Dec 12, 2011

இதனால் யாருக்கு லாபம்?


கேரள எல்லையில் குமுளி அருகே சுமார் 80,000 பேர் போலீஸாரின் தடையுத்தரவை மீறி பேரணி நடத்தியதும், போலீஸார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 பணியில் இருந்த போலீஸாரால் இவர்களைத் தடுக்க முடியவில்லை என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் பேரணியை பொதுமக்கள் நடத்தினார்கள்; இதை அரசியல் அமைப்புகள் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தி, எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். இவர்களில் 6,000 பேர் மோட்டார் பைக்குகளில் வந்ததாகச் செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.

Dec 11, 2011

முல்லை பெரியாறு பிரச்சினை: டிசம்பர் 15-ல் தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் : ஜெ.முடிவு


முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகம், கேரளா இரு மாநிலங்களுக்கிடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் இன்று 2--வது நாளாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 15-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டம் வியாழன் அன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனக்கூறினார்.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து; இந்திய தம்பதிகள் உள்பட 5 பேர் பலி


அமெரிக்காவில் லாஸ்வேகாசில் இருந்து சன்செட் நகரில் உள்ள ஹுவர் அணைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.

லேக்மியாட் என்ற இடத்தில் மலைப்பகுதியில் சென்றபோது திடீரென வெடித்து சிதறியது. அதில், விமானி லாஸ்வேகாசை சேர்ந்த நியல்டு (31), டெல்லி தம்பதி டெல்வின் (49), தமரா சாப்மான் (49) உள்பட 5 பேர் பலியாகினர். 

தங்களின் 25-வது ஆண்டு திருமண விழாவை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி தம்பதிகள் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.



முல்லைப் பெரியாறு விவகாரம் :நடிகர், நடிகைகள் பரபரப்பு பேட்டி


முல்லைப் பெரியாறு விவாகரத்தில் கேரள&தமிழ்நாடு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் எல்லைப்பகுதியில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதுடன் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் தாக்கப்பட்டன. 

பெரியாறு அணையை நோக்கி தமிழக மக்கள்! :எல்லையில் பதட்டம் (காணொளி)







தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்துவதால், எல்லையில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.