Dec 6, 2011

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க தீக்குளித்த கூடலூர் வாலிபர்.செல்லப்பாண்டி



முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கம்பம் பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கேரள அரசை கண்டித்து கூடலூரில் மறியல் போராட்டம் நடந்தபோது கேரள முதல்- அமைச்சர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்- அமைச்சர் அச்சுதானந்தன் ஆகியோரது கொடும்பாவியை கொளுத்தினர்.


ஏராளமானோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூடலூரை சேர்ந்த வாலிபர் செல்லப்பாண்டி (வயது19) திடீரென மண்எண்ணை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பக்கத்தில் நின்ற போலீசாரும், பொது மக்களும் தீயை அணைத்து செல்லப்பாண்டியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென் றனர்.

இடது கையில் தீக்காயங்களுடன் செல்லப்பாண்டி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரம் முல்லை பெரியாறு அணையை காக்கவும், தமிழர்களின் உரிமையை மீட்கவும் உயிர் தியாகம் செய்வதற்காக உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தேன்.

கேரள எல்லை பகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ எனது உயிர் தியாகம் உதவும் என்று நம்பினேன் என்றார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் செல்லப்பாண்டிக்கு 20 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்னனர்.

2 comments:

Unknown said...

This is really stupid thing.............if you dont have guts to fight...........then what will happedn if you dead.

HOTLINKSIN.COM said...

களத்தில் இறங்கி போராடுவது ஒன்றுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும். அதை விட்டுவிட்டு தீக்குளிப்பது சரியானது அல்ல...