காதவராகத் தந்தை இருந்தால் 5 புள்ளிகள். குடும்பத்தில் முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வரும் மாணவர் என்றால் 10 புள்ளிகள். பெற்றோர் பத்தாம் வகுப்பு வரைகூடப் படித்திராதவர்கள் என்றால் 10 புள்ளிகள். தன்னார்வலர்கள் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் நேரில் செல்கிறார்கள். உண்மையை உறுதிசெய்கிறார்கள். அவர்களுடைய கள நிலவர அறிக்கைகளிலிருந்தே ‘அகரம்’ தன்னுடைய செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது.
எளியோர் கல்விக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்ட பேராசிரியர் கல்யாணி வகுத்தளித்த முறைமை இது. “ஏன் தந்தையில்லாக் குழந்தைக்கு 10 புள்ளிகள் என்றும் தாயில்லாக் குழந்தைக்கு 20 புள்ளிகள் என்றும் பிரித்திருக்கிறீர்கள்? பொதுவாக, தந்தையில்லாக் குழந்தைகள்தானே பொருளாதாரரீதியாக அதிகம் பாதிக்கப்படும் சாத்தியம் நம் சமூகத்தில் இருக்கிறது?” என்று பேராசிரியரிடம் கேட்டேன். “அந்தப் பொதுப்பார்வை தவறு என்பதையே எங்கள் களப்பணி அனுபவத்தில் உணர்ந்துகொண்டோம். தந்தையில்லாக் குழந்தைகள் எப்படியோ தாயால் படிக்கவைக்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால், தாயில்லாக் குடும்பங்களோ சீரழிந்துவிடுகின்றன. அந்தக் குடும்பங்களில் விழும் முதல் அடி குழந்தைகளின் படிப்புக்குத்தான்” என்றார் கல்யாணி.
அடிப்படையில், நம்முடைய சமூகம் தாய்வழிச் சமூகமாக இருக்கிறதா, தந்தைவழிச் சமூகமாக இருக்கிறதா என்ற கேள்வியை நீங்கள் சொல்லும் கள உண்மைகள் எழுப்புகின்றன என்று சொன்னேன். “இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றார் கல்யாணி. “தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளில் குடிநோயானது குடும்பங்களைச் சீரழிக்கும் பெரும் சமூக அவலமாக மாறியிருப்பதை எங்களுடைய இந்தப் பயணத்தில் பல குடும்பங்களின் நிலையிலிருந்து உணர்ந்தோம். அதனால்தான் அப்படிப்பட்ட குடிநோயாளிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 5 புள்ளிகளைக் கூடுதலாகக் கொடுக்கிறோம். நன்றாகப் படிக்கும் ஒரு நல்ல மாணவர் பன்னிரண்டாம் வகுப்பின்போது உடல்நிலை அல்லது குடும்பச் சூழல் பாதிக்கப்பட்டு கொஞ்சம் மதிப்பெண் குறைகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பொருட்டில் அவர் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது. அதனால்தான் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொண்டுவருகிறோம். எப்படியும் ஒரு நல்ல மாணவர் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது; அதற்கு நம்முடைய அமைப்பு முறை காரணமாகிவிடக் கூடாது!”
நூற்றுக்குத் தொண்ணூறு சத மதிப்பெண்களை எடுப்பவர்களுக்கு மட்டும் ‘அகரம்’ உதவவில்லை; நாற்பது சத மதிப்பெண்களைப் பெறுபவர்களுக்கும் அவர்களுக்குரிய உயர்கல்வி வாய்ப்பைப் பெற உதவுகிறது. “நம்மூரில் ஒரு வழக்கம் உண்டு. கல்விக்கு உதவுகிறேன் என்ற பெயரில் முதல் வரிசை மதிப்பெண்கள் எடுத்தவர்களை அழைத்து பணத்தைக் கொடுப்பார்கள். ஆனால், ஒரு மலைக் கிராமத்தில் கல்வியறிவில்லாத தாய் - தகப்பன்களுக்குப் பிறந்து, ஏழ்மையை எதிர்கொள்ள காட்டு வேலைக்குப் போய்க்கொண்டே படித்து அறுபது சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவி, நகரத்தில் எல்லா வசதிகளோடும் படித்து தொண்ணூறு சத மதிப்பெண் பெறும் ஒரு மாணவருக்குச் சளைத்தவர் இல்லையே? முன் வரிசையில் வருபவர்களுக்கு உதவத்தான் அரசாங்கமே இருக்கிறதே; பின்னே நிற்பவர்களையும் அல்லவா முன்னுக்குத் தள்ளுவது உண்மையான உதவி?”
இந்திய அரசும் பொதுச் சமூகமும் பெற வேண்டிய முக்கியமான பார்வை மாற்றம் இது. இந்திய அரசு இன்று உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் பேராசிரியர் கல்யாணி உருவாக்கியிருக்கும் வரையறைகளுக்கும் மிக முக்கியமான ஒரு வேறுபாடு இருக்கிறது. நம்முடைய அமைப்பின் தேர்வு முறை கூடுமானவரை மாணவர்களை வெளித்தள்ளுகிறது. கல்யாணியின் வரையறைகளோ கூடுமானவரை மாணவர்களை உள்ளிழுக்கிறது.
ஊர் கண் விழிக்கும் வேளையில், சூரியனுக்கு முன் கடலிலிருந்து வெளிப்பட்டு பள்ளிக்கூடம் நோக்கி ஓடி வரும் ஒரு சிறுவனிடம் உள்ள கல்வித் தேட்டத்தை உணரும் நிலையில் ஒரு அரசும் அமைப்பும் இல்லை என்றால், அவை உயிர்த்தன்மையை இழந்துவருகின்றன என்று பொருள். தம்மை விமர்சிப்போர் மீது பாய்வதை நிறுத்திவிட்டு நம்முடைய அமைப்புகள் முதலில் தன்னிலை உணரட்டும்; ஏனென்றால், ஜடங்களால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது!
- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in
தமிழ் இந்து நாளிதழுக்கும், திரு. சமஸ் அவர்களுக்கும் நன்றிகள்

Jun 21, 2019

பிரின்ஸ் ஆப் பெர்சியா Prince of Persia: The Sands of Time

                                            2010 ஆண்டு வெளியான திரைப்படம் இது.. கதையோட ஹீரோ டஸ்டன் ஒரு அனாதை.. அவரோட திறமையைப் பார்த்து வியந்த பெர்சியா நாட்டோட அரசர்.. சின்ன வயசான டஸ்டனை தத்து எடுத்து வளர்க்கிறார்.. அரசருக்கு டஸ், கர்சிவ்ன்னு ரெண்டு பசங்களும் இருக்காங்க.. டஸ், கர்சிவ்வோட சித்தப்பா நிஜாம்.. டஸ்டனைத் தவிர இவங்க எல்லாம் அரச குடும்பத்தாருங்க..பெர்சியாவோட எதிரிகளுக்கு புனித நகரமான "அலமட்" ஆயுதங்கள்

வாட்டர் டிவைனர் (Water Diviner)

            அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் 1920 ஆம் வருடம். ஆஸ்திரேலியாவின் பாலை போன்ற பெரும் பரப்பில் நீர் மட்டத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு நிபுணர் இரண்டு குச்சிகளை வைத்துக் கொண்டு அலைகிறார். ஒரு இடம் சிக்குகிறது. அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்குகிறார். ஒற்றை மனிதனாக சுமார் இருபதடி ஆழத்துக்கு குழியை வெட்டி மண்ணைச் சுமந்து வெளியில் வீசுகிறார். அவர் நீர்மட்டம் பார்த்த எல்லா இடங்களிலும் நீர் கிடைத்தது என்று சொல்ல முடியாது. இதுவும் கூட தவறான கணிப்பாக இருக்கலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தோண்டிப் பார்த்துவிடலாம் என்று கடப்பாரையை ஓங்கி நிலத்தில் இறக்க நீர் பொத்துக் கொண்டு வருகிறது. அவருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அதே உற்சாகத்தோடு வீட்டுக்கு வருகிறார்.
மனைவி தனியாக அமர்ந்திருக்கிறாள். ‘நீங்கள் கதை சொல்வதற்காக பசங்க தூங்காம காத்திருக்காங்க’ என்கிறாள். அறைக்குள் சென்று ஒரு புத்தகத்திலிருந்து கதையை வாசிக்கிறார். கேமிரா மெதுவாக கட்டில்களைக் காட்டுகிறது. அது வெறும் கட்டில்கள். நமக்கு சில்லிட்டு போய்விடுகிறது. வெறும் கட்டில்களுக்கு எதற்காக கதை படித்துக் காட்டுகிறார்? அவர் வெளியே வருகிறார். மனைவி அழுது கொண்டிருக்கிறாள். பேச்சை மாற்றும் விதமாக ‘இன்னைக்கு தண்ணீரைக் கண்டுபிடிச்சேன்’ என்கிறார். ‘நிலத்துக்குள் இருக்கும் தண்ணீரைக் கண்டுபிடிக்கும் உங்களால் சொந்தப் பசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று அழுகிறாள். அடுத்த நாள் காலையில் மனைவி வீட்டுப் பக்கத்தில் இருக்கும் நீர் நிலையில் இறந்து கிடக்கிறாள். தற்கொலை.
முதல் உலகப் போரின் ஒரு சொட்டு வரலாற்றைத் தெரிந்து கொண்டால் மகன்கள் என்ன ஆனார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும்.
நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட துருக்கியப் பேரரசான ஒட்டாமன் பேரரசு முதல் உலகப் போரில் தள்ளாடத் தொடங்குகிறது. அப்பொழுது கேலிப்போலி என்னும் முக்கியத்துவம் வாய்ந்த போர் நடக்கிறது. இந்தப் போரில் துருக்கியை எதிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து இணைந்த கூட்டுப்படை போரிடுகிறது. கடுமையான போர் என்ற போதும் இந்தப் போரில் துருக்கிதான் வெற்றி பெறுகிறது. இருபக்கமும் ஏகப்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிறகு கூட்டுப்படைகளை துருக்கியப்படையினர் துரத்தியடித்தார்கள். இந்த கேலிப்போலி சண்டையில் ஆஸ்திரேலியப் படையில் இணைந்து போரிடுவதற்காகத்தான் நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவரின் மூன்று மகன்களும் வருகிறார்கள்.
இப்பொழுது தற்கொலை செய்து கொண்ட அம்மாவையும் மகன்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் நாம் இணைத்துக் கொள்ளலாம்.
எல்லோரும் இறந்துவிட்டார்கள். நீர் வளத்தைக் கண்டுபிடிப்பவர் தனித்து நிற்கிறார். யாருமற்ற அநாதை. அவருடைய மகன்கள் இறந்து போன விஷயம் அவருக்குத் தெரியும். அதற்கான சில ஆதாரங்கள் அவரிடமிருக்கின்றன. அதைச் சுமந்து கொண்டு துருக்கியை அடைகிறார். அங்கு ஒரு இளம்பெண்ணும் அவளுடைய இளவயது மகனும் தங்கும் விடுதியை நடத்துகிறார்கள். அந்தச் சிறுவன் வலுக்கட்டாயமாக இவருடைய பையைப் பறித்துக் கொண்டு ஓடுகிறான். அவனைத் திருடன் என்று நினைத்தபடி துரத்துகிறார் ஆனால் அவன் விடுதிக்கு ஆள் பிடிக்கும் விதமாகத்தான் அப்படிச் செய்கிறான் என்று புரிந்து கொள்கிறார். அந்த விடுதியிலேயே தங்குகிறார். சிறுவனுக்கும் இவருக்குமான நட்பு தொடங்குகிறது.
விடுதி நடத்தும் பெண்மணியின் குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு. அந்தப் பெண்மணியின் கணவனும் போரில் காணாமல் போயிருக்கிறான். அவன் இறந்துவிட்டதாகச் சுற்றியிருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்வதில்லை. அவள் ஒத்துக் கொள்ளும் அடுத்த வினாடி அவளைத் திருமணம் செய்து கொள்ள அவளது கணவனின் சகோதரன் தயாராக இருக்கிறான். ஆனால் அவளுக்கு விருப்பமில்லை. என்றபோதிலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். இது ஒரு கிளைக்கதை.
துருக்கி வந்தாகிவிட்டது. இனி எப்படி மகன்களைத் தேடுவது? அடையாளம் தெரியாமல் இறந்து போன போர் வீரர்களை ‘பெயரற்றவர்கள் அல்லது காணாமல் போனவர்கள்’ என்ற பெயரில் குவியல் குவியலாக புதைத்துவிடுகிறார்கள். மகன்களின் உடலை தாயின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் புதைப்பது தன்னுடைய நோக்கம் என்று சொல்லி அதிகாரிகளிடம் மண்டாடுகிறார். ‘அதெல்லாம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்’ என்று சொல்லி ஆரம்பத்தில் யாரும் உதவுவதாகத் தெரியவில்லை. திருட்டுத்தனமாக போர் நடந்த வளைகுடா பகுதிக்கு படகில் செல்கிறார்கள். இவர் வந்து சேர்ந்த பிறகு அவருடைய மகன்களின் பிணத்தைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ஒத்துக் கொள்கிறார்கள். மகன்கள் இறந்து போன இடங்களை நோக்கி பயணம் விரிகிறது.
உலகப்போர் சம்பந்தமான திரைப்படங்களில் பெரும்பாலானவை இந்த மாதிரியான கதையம்சத்துடன்தான் இருக்கின்றன. போர் என்பது பெரும் வரலாறு. அதில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை புதைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுகிறது. அப்படி மக்கிப் போன ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை எடுத்து போரின் எதிர்விளைவுகள் அவை தனிப்பட்ட குடும்பங்களில் உருவாக்கக் கூடிய சலனங்கள் என்பனவற்றையெல்லாம் கதையாக்கி நம்மை நெகிழ்ந்து போகச் செய்வார்கள். அப்படியான படம்தான் The Water Diviner.
அப்பா மகன்கள் உறவு, தாய்ப்பாசம், இறந்து போன உடல்களை நோக்கிய தேடல் உருவாக்கக் கூடிய த்ரில், எதிர்ப்படும் இடர்பாடுகள். விடுதி பெண்மனிக்கும் நாயகனுக்குமிடையிலான வெளியில் சொல்லப்படாத மென்மையான காதல் என்பவையெல்லாம் படத்தின் கண்ணிகள் என்றால் நாயகனின் நடிப்பும் விடுதிப் பெண்ணின் விறைத்த உடல் மொழியும் அவளது மகனாக நடித்த சிறுவனின் அப்பாவித்தனமான நடிப்பு போன்றவற்றையும் தூண்கள் எனலாம்.
படத்தில் நம்ப முடியாத காட்சி ஒன்று உண்டு. ஆயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்ட மிகப்பெரிய மைதானம் போன்றதொரு போர்க்களத்தில் நீர்மட்டத்தைக் கண்டுபிடிப்பது போலவே தனது மகன்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டுபிடிக்கிறார். அது மட்டும்தான் நெருடலாக இருந்தது. கண்களை மூடி போரின் இறுதிக் காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி ‘இங்குதான் எனது மகன்கள் புதைக்கப்பட்டார்கள்’ என்கிறார். அவர்கள் தோண்டுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல் சிதலங்களைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். இரண்டு மகன்களின் உடல்கள் சிக்குகின்றன. அப்படியென்றால் இன்னொருவன்? அதுதான் க்ளைமேக்ஸ்.
2014 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.
படத்தின் நாயகன்தான் இயக்குநரும் கூட. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆரம்பத்தில் சில காட்சிகள் குழப்பமாக இருந்தது போலத் தோன்றியது. படம் நகரத் தொடங்கும் போது ஒன்றி விடுகிறோம். சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் காட்சியமைப்புகளுக்காகவும் இந்தப் படத்தை சிலாகிக்க வேண்டும். மிக எளிமையான கதை. நேர்த்தியான படமாக்கம். நல்ல நடிகர்கள் என்று பாராட்டப்பட வேண்டிய படம்.

Dec 5, 2017

நாளை நமதே! ஆர்.கே.நகரும் நமதே!

ஆட்சியா..? அதிர்ச்சியா..?
2015&ல் கன மழையாலும், பெரு வெள்-ளத்தாலும் சென்னை மாநகரம் பாதிக்கப்ப- ட்டபோது, துப்புரவுப் பணிகளை மேற்-கொள்ள தமிழகத்தின் பல மாவட்டங்களி-லிருந்து பணியாளர்கள் கொண்டுவரப்-பட்டார்கள். சிறப்பாக பாடுபட்டு பணி செய்த துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உணவு வசதி, இருக்க இடம், போன்றவற்றை அம்மா அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தி- ல் புயலாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ள வெளி மாவட்டங்களிலிருந்து சென்றவ- ர்கள் உண்ண உணவு இல்லாமல், இருக்க இடம் இல்லாமல், அடிப்படை வசதிகூட கிடைக்காமல் தவித்து வருகிற- £ர்கள். அம்மா ஆட்சி தருகிறோம் என்று பொய் சொல்லிவிட்டு, இன்று சும்மா ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியா-ளர்கள் துப்புரவு பணியாளர்களை பட்டினி கிடக்க வைத்து-விட்டார்கள். அந்த மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் துப்புரவுப் பணியாளர்களைப் பார்த்து மனமிரங்கி, தங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய்து வருகிறார்கள். தேவையான நேரத்தில் செய்யப்படாத உதவி அதன்பிறகு தேவையில்லாத உதவி ஆகிவிடும். இதை ஆட்சியாளர்கள் மனத்-தில் இருத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யாமல் மந்த கதியில் நடப்பது போன்றே மீட்புப் பணியும் நடைபெற்று வருவதாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கூறி வருகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா அல்லது அதிர்ச்சி மட்டும்தான் இருக்கிறதா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை ‘ஒக்கி’ புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டு கரையோர மக்களை உஷார்படுத்தவும், மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசு மந்தமாக இருந்துவிட்டது. இந்தியாவில் மந்த புத்தியுடன் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தமிழ்நாட்டி- ல்த- £ன் என்று வடநாட்டில் இருந்து வெளி-வரும் ஊடகங்கள் மட்டுமல்ல, தென்னாட்டி-லிருந்து வெளிவரும் தகவல்களும் தெரிவிக்-கின்றன. காணாமல் போன மீனவர்கள் பற்றிய விவரங்களை சரிவரத் தெரிவிக்-கா-ம லும், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது தெரி-யா-மல் இருந்துகொண்டு மத்திய அரசுக்குத் தவறான தகவலை ஆளும் தரப்-பினர் கொடுத்தார்கள் என்று மத்திய அமைச்சர் 
நிர்மலா சீதாராமன் மிக வருத்த- த்து- டன் கூறி-யுள்-ளார். மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய தகவல் கட்டாயமானது மட்டுமல்ல, சட்டப்பூர்வமானது என்றும் புரிந்து-கொள்-ளாமல் மத்திய அரசையும் அலட்சியம் செய்துகொண்டு ஆட்சி நடத்தும் இவர்கள், அப்புறப்---படுத்தப்பட வேண்டியவர்களே என்று மக்கள் மன்றம் கூறி வருகிறது. கோவையில் நூற்றாண்டு விழாவிற்கு கூட்டம் சேர்க்க முடியாமல் தவித்துப்போன தருக்கர்கள் பணம்& பாட்டில் அளித்து கூட்டத்¬- தச் சேர்த்து வரு-கி--றார்கள் என்று தொலைக்-காட்சி கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகி றார்கள். இந்த வேலையையும் மக்களால் தேர்ந்தெடுக்-கப்பட்ட ஒரு பிரதிநிதி செய்கிறார் என்பதுதான் தமிழகத்துக்கு வெட்கக்கேடான விஷயமாகும். சுய பந்தா, சுயவிளம்பரம்... இவற்றை மட்டுமே மையமாக வைத்து செயல்படும் அமாவாசைக் கூட்டம் மக்கள் நலனுக்காக பாடுபடும் வேலையை முறையாக செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மாணவர்களைத் திரட்ட எந்த ஊரில் அதிக பள்ளிகள் இருக்கிறதோ, சுயதம்பட்டம் அடிக்க எந்த ஊரில் வரவேற்பு வளைவுகள் பெரிதாக வைக்க முடியுமோ என்பதன் அடிப்படையில்தான் அரசு விழா நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தரப்பு இருக்கிறது. இயங்க வேண்டிய பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் அவற்றுக்கு விடுமுறை அளிப்பதும், அலங்கார வளைவுகளில் மோதி வாகன ஓட்டிகள் இறந்து போவ-தும்தான் ஆட்சி-யாளர்-களின் சாத¬- னகளாக தற்போது இருந்து வருகிறது. இதுபோன்ற அனைத்து அக்கிரமங்களுக்-கும் முற்றுப்புள்ளி வைக்கும் பொறுப்-பில் மக்கள்செல்வர் இருப்ப-தால் ஆர்.கே.நகரில் வேட்பாளராக தேர்தல் களத்தில் சூறா-வளி-யாக இயங்கிக் கொண்-டிருக்-கிறார். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பொறுப்புணர்ச்சி உள்ள-வர் களால் ஆட்சி நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ்-நாட்டில் மட்டும் சரி-யான தலைமை இல்லாத-தாலும், பொறுப்புணர்ச்சி இல்லாதவர்களால் ஆட்சி நடைபெறுவதாலும் மக்கள் நலத் திட்டங்-களை செயல்படுத்த முடிவதில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு துரோகி-களால் நடத்தப்படும் ஆட்சி துடைத்து எறியப்படும் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். 

Dec 1, 2017

ஆளுநருக்கு சமிக்ஞை!

மத்தியில் ஆளுங் கட்சியுடன் நெருக்கமாக உறவு கொண்டிருக்கும் பீகார் ஐக்கிய ஜனதா தளத்திற்கு தேர்தல் ஆணையம் அதன் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் இருக்கும் அணியினர் மத்திய ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கியிருக்-கிறது. இதிலே ஒற்றுமை என்னவென்றால் பீகாரில் ஆளும் தரப்பிற்கும், தமிழ்ந- £ட்டில் ஆளும் தரப்பிற்கும் சாதகமாக தேர்தல் ஆணையம் தனது கை வரிசையை காட்டி--யிருக்கிறது. சட்ட திட்டங்கள், வி தி மு ¬ ற க ள் எப்படி-யிருந்தாலும் டெல்லிக்கு சாத்துமுறையை ஒழுங்-காக செய்-தால் தேர்தல் ஆணை-யம்-கூட தன் விதிக- ளைத் தளர்த்தி சின்னத்தை ஒதுக்கும் என்று தெரிகிறது. எவ்வளவுதான் நேர்மையான முறையில் வாதங்களை எடுத்து வைத்தாலும் தனது பிடிவாதத்தை தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ளவில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தங்களுக்கே சின்னத்தை ஒதுக்கிவிட்டார்கள் என்றும், தங்களது சூழ்ச்சி, தந்திரம் அனைத்தும் வென்றுவிட்டது என்றும் அற்ப மகிழ்ச்சியை எடப்பாடி அணி-யினர் கொண்டாடி வருகிறார்கள். உதவி செய்வது போல் நடித்து ஊறு செய்ய தன்னை பா.ஜ.க. தயார் செய்து கொண்டு இருப்பதை எடப்பாடி அரசு இன்னும் புரிந்து-கொள்ளவில்லை! நுனிப் புல் மேய்ந்ததைப் போல தேர்தல் ஆணையம் தனது உத்தரவை வெளி-யிட்-டாலும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல துரோகிகளுக்கு ஒரு அணு-குண்டையும் எடுத்துப் போட்டிருக்கிறது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே ஆளும் தரப்பிற்கு இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டால் 111 பேர் என்பது 100 பேராக குறைந்துவிடும். இதன்மூலம் ஆளும் தரப்பினருக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை என்ற உண்மையை ‘தெறி’யடியாக தேர்தல் ஆணையமே வெளியிட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஏற்கெனவே அற்ப மகிழ்ச்சியில் இருக்கும் எதிரிகள், தங்களது ஆட்சிக்கு அற்ப ஆயுளே இருக்கிறது என்று அதீத வருத்தத்தில் இருக்-கி-றார்களாம். இதைத் தவிர தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி, எங்களது ஒற்றுமை எதிரிகளின் கண்களை உறுத்துகிறது என்று சவால் விட்டிருக்கிறார்! பன்னீருடன் இருந்தவர்கள் தற்போது பேரத்திற்கு அடிமையாகி தன்-னுடன் இணைந்துவிட்டார்கள். அவர்கள் தன்னுடன் ஒற்றுமையாக இருப்-பது, பன்னீரின் கண்களை உறுத்து-கிறது 
என்பதை தனது வித்தி-யாச-மான பாணி-யில் எடப்பாடி சொல்லி-யிருக்கிறார். கடைசியில் சேக்கிழாரையும், கம்பரையும் பங்காளிகளாக எடப்பாடி ஆக்கிவிட்டார்! எழுதிக் கொடுத்தவர் சேக்கிழாருக்கு வேண்டியவராக இருப்பாரோ என்னவோ! மேலும், வாரத்திற்கு இரண்டு முறையாவது பன்னீருக்கு எதிரான கருத்-தைக்கூறி, அவரது மனதைப் புண்படுத்தி எப்படியாவது ஓரங்கட்டிவிட வேண்டும் என்று குறியாக இருக்கிறார். ஆர்.கே.நகரில் மதுசூதனனை வேட்பாளராகப் நிறுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் முடிவு செய்து தனது நண்பர்களை போட்டி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வைத்தார். ஏனென்றால் மதுசூதனன் ஜெயிக்கக்கூடாது என்பது மட்டுமல்ல, தனது மகன் ஜெயவர்த்தனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடியிடம் ஜெயக்குமார் வேண்டுகோள் வைத்தார்.  மதுசூதனன் தலை-யிட்டு தனது எதிர்ப்பைக் காட்டி அந்த முயற்சியை தடுத்துவி- ட்டார். இதனால் மதுசூதனன் மேல் தீராத பகை கொண்-டுள்-ளார் ஜெயக்-குமார். மதுசூதனனுக்கு சீட் கிடைத்தாலும் அவரை தோற்கடிக்க ஜெயக்குமார் அணியினர் வரிந்து கட்டி வேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படி ஒருவருக்கொருவர் நான் பெரியவன், நீ பெரியவன் என்று அடிதடியில் இறங்கி, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மட்டும்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்பதை ஆளுநரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உள்நோக்க- த்தில் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதாவது, ஆளுங்கட்சிக்கு அறுதிப் பெரும்-பான்மை இல்லாத நிலையில், அரசியல் சாசனம் தனக்கு கொடுத்-துள்ள அதிகா-ரத்தை ஆளுநர் பயன்படுத்தி எடப்பாடிக்கு நெருக்கடி தரலாம் என்று அவருக்கு தேர்தல் ஆணையம் சமிக்ஞை காட்டி தனது தீர்ப்பை வழங்கி-யிருப்-பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பா.ஜ.க. அரசின் ராஜ தந்திரம் எப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்தை ஆட்டிப் படைக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. நாளை நடக்கப்போவதை யார் அறிவார்! & சோழா அமுதன்