Dec 14, 2011

சேஷல்ஸ் தீவில் அமெரிக்க உளவு விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது


அமெரிக்க உளவு விமானம் சேஷல்ஸ் தீவில் உள்ள லன்வேயில் தரையிறங்குமுன்  வீழ்ந்து நொருங்கியுள்ளது. சமீபத்தில்தான் அமெரிக்க உளவு விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியதாக செய்தி வெளியாகி, அந்தப் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை.

கிழக்கு ஆபிரிக்கக் கடலில் கொள்ளையர்களின் நடமாட்டங்களை உளவு பார்க்கும் அமெரிக்க விமானமே



அமெரிக்க ராணுவத்தின் MQ-9 Reaper ரக உளவு விமானம்

விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது  ரோந்து நடவடிக்கையின்போது ஏற்பட்ட விபத்து என்கிறது அமெரிக்கா.

சேஷல்ஸ் தீவில் அமெரிக்க தூதரகம் கிடையாது என்பதால், அருகிலுள்ள மொரிஷியஸ் நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான MQ-9 Reaper ரக உளவு விமானம் விபத்துக்கு உள்ளானபோது, அதில் ஆயுதங்கள் ஏதும் பொருத்தப்பட்டு இருக்கவில்லை. விபத்தின் பொழுது ஏற்பட்ட தீ பின்பு அணைக்கப்பட்டது” என்று மிகச் சுருக்கமாக உள்ளது அவர்களது அறிக்கை.

சேஷல்ஸ் தீவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி லீனா லோரன்ஸ், “அமெரிக்க உளவு விமானம் எமது தளத்தில் இருந்தே கிளம்பிச் சென்றது. அது புறப்பட்டு சில நிமிடங்களில் இன்ஜின் கோளாறு ஏற்பட்ட சிக்னல்கள் கிடைத்ததை அடுத்து, விமானத்தை மீண்டும் தரையிறக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகளின்போது விமானம் ரன்வேயில் வீழ்ந்து தீப்பற்றிக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

தரையிறக்கும் முயற்சிகளின்போது விமானத்தின் லேன்டிங் ஸ்பீடைக் கட்டுப்படுத்த முடியாமல் போன காரணத்தாலேயே விமானம் விபத்துக்கு உள்ளாகியதாக, சேஷஸ்ஸ் சிவில் ஏவியேஷன் ஆரம்ப கிராஷ் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்றபின் சிறிது நேரத்துக்கு விமான நிலைய ரன்வே முழுவதுமாக மூடப்பட்டு, அதன்பின் வர்த்தக விமான போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான MQ-9 Reaper உளவு விமானம், medium-to-high altitude ரகத்திலான, விமானியற்று இயங்கக்கூடிய விமானம். அமெரிக்க கடற்படை இந்த விமானத்தை சேஷல்ஸ் தீவில் வைத்தே இயக்கி வந்தது. கிழக்கு ஆபிரிக்க கடல் மற்றும் இந்து சமுத்திரம் ஆகிய கடல் பகுதிகளை கவர் பண்ணிவந்த இந்த விமானத்தில், வழக்கமான  ரோந்து நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் பொருத்தப்படுவது வழக்கமில்லை.

ஆனால், இவ்வகை விமானங்களில் வானில் இருந்து தரைக்கு ஏவப்படக்கூடிய இரு ஏவுகணைகளை பொருத்தும் வசதிகள் உள்ளன.

No comments: