அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் மகள்
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு
மணமக்களை வாழ்த்தினார். அவரது மகள்
மதிவதனிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களது திருமண வரவேற்பு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நேற்று
நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு மாலை 4 மணிக்கு முதல்வர்
ஜெயலலிதா வந்தார். அவரை நாஞ்சில் சம்பத் குடும்பத்தினர் மற்றும்
அமைச்சர்கள் வரவேற்றனர்.
மேடைக்கு வந்த முதல்வர் தயாராக இருந்த மாலைகளை எடுத்து மணமக்களிடம்
கொடுத்தார். அவர்கள் மாலை மாற்றிக் கொண்டு முதல்வர் காலில் விழுந்து ஆசி
பெற்றனர்.
No comments:
Post a Comment