Jan 3, 2012

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று.

வீரத்தின் அடையாளமே, தமிழனின் ஆதாரமே.
எங்கள் தமிழின தளகர்த்தவே!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு வீரம் பிறந்தது.
நீ தோன்றியதால் தான் தமிழர்கள் வீரமானவர்கள் என்று பெயர் வந்தது,
நீ தோன்றியதால் தமிழனுக்கு போராட்ட குணம் வந்தது.
நீ தோன்றியதால் அநிதியினை எதிர்த்து கேட்கும் துணிவு வந்தது!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு சுதந்திரத்தின் அருமை தெரிந்தது!
நீ தோன்றியதால் தான் எங்களுக்கு வீர பரமம்பரை என்று பெயர் வந்தது!
நீ தூக்கு கயறினை முத்தமிட்ட அஞ்சாநெஞ்சன்,

இனியும் எத்தனை யுகங்கள் தமிழன் வரலாறு இருந்தாலும் நீ தான் தமிழனின் வீரத்தின் விளைநிலம்

நீங்கள் புதைக்கப்படவில்லை...
மண்ணில் விதைக்கப்பட்டுஇருக்கின்றீர்கள்.

அண்ணாவின் பொன்மொழிகள்

எம் மக்களின் உரிமைகள் அழிக்கப்படுகின்றன;
வளங்கள் பறிக்கப்படுகின்றன ;
தனித்தன்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன ;
வாழ்வு அடிமைப்படுத்தப்படுகிறது .
இந்தக் காரணங்களில் இருந்து மீளத்தான் ,
நாங்கள் தனிநாடு கேட்கிறோம் !"

- மாநிலங்கள் அவையில் அறிஞர் அண்ணா , 25-1-1963.

Jan 1, 2012

எனது இந்தியா! (8) நரி வேட்டை -எஸ். ராமகிருஷ்ணன்.

புது டெல்லி நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, டிசம்பர் 15-ம் தேதி 1911-ம் ஆண்டு நடைபெற்றது. 1905-ம் ஆண்டில் இருந்தே பிரிட்டிஷ் அரசு தலைநகரத்தை மாற்றக் காரணங்களைத் தேடிக்கொண்டு இருந்தது. அதன் விளைவுதான், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் அறிவிப்பு என்றும் சொல்கிறார்கள்.  ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வேட்டைக்கும் ஆதியில் நடைபெற்ற வனவாசிகளின் வேட்டை​களுக்கும் இடையில் என்ன வேறுபாடு என்ற கேள்வி வரக்கூடும். வனவாசிகள் தங்கள் அதிகாரத்​தைக் காட்டிக்கொள்வதற்காக ஒரு போதும் வேட்டையாடவில்லை என்பதுதான் அதற்கான பதில். ஆங்கிலேயர்கள் அடர்ந்த காடு இல்லாத தேசத்தில் இருந்து வந்தவர்கள். அதிலும், புலி போன்ற வலிமை மிக்க மிருகம் அங்கே கிடையாது. ஆகவே, அவர்கள் புலியை வெறும் ஆட்கொல்லியாக மட்டுமே அடையாளம் கண்டார்கள். புலியைக் கொல்வதை சாதனை என்று கூறி விருது கொடுத்தார்கள். அந்த எண்ணம்தான் இந்திய விலங்குகளை அவர்கள் கொன்று குவிக்கக் காரணமாக இருந்தது.இங்கிலாந்து கிராமங்களில் பல நூற்றாண்டுகளாக நரி வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்கு. வேட்டை நாய்களை வைத்து நரிகளைத் துரத்தி வேட்டை​யாடுவார்கள். சில நேரங்களில், குதிரைகளில் சென்று துப்பாக்கியால் நரிகளைச் சுட்டுக் கொல்வதும் உண்டு. அது இயற்கையை அழிக்கும் செயல் என்று இங்கிலாந்து அரசு தடை விதித்தது. அவர்கள் நாட்டில் நரியைக் கொல்வதைத் தடை செய்த அரசு, இன்னொரு நாட்டில் காண்டா மிருகத்தைக் கொல்வதைக்கூட தவறாக நினைக்கவே இல்லை. அதுதான், பெரிய முரண்.

சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே

சைட் சீயிங்
தங்க குடில்

செலவழிக்க பணம்
ஊர்சுத்த டிக்கெட் 
 


அனைவரைக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள் 
பதிவர்கள்  அனைவரையும் சுவிஸ் பார்க்க வச்சுட்டேன் நன்றி 
புத்தாண்டு  அதுவுமா திட்டக்கூடாது கமெண்ட்ஸ் மட்டும் போட்டுட்டு போங்க !






Dec 29, 2011

மேதகு பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை வெளியீடு! (படங்கள் )

பிரான்ஸ் நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் ஏராளமான ஈழத்தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதத்தில் அவர்களது முக்கிய கோரிக்கையை அந்நாட்டின் தபால்துறை ஏற்று செயல்படுத்தியுள்ளது. இதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் 'பிரபாகரனின் உருவம் பொறித்த தபால்தலை' அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.