Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

Dec 27, 2011

யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி : சங்கீதா - கிரிஷ் திமிர் பேட்டி(காணொளி )


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

அந்த விழாவில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.இதுகுறித்து ஜீவா, அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில், நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன்’’ என்று  கூறியுள்ளார்.இந்நிலையில் இன்று (26.12.2011)  செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா -கிரிஷ் ஜோடி,   யார் என்ன சொன்னாலும் சுவிஸ் போவோம் அடாவடி பேட்டி அளித்தார்கள். கலைஞர்களை கட்டுப்படுத்தாதீர்கள்,   அரசியலாக்காதீர்கள், மிரட்டாதீர்கள், எனக்கு தைரியம் இருக்கிறது, யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி என்று திமிர் பேட்டி அளித்தார்கள்.  

பிரபல பின்னணிப்பாடகர் மனோ உட்பட ஏராளமான பிரபல கலைஞர்கள்,  தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை செல்வதையோ,  ராஜபக்சே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ தவிர்த்திருக்கிறார்கள்.   

தமிழர்களிடையே மன்னிப்பும் கேட்டிருக்கிறார்கள்.    ஆனால் சங்கீதா - கிரிஷ் என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

என்கிற துக்கடாக்கள், திமிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.






நன்றி நக்கீரன்


Dec 12, 2011

சீனா ராணுவதளம் இந்திய பெருங்கடலில் அமைக்கிறது இந்திய கடற்படை கவலை! ( காணொளி)


இந்திய பெருங்கடலின் ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ராணுவ தளத்தை அமைக்க இருப்பதாக சீனா அறிக்கை விடுத்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பினால் இந்தியா பெருங்கவலை அடைந்துள்ளது. கண்காணித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவில் தங்கள் நாட்டின் ரணுவத் தளத்தை அமைப்பதால், இந்தியாவை சீனா உளவு பார்ப்பதற்கும் இது வசதியாகி வடும் என்று இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது. 

Dec 4, 2011

ஒஸ்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கலாசலா பாடல் (காணொளி )



ஒஸ்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கலாசலா பாடல் வெளியான பின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குத்துப் பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை டி.ராஜேந்தரும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பின்னணி பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு பிரபல இந்தி நடிகையான மல்லிகா ஷெராவத் நடனமாடியுள்ளார்.