Dec 10, 2011

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் : கோயில்களில் சிறப்பு பூஜை!


இன்று, இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணி நேரம் தெரியும் என்றும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை காணலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்று மாலை 6 .16 மணி முதல் இரவு 9 .48 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என்று கூறிய விஞ்ஞானிகள், சரியாக இரவு 8 மணி ஒரு நிமிடத்தின் போது, முழு சந்திர கிரகணத்தையும் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திரகிரகணம் தொடங்கி, முடியும் வரை, கிரகண முழுவதையும் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் ஆப்ரிக்கா நாடுகளில் கிரகணம் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இநதியாவில் மட்டும் சந்திரகிரணகத்தின் அனைத்துக் கோணங்களையும் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சந்திர கிரகணத்தை பார்க்க விரும்பும் பொதுமக்களுக்கு, வசதியாக டிசம்பர் 10-ம் தேதி பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

முழு விரதம் கடைப்பிடிப்பது நல்லது

கிரகணத்தன்று இரவு 9 மணிக்கு பிறகு முழு விரதம் கடைப்பிடிப்பது நல்லது. இரவு 10 மணிக்கு பிறகு குளித்துவிட்டு பூஜை செய்து சாப்பிடுவது சிறந்தது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பழம் சாப்பிடலாம். வீடுகளில் மாலை 5.30 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபம் அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மதியம் 3 மணிக்கு பின் வெளியே போகக் கூடாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

சந்திர கிரகணத்தையொட்டி இன்று பகலில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோயிலில் நாளை சிறப்பு பூஜைகள்

காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் உள்ளிட்டவை ஏற்படும் போது, பெரும்பாலான கோவில்கள் மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில், இன்று சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதனையடுத்து பல கோயில்களில் இன்று பூஜைகள் நடத்தப்பட உள்ளன.

No comments: