அன்று எம்.ஜி.ஆர். எதிர்கொண்டது கருணாநிதி என்ற ஒரு
எதிரியை; ஆனால் இன்று நாம் எதிர்கொள்வது கருணாநிதியின் ஊழல் குடும்பத்தை
என்று பேசினார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதிலிருந்து...
"எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எம்.ஜி.ஆர். குறித்து அன்று கருணாநிதி பரப்பிய வதந்திகளை நீங்கள் அறிவீர்கள்.
“இந்த ஒரு முறை மட்டும் என்னை ஆட்சியில் அமர்த்துங்கள்; எம்.ஜி.ஆர். திரும்பி வந்த பிறகு அவரிடமே அதனை ஒப்படைத்து விடுகிறேன்...” என்று எந்தவொரு அரசியல் தலைவரும் வைக்காத வினோத கோரிக்கையை துளியும் வெட்கமில்லாமல் மக்களிடம் வைத்து; எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்ட, கருணாநிதியின் அன்றைய சூழ்ச்சியை நான் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் முறியடித்தேன்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, துரோகிகளை ஏவிவிட்டு கழகத்தின் சின்னமாம் இரட்டை இலையை முடக்கி; கழகத்தின் தலைமை நிலையத்தை சீல் வைத்துப் பூட்டி; இயக்கத்தைப் பிளவுபடுத்தி; இனி அதிமுக என்கிற பேரியக்கம் இல்லை என்று கருணாநிதி மார்தட்டியதை எல்லாம் எதிர்கொண்டு முறியடித்தேன்.
பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றாக்கி; முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டெடுத்து; தலைமைக் கழகத்திற்கு இடப்பட்ட பூட்டைத் தகர்த்தெறிந்து; மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத் தேர்தல்களின் மூலம் கருணாநிதி அமர்ந்திருந்த நாற்காலியை உங்கள் துணையோடு ஆட வைத்தேன்.
அதனை தொடர்ந்து, 1991-ல் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதியை முதலமைச்சர் நாற்காலியிலிருந்து அகற்றி, அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி, திமுகவின் சட்டமன்ற பலத்தை ஒன்றாகக் குறைத்து புரட்சியைப் படைத்தது உங்கள் அன்புச் சகோதரி என்றால், அதற்கு உடன் நின்றது உங்களின் அப்பழுக்கில்லா உழைப்பும் தியாகமும்தான்!
இன்று கழகம், ஆறாவது முறையாக தமிழ் நாட்டின் அரியணையில் அமர்ந்து, இந்தியாவில் தமிழகமே முதன்மை மாநிலம் என்னும் இலக்கை நோக்கி பீடு நடை போடுகிறது.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் புரட்சிகர திட்டங்கள், பிற மாநிலங்களால் பின்பற்றப்படுகின்றன என்றால், தூய்மையான சிந்தனை, உயர்ந்த லட்சியம், செம்மையான செயல்பாடு, உண்மையான உழைப்பு, சிறந்த நிருவாகம் என்னும் நமது இலக்கும்; அதை அடைய நாம் பின்பற்றுகிற இலக்கணமும் தான் காரணங்கள்.
“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்னும் நல் நோக்கத்தோடு மக்கள் நலத் திட்டங்கள் தீட்டப்பட்டு; அவை மக்களுக்கு முழுமையாகச் சென்றடையும் வண்ணம், வெளிப்படையான தூய நிருவாகத்தை எனது தலைமையிலான அரசு தமிழக மக்களாகிய உங்களுக்கு தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவேரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் நீதியின் துணை கொண்டு, தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதற்கு கண் துஞ்சாது எனது தலைமையிலான அரசு கடமையாற்றுகிறது. காவேரி விவகாரத்தில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடும் முடிவை, மத்திய அரசு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கழக அரசின் முனைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி.
ஆக, தமிழ் நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பது; மக்கள் நலத் திட்டங்களால் ஏழை-எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; கருணாநிதி சீரழித்த, தமிழகத்தின் நிதிநிலையை, பொதுத் துறை நிறுவனங்களை, பொறுப்போடு போராடி மீட்டெடுப்பது என தமிழக மக்களை வளமான பாதைக்கு இட்டுச் செல்லும் லட்சிய அரசாக உங்கள் அன்புச் சகோதரியின் கழக அரசு அயராது உழைத்து வருகிறது, என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எம்.ஜி.ஆர். இருந்தவரை தி.மு.க.வைத் தோற்கடித்து எதிர்க்கட்சி ஆக்கினார். புரட்சித் தலைவரின் வழியைப் பின்பற்றி, அவரின் ஆசியோடு, நாம் 1991-லும் சரி, இப்போது 2011-லும் சரி, பிரதான எதிர்க்கட்சி என்னும் தகுதியை எட்டுவதற்கும் இயலாத நிலைக்கு தி.மு.க.-வைத் தள்ளி வீழ்த்தியிருக்கிறோம்.
எம்.ஜி.ஆர். எதிர்கொண்டு சாய்த்தது கருணாநிதியை என்றால், இன்று நாம் வீழ்த்தியிருப்பதோ, கருணாநிதியின் பரந்து விரிந்த உலகமகா ஊழல் குடும்பத்தை, அதிகார வெறிபிடித்த கும்பலை என்பதுதானே உண்மை!
மத்திய ஆட்சியில் பங்கேற்பு என்னும் அவர்களது ஆணவ ஆட்டத்தை, வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அடியோடு ஒழிப்போம்!
காவேரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு போன்ற தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுக்காதது; கூடுதல் நிதி; அரிசி ஒதுக்கீடு; மண்ணெண்ணெய் ஒதுக்கீடு; மின்சார ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்காதது; போன்ற தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளை போடுகிற தீயசக்தி கும்பலை வேரோடு சாய்ப்போம்!
- என்று பேசினார் ஜெயலலிதா.

No comments:
Post a Comment