Dec 10, 2011

ராணுவ பலம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!


சீனா தனது ராணுவ பலத்தை மறைமுகமாக வெளிப்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறுகையில், "சீனாவுக்கு அதன் ராணுவ பலத்தை அதிகரிக்க முழு உரிமை உள்ளது. ஆனால், அது முழுமையான வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். 


சீனாவுடன் தொடர்ந்து ராணுவ உறவை வலுப்படுத்த அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது. சீனாவின் ராணுவ எழுச்சியானது அந்த நாட்டுக்கும், அந்த பிராந்தியத்துக்கும் நல்லது என நம்புகிறோம்," என்றார்.

உலக அளவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் சீனா, ராணுவ பலத்தையும் அதிகரித்து வருகிறது.

கடற்படையில் அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்துமாறு அந்த நாட்டு கடற்படை அதிகாரிகளை அதிபர் ஹூ ஜிண்டாவோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் சூழலில் தான், ராணுவ பலத்தை அதிகரிப்பதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

No comments: