Nov 15, 2011

அணு ஆயுதங்களை தாங்கி,3,000 கிமீ பாய்ந்து தாக்கும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி !

அணு ஆயுதங்களை தாங்கி, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அக்னி 2 ஏவுகணைகளின் துல்லிய தன்மை மற்றும் தாக்கும் தூரத்தை மேம்படுத்தி அக்னி 2 பிரைம் ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. அக்னி 2 ஏவுகணை,
2,000 கிமீ தூரம் சென்று இலக்கை தாக்கும். அக்னி-3, 3500 கிமீ சென்று தாக்கும். இரண்டுக்கும் இடைப்பட்டு 3000 கிமீ தூரம் தாக்கி அழிக்கும் வகையில் அக்னி 2 பிரைம் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இது 20 மீட்டர் நீளம், 17 டன் எடை கொண்டது.
ஒடிஷா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில், இன்று காலை 9 மணிக்கு அக்னி 2 பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அக்னி 2 பிரைம் சோதனை தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது


No comments: