புத்தாண்டு கொண்டாட கோலிவுட் ஹீரோயின்கள் காதலனுடன் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர்
ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.
ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.
காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.சமீரா ரெட்டி இந்த வருட புத்தாண்டை எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கிறேன். இப்போதே எனக்கு அதிக சந்தோஷத்தை அது தருகிறது. இதற்கு சினிமா நண்பர்களையும் அழைத்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் எனக்காக வீட்டை அலங்கரிப்பதில் பிசியாக இருக்கிறார்கள்.
இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் ‘இரண்டாம் உலகம் பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் ‘துப்பாக்கி பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.
அப்புறம் நீங்க எங்க யாரோட கொண்டாட போரிங்க?



