Jul 8, 2013

குழந்தைகள் அம்மாச்சி மீது அதிக பாசம் வைப்பது ஏன்?


Temple imagesபொதுவாக குழந்தைகள் அம்மாச்சி(தாயின் அம்மா) மீது  வைக்கிற பாசத்தை தங்கள் மீது வைப்பதில்லையே என்று அப்பத்தாக்களுக்கு கடுமையான கோபம் வருகிறது. அப்படி என்ன தான் அந்த பாட்டி  மந்திரம் போட்டு வச்சாளோ, என் கூட மட்டும் சேர்ந்தா என்னவாம்! என்று பேரன், பேத்திகளைக் கடிந்து கொள்கிறார்கள். உண்மையில் இதில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. இதற்கு முழுக்க முழுக்க அறிவியலே காரணம்.  ஒரு குழந்தை எந்த இடத்தில் பிறக்கிறதோ, அந்த இடத்தின் மீது தான் பாசம் அதிகமாக இருக்கும். நம்நாட்டு வழக்கப்படி, தாயின் தாய் வீட்டில் குழந்தைகள் பிறப்பது தான்  அதிகம். அம்மாச்சி தான் அந்தக் குழந்தையை மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை பராமரிக்கிறார். அதனால், அவர் மீது அந்தக்குழந்தைக்கு இயற்கையாகவே பாசம் வந்து விடுகிறது. அதனால், லீவு  விட்டதும் அம்மாச்சி வீட்டுக்குப் போக வேண்டும் என்று குழந்தைகள் துள்ளிக்கொண்டு நிற்கிறார்கள். அங்கே போய் ஒன்றிரண்டு மாதத்தைக் கழித்தால் தான் அவர்கள் மனமே ஆறுதலடைகிறது. வாரியார் சுவாமி இதைப்பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்.அந்தக்காலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள். அதனால், குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு பாசம்வைத்தது. இப்போது அம்மாச்சி வீட்டிலோ, அப்பாச்சி வீட்டிலோ பிரசவம் பார்ப்பதில்லை. ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்கிறது. அதனால், குழந்தை பிறந்ததில் இருந்து, பிறந்த இடத்து பந்தபாசத்துடன் ஆஸ்பத்திரி பக்கமே திரும்பத் திரும்ப போகிறது, என்பார். நிஜம் தானே!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான்...

இராஜராஜேஸ்வரி said...

தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகள் தாயின் மீது பாசமும்

புட்டிப்பால் ஊட்டி வளர்ந்த பிள்ளைகள் புட்டியும் கையுமாக டாஸ்மாக்கில் பாசமுமாக இருப்பதற்கும் இதுவே காரணமோ..!