Nov 6, 2011

அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது என கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார்












கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,  கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என எனக்கு நம்பிக்கை உள்ளது’’ என்று கூறினார்.


கூடங்குளம் அனுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது என அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது என கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறினார்.

அப்துல்கலாம் இந்தியாவின் மிகப்பெரிய மனிதர்.   அப்படிப்பட்டவர் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தும்,  எங்களை வந்து பார்க்கவில்லை.  அவர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்.

சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அப்துல்கலாம் 40 பேரை சந்தித்ததாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. 40 பேரும் கூலிக்கு மாரடிப்பவர்களாக  கூட இருக்கலாம் எனவும், கூடங்குளம் அனுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறினார்

No comments: